Wednesday, May 8, 2024

அமெரிக்க கிறிக்கெற் அணியில் இந்திய வீரர்


 ரி20  உலகக்கிண்ண கிறிக்கெற் தொடரில்  அமெரிக்க அணியில்  அகமதாபாத்தில் பிறந்த   இடது கை சுழற்பந்து வீச்சாளர் நிசார்க் படேல் [36] இடம் பிடித்துள்ளார்.

2003 இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்வதற்கு முன்பு இந்தியாவில் தனது பள்ளிப்படிப்பை முடித்த நிசார்க், மருந்து அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் முழுநேர வேலை செய்கிறார்.

ஜூன் 1‍ம் திக‌தி கனடாவுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் அமெரிக்கா தனது ரி20 உலகக் கோப்பையில் அறிமுகமாகிறது.அமெரிக்காவில்  பெரிய கிரிக்கெட்  போட்டி  நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்,  028 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாக இருப்பதால், உள்ளூர்வாசிகள் தங்களுக்கு மிகக் குறைவாகத் தெரிந்த விளையாட்டிற்கு எவ்வாறு ரசிக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டி உள்ளது.

No comments: