மூன்றாவது
முறையாக தான் பிரதமராவதை
வெளிநாட்டுகள் சில விரும்பவில்லை என மோடி குற்றம்
சாட்டினார்.
அமெரிக்கா,பாகிஸ்தான்,சீனா ஆகிய நாடுகள் மீது
சந்தேகம் ஏற்பட்டது. ராகுல் பிரதமராவதை பாகிஸ்தான் விரும்புவதாக மோடி குற்றம் சாட்டினார். ஆனால், பிரதமர்
பதவிப் போட்டியில் ராகுல் இல்லை எனப்தை மோடி நன்கு அறிவார். இந்தியாவின்
பரம வைரியான பாகிஸ்தானுக்கு எதிரான வாக்குக்கு மோடி வைத்த குறி அது என்பது வெளிப்படையானது.
இந்தியத் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது. தன்னைப் பதவியில் இருந்து அகற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது என மோடி வெளிப்படையாகக்
கூறவில்லை. மோடியின் நட்பு நாடான ரஷ்யா கூறுவதால், அது மோடியின் குரலாகக்
கருத வேண்டி உள்ளது. உலக நாடுகள் ரஷ்யாவை ஒதுக்கு
வைத்துள்ள நிலையில், அந்த
நாட்டுடன் மோடி
நட்புறவாக இருக்கிறார்.
மத சுதந்திர உரிமைகளை
இந்தியா மீறுவதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் பொதுத் தேர்தலின் போது நாட்டை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
மத சுதந்திரத்தை மீறுவதாகக்
கூறப்படும் இந்தியாவை விமர்சித்த அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு அமைப்பின் அறிக்கையைத் தொடர்ந்து, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவாவின் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ்
கமிஷனின் (USCIRF) வெளியிட்ட அறிக்கை, அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தியாவை "குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு" என்று முத்திரை குத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.
'பாரதீய ஜனதா அரசு பாரபட்சமான தேசியவாத கொள்கைகளை வலுப்படுத்துவதாக USCIRF அறிக்கை குற்றம் சாட்டியது.
கூடுதலாக, மதமாற்றம் மற்றும் பசுக்கொலைக்கு எதிரான சட்டங்கள், அத்துடன் சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டம், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் குடியுரிமை (திருத்தம்) சட்டம் ஆகியவை இன்னும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டது.
"இந்தியாவில் நடைபெற்று வரும் பொதுத் தேர்தலை சிக்கலாக்கும் வகையில், உள்நாட்டு அரசியல் சூழ்நிலையை சீர்குலைக்கும் நோக்கமே இதற்குக் காரணம்" என்று ரஷ்யாவின் ஜகரோவா சுட்டிக்காட்டினார்.
மத சுதந்திரம் மீறப்பட்டதாகக்
கூறப்படும் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுக்கிறது
இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைப்பு இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் தலையிட முயன்றதாகவும் தவறான தகவல்களை பரப்புவதாகவும் குற்றம் சாட்டியது.
அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "உலகின் மிகப்பெரிய ஜனநாயகப் பயிற்சியை சீர்குலைக்கும்" அவர்களின் முயற்சிகள் வெற்றியடையாது" என்று வலியுறுத்தி, அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் ஒரு சார்புடைய அமைப்பு என்று முத்திரை குத்தினார்.
காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் மீதான படுகொலை முயற்சியில் இந்திய அதிகாரியின் தொடர்பு பற்றிய கூற்றுகளையும் அமைச்சகம் நிராகரித்தது.
தெலுங்கானாவில் மும்முனைப் போட்டி
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் 4-வது கட்ட வாக்களிப்பு தெலுங்கானா மாநிலத்தின் 17 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 13ஆம் திகதி நடைபெற
உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பிஆர்எஸ், மத்தியில் ஆளும் பாஜக என மூன்று கட்சிகளுமே
வலுவாக மோதுவதால் மும்முனைப் போட்டி பலமாக இருக்கிறது.
இந்தியாவின் தென் பகுதியில் வெற்றி
பெற வேண்டும் என்ற ம்னைப்பில் பாரதீய ஜனதா தேர்தல் பிரசாரம் செய்தது.மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாரதீய
ஜனதா தெலுங்கானாவில் சாதிக்க முயற்சிக்கிறது. ஆனால், ஆளும் கட்சியான காங்கிரஸ் அதற்கு இடம் கொடுக்காது தேர்தல் வியூகத்தை வகுத்துள்ளது. தெலுங்கானாவின்
எதிர்க் கட்சியான பிஆர் எஸ்ஸும் பாரதீய ஜனதாவை எதிர்ப்பதில் மும்முரமாக உள்ளது.
இரண்டு பக்கத்தாலும் அடி வாங்கும் பாரதீய
ஜனதா வெற்றிக்காகப் போராடுகிறது.
தெலுங்கானாவில்
17 தொகுதிகள் உள்ளன
2019-ம் ஆண்டு அப்போதைய
டிஆர்எஸ் (தற்போதைய பிஆர்எஸ் கட்சி) 9 தொகுதிகளிலும், பாரதீய ஜனதா 4தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சிக்கு வழக்கம் போல ஹைதராபாத் தொகுதியைக் கைப்பற்றியது. தெலுங்கானா
சட்டசபை தேர்தலில் வென்று முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது காங்கிரஸ். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக
இடங்களில் வெற்றி
பெற வேண்டிய கட்டாயம்
இருக்கிறது. இழந்த செல்வாக்கை மீட்க பிஆர்எஸ் கட்சி போராடுகிறது. தென்னிந்தியாவில் வலுவாக காலூன்ற முடியும் என பாரதீய ஜனதா
நம்புகிற மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று.
இதனால் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக என மூன்று கட்சிகளிடையே
கடுமையான மும்முனைப் போட்டி தெலுங்கானாவில் நிலவுகிறது.
பத்து ஆண்டுகால
முன்னாள் முதல்வர்
சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் அரசின் ஊழல்களை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ்.
பதிலடியாக போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
முஸ்லிம் வாக்காளர்களை அதிகமாகக் கொண்ட ஹைதராபாத் தொகுதி மஜ்லிஸ் கட்சியின் கோட்டை இது. 1984-ம் ஆண்டு முதல்
2004-ம் ஆண்டு வரை சுல்தான் சலாவுதீன் ஓவைசி இத்தொகுதி எம்.பி.யாக தொடர்ந்து
வெற்றி பெற்றார். 2004-ம் ஆண்டு முதல்வர்
சுல்தான் சலாவுதீன் ஓவைசியின் மகன் ஓவைசி எம்பியாக இருந்து வருகிறார். தற்போது இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக நடனக் கலைஞரும் தொழில் முனைவோருமான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார். பிஆர்எஸ் வேட்பாளராக கட்டம் சீனிவாச யாதவ், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முகமது வலியுல்லா சமீர் போட்டியிடுகின்றனர்.
ஆந்திராவின் நட்சத்திர வேட்பாளர்கள்
ஆந்திராவின் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13ஆம் திகதி ஒரே கட்டமாக
தேர்தல் நடைபெற உள்ளது. 25 நாடாளுமன்றத்
தொகுதிகளுக்கும் அன்றைய தினமே தேர்தல் நடைபெறுகிறது.
ஆந்திரா சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் விஐபி வேட்பாளர்களாகக் களம் இறங்குகின்றனர்.
ஆந்திராவில் ஜெகன்
மோகன் ரெட்டி முதல்வராக பதவி
வகிக்கிறார். ஆந்திரா
சட்டசபை தேர்தல் களத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம்- ஜனசேனா பாரதீய ஜனதா, காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி என மும்முனைப் போட்டி
நிலவுகிறது. ஆந்திரா தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் , தெலுங்கு
தேசம் கட்சிக்கும்
இடையேதா கடும் போட்டி. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட வெல்லாத காங்கிரஸ் இம்முறை ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆந்திராவின் புலிவெந்துலவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் தெலுங்குதேசம் கட்சியின் பிடெக் ரவி மோதுகிறார். புலிவெந்துல சட்டசபை தொகுதியை உள்ளடக்கிய கடப்பா லோக்சபா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா களம் காண்கிறார். ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக துருவ குமார் ரெட்டியை புலிவெந்துலவில் களமிறக்கியுள்ளது காங்கிரஸ்.
தெலுங்குதேசம்
தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு மீண்டும் குப்பம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். 1989-ம் ஆண்டு முதல்
தொடர்ந்து குப்பத்தை கோட்டையாக வைத்திருக்கிறார் நாயுடு. இத்தொகுதியில் இளைஞரான பரத்தை வேட்பாளராக களமிறக்கியிருக்கிறது ஜெகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ். அவுல கோவிந்தராஜுலுவை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.
நடிகரும்
ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண், பிதாபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். காக்கிநாடா எம்பி
வங்க கீதாவை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் களமிறக்கியிருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளராக மாடேபள்ளி சத்யநாராயண ராவ் போட்டியிடுகிறார்.
சந்திரபாபு
நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். 2019-ம் ஆண்டு தேர்தலில்
தோற்ற நாரா லோகேஷ், மல்காஜ்கிரி சட்டசபை தொகுதியில் களம் காண்கிறார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் முருகுடு லாவண்யா, சிபிஎம்-ன் ஜோன்னா சிவ
சங்கர் ஆகியோரும் அங்கு போட்டியிடுகின்றனர்.
ஆந்திரா அமைச்சரும் நடிகையுமான ரோஜா, நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி வேட்பாளராக காலி பானு பிரகாஷ் களம் காண்கிறார். நகரியில் ஹட்ரிக் வெற்றியை அறுவடை செய்ய போராடுகிறார் நடிகை ரோஜா.
குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதோத்தில் உள்ள 93 தொகுதிகளில் 3 ஆம்
கட்ட தேர்தல் மே 7 ஆம்திகதி நடைபெற்றது. குஜராத்தில் 25 தொகுதிகள், கர்நாடகத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, அஸ்ஸாம் 4, கோவாவில் 2, மேற்கு வங்கத்தில் 4, தாத்ரா-நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகள் என மொத்தம் 93 தொகுதிகளுக்கு
தேர்தல் நடந்தது.
பிரதமர் மோடி குஜராத்தில்
தனது வாக்கைப் பதிவு செய்தார். காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காலை புறப்பட்ட பிரதமர், அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அதே பள்ளியில் வாக்கு, அவரும் அங்கேயே வாக்கு பதிவு செய்தார். வாக்குப்பதிவிற்கு முன்னர் பிரதமர் மோடி தனது இணையதள பக்கத்தில், இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் அனவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். வாக்காளர்களின் தீவிர பங்கேற்பு நிச்சயமாக தேர்தலை விறுவிறுப்பாக மாற்றும் என்று தெரிவித்திருந்தார்.
மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1ம்திகதி மீதமுள்ள நான்கு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் திகதி வாக்குகள் என்னப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமணி
No comments:
Post a Comment