சர்ச்சைக்குரியதும், போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதுமான 'என்ஹான்ஸ்டு கேம்ஸ்' போட்டியின் நிதிப் பந்தயத்தை கணிசமாக அதிகரிக்கும் வகையில், தங்களது 2027 விளையாட்டு அட்டவணையில் உசேன் போல்ட்டின் 100 மீற்றர் உலக சாதனையை முறியடிக்கும் எந்தவொரு ஆணுக்கும் 10 மில்லியன் டொலர் போனஸ் வழங்கப்படும் என்று அதன் அமைப்பாளர்கள் புதன்கிழமை அறிவித்தனர் .
ஆடவர் 100 மீற்றர் இறுதிப்
போட்டியின் வெற்றியாளர், 2009-ல் பெர்லினில் ஜமைக்கா வீரர் போல்ட் பதிவுசெய்த 9.58
வினாடிகள் என்ற நேரத்தை விட வேகமாக ஓடினால், அவருக்குப் பரிசு வழங்கப்படும் என அரிவிகப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, ஞாயிற்றுக்கிழமை
ரிசார்ட்ஸ் வேர்ல்ட் லாஸ் வேகாஸில் நடைபெற்ற முதல் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளைத்
தொடர்ந்து வெளியிடப்பட்டது. இதில், விளையாட்டு வீரர்கள் ஒரு நீச்சல் "உலக சாதனையையும்"
, 21 தனிப்பட்ட சிறந்த நேரங்களையும் பதிவு செய்தனர்.
கிரேக்க நீச்சல் வீரர்
கிறிஸ்டியன் கோலோமீவ் 50 மீற்றர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் 20.81 வினாடிகளில் வெற்றி
பெற்று, மொத்தமாக 1.5 மில்லியன் டொலரைப் பெற்றார்.
இதை அந்த நிறுவனம், நீச்சல் வரலாற்றில் ஒரே நபருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத்தொகை
என்று வர்ணித்தது.
போட்டியாளர்களின் முடிவுகள்
உலகளாவிய விளையாட்டு அதிகாரிகளால் சட்டவிரோதமானவை எனக் கருதப்படுவதால், அவருடைய நேரம்
அதிகாரப்பூர்வ சாதனைப் புத்தகங்களில் இடம்பெறாது.
மேம்படுத்தப்பட்ட விளையாட்டுப்
போட்டிகள், உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையால் (WADA) தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும்
விளையாட்டு வீரர்களை அனுமதிக்கின்றன; அதே நேரத்தில், 2010-ல் தடைசெய்யப்பட்ட பாலியூரிதேன்
“சூப்பர்-சூட்களை” அணியவும் நீச்சல் வீரர்களுக்கு
அனுமதி உண்டு.
தலைமை நிர்வாகி மாக்சிமிலியன்
மார்ட்டின், பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்த அறிமுக நிகழ்வானது “மருத்துவ
மேற்பார்வையிடப்பட்ட மேம்பாட்டு நெறிமுறைகளின்”
தாக்கத்தைக் காட்டியதாகவும், இதில் 13 தடகள வீரர்கள் 21 புதிய தனிப்பட்ட சிறந்த சாதனைகளைப்
படைத்ததாகவும் கூறினார்.
போட்டியாளர்கள் அனைவரும்
மருத்துவப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்று, நலமுடன் நிகழ்விலிருந்து வெளியேறியதாக நிறுவனம்
தெரிவித்தது.

No comments:
Post a Comment