Wednesday, May 8, 2024

அட்டகாச ஆட்ட நாயகன் ஜடேஜா

 தரம்சாலா நகரில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஓட்டங்களால் வெற்றி பெற்ற சென்னை   புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி  பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.  3 வருடங்கள் கழித்து 5 தொடர் தோல்விகளுக்கு பின் பஞ்சாப்பை தோற்கடித்து சென்னை வெற்றி கண்டது. இந்த வெற்றிக்கு  43 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை  வீழ்த்திய    ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.     ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா 16வது முறையாக ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இதன்   ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற ஜாம்பவான் டொனியின் வாழ்நாள் சாதனையை உடைத்த அவர் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.  1. ரவீந்திர ஜடேஜா : 16*

 2. எம்எஸ் டோனி : 15

 3. சுரேஷ் ரெய்னா : 12

 4. ருதுராஜ் கைக்வாட் : 11

 5. மைக் ஹசி : 10 -

 2008 முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் டோனி 17 வருடங்களில் 15 ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். ஆனால் 2012இல் சென்னை அணிக்காக விளையாடத் துவங்கிய ஜடேஜா தற்போது 13வது வருடத்திலேயே டோனியின் ஆல் டைம் சாதனையை உடைத்து சிஎஸ்கே அணியின் புதிய நாயகனாக உருவெடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக முறை ஒரு போட்டியில் 40+ ஓட்டங்ன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஷேன் வாட்சன், யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனையையும் ரவீந்திர ஜடேஜா சமன் செய்துள்ளார். இந்த 3 பேருமே ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 3 முறை ஒரு போட்டியில் 40+ ஓட்டங்ள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments: