அமெரிக்கா, மெக்சிகோ , கனடா ஆகியவை இணைந்து நடத்தும் உலகக் கிண்ணப் போட்டி நெருங்கி வரும் நிலையில் ட எதிர்பாராத காயங்களால் பாதிக்கப்பட்ட சில வீரர்கள், மீண்டும் உடற்தகுதி பெற ஒரு பதற்றமான போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். தங்கள் நம்பிக்கையை திடீரென முடிவுக்குக் கொண்டுவந்த மனதை நொறுக்கும் காயங்களால், இந்தப் போட்டிக்குச் செல்ல முடியாது என்பதை சில வீரர்கள் அறிந்துளனர்.நிச்சயமாகப் போட்டியிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்கள் பற்றிய ஒரு தொகுப்பி இது.
ஹியூகோ எகிடிகே
பிரான்ஸ் நாட்டைச்
சேர்ந்த
ஹியூகோ
எகிடிகேவின்
கணுக்கால்
தசைநார்
காயத்தால்,
அவர்
உலகக்
கிண்ணப்
போட்டி, அடுத்த பிரீமியர்
லீக்
பருவத்தின்
ஒரு
பகுதியைத்
தவறவிடுவார்.
லிவர்பூல் அணியின்
இந்த
முன்கள
வீரர்,
கடந்த
ஏப்ரல்
மாதம்
பாரிஸ்
செயிண்ட்-ஜெர்மைன்
அணிக்கு
எதிரான
போட்டியில்
தனது
கணுக்கால்
தசைநாரில்
ஏற்பட்ட
கிழிசல்
காரணமாக,
2026-ஆம்
ஆண்டின்
பிற்பகுதி
வரை
களத்தில்
இருந்து
விலகியிருப்பார்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்
காரணமாக
அவர்
உலகக் கிண்ணத்தைத் தவறவிடுவார்.
22 வயதான எகிடிகே, ஆன்ஃபீல்டில்
நடந்த
காலிறுதிப்
போட்டியின்
இரண்டாம்
கட்ட
ஆட்டத்தின்போது,
கண்ணீருடன்
ஸ்ட்ரெச்சரில்
மைதானத்தை
விட்டு
வெளியேறினார்.
"துரதிர்ஷ்டவசமாக, [எகிடிகேவின்]
காயத்தின்
தீவிரத்தன்மை,
அவரை
லிவர்பூல்
அணியுடன்
இந்தப்
பருவத்தை
முடிக்கவும்,
உலகக்
கிண்ணப்
போட்டியில்
பங்கேற்கவும்
விடாது,"
என்று
பிரான்ஸ்
அணியின்
பயிற்சியாளர்
டிடியர்
டெஷாம்ப்ஸ்
FFF அறிக்கையில்
தெரிவித்தார்.
காயமடைவதற்கு முன்பு, எகிடிகே கடந்த மார்ச் மாதம் பிறேஸிலுக்கு எதிரான பிரான்ஸ் அணியின் நட்புப் போட்டியில் விளையாடியிருந்தார். அந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.
ரோட்ரிகோ
ரோட்ரிகோவின்
வலது
முழங்காலில் ACL,மெனிஸ்கஸ் கிழிந்ததால், பிறேஸில் வீரரான
அவரது
உலகக் கிண்ண வாய்ப்புகள் முடிவுக்கு
வந்துள்ளன.
மார்ச் 2 ஆம்
ஆம்
திகதி
கெடாஃபே
அணிக்கு
எதிரான
போட்டியில்
1-0 என்ற
கோல்
கணக்கில்
தோல்வியடைந்தபோது,
ரியல்
மாட்ரிட்
நட்சத்திர
வீரரான
இவர் காயமடைந்தார்.
கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் பிறேஸில் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் அவர் பங்கேற்றார், அவற்றில் ஒன்றில் தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால், காயம் குறித்த செய்தியைத் தொடர்ந்து அவர் நீண்ட காலம் விளையாடமாட்டார். இந்தத் தருணத்தை அவர் சமூக ஊடகங்களில் "என் வாழ்வின் மிக மோசமான நாட்களில் ஒன்று" என்று விவரித்துள்ளார்.
சாவி சைமன்ஸ்
முழங்கால் காயம்
காரணமாக
டோட்டன்ஹாம்
அணியின் பின்கள வீரர்
சாவி
சைமன்ஸ்
ஸ்ட்ரெச்சரில்
வெளியேற்றப்பட்டார்.
வோல்வ்ஸ் அணிக்கு
எதிரான
டோட்டன்ஹாமின்
1-0 பிரீமியர்
லீக்
வெற்றியின்
போது
எதிர்பாராத
நேரத்தில்
ஏற்பட்ட
காயம்,
சாவி
சைமன்ஸின்
இந்த
சீசனை
முடிவுக்குக்
கொண்டுவந்துள்ளது.
ஏப்ரல்
25 ஆம் திகதி போட்டி ஆட்டம் தொடங்கி
ஒரு
மணி
நேரத்திற்குச்
சற்று
முன்பு,
அந்த
டச்சு
வீரர்
கீழே
விழுந்தார்.
அவர்
தனது
முழங்காலைப்
பிடித்தபடி
ஸ்ட்ரெச்சரில்
வெளியேற்றப்பட்டார்.
அவருக்கு
முழங்காலின்
முன்புற
சிலுவைத்
தசைநார்
கிழிந்துள்ளது.
உலகக் கிண்ணத்தில் நெதர்லாந்து அணிக்காக
விளையாடும்
தனது
வாய்ப்பு
"பறிக்கப்பட்டுவிட்டது"
என்று
சைமன்ஸ்
ஒரு
இன்ஸ்டாகிராம்
பதிவில்
உறுதிப்படுத்தினார்.
அதே
நேரத்தில்,
அவருக்கு
அறுவை
சிகிச்சை
செய்யப்படும்
என்று
டோட்டன்ஹாம்
அணி
கூறியது.
அவர் நெதர்லாந்து அணிக்காக 34 போட்டிகளில் விளையாடியுள்ளார், காயமடைவதற்கு முன்பு அவர்களின் சமீபத்திய நட்புப் போட்டிகளிலும் பங்கேற்றார்.
செர்ஜ் க்னாப்ரி
வலது தொடையில்
ஏற்பட்ட
தொடை
உள்
தசை
காயத்தைத்
தொடர்ந்து,
பேயர்ன்
முனிச்
அணியின்
விங்கர்
செர்ஜ்
க்னாப்ரி,
ஜேர்மனிய
அணியுடன் இணையமாட்டார்.
30 வயதான அவர், தனது
"உலகக் கிண்ணக் கனவு
முடிந்துவிட்டது"
என்று
இன்ஸ்டாகிராமில்
தெரிவித்திருந்தார்.
ஆனால்,
அவர்
"நீண்ட
காலம்
விளையாடமாட்டார்"
என்றும்,
அவர்
எப்போது
திரும்புவார்
என்பது
தற்போது
தெரியவில்லை
என்றும்
அவரது
கிளப்
கூறியுள்ளது.
க்னாப்ரி ஜேர்மனிக்காக 59 போட்டிகளில் விளையாடியுள்ளார், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டாரில் தனது முதல் இறுதிப் போட்டியில் விளையாடினார். அவர் ஜேர்மனியின் ஆறு தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் விளையாடி, இந்த பருவத்தில் ஜேர்மனியின் உயர்மட்ட லீக்கில் எட்டு கோல்களை அடித்தார்.
தகுமி மினாமினோ
ஜப்பான் சர்வதேச
வீரர் தகுமி மினாமினோ
கடந்த
டிசம்பரில்
தனது
இடது
முழங்காலில்
உள்ள
முன்புற
சிலுவை
தசைநாரைக்
கிழித்துக்கொண்டார்,
இது
ஜப்பானுக்கு
ஒரு
பெரும்
பின்னடைவாகும்.
மொனாக்கோ அணியின் நடுக்கள வீரரான மினாமினோ, ஜப்பான் உலகக் கிண்ணத்துக்குத் தகுதிபெற நான்கு கோல்களை அடித்தார். லிவர்பூலின் முன்னாள் வீரரான இவர், 73 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று 26 கோல்களை அடித்துள்ளார். கடந்த உலகக் கிண்ணப் போட்டியிலும் விளையாடினார்.
சாமு அகேஹோவா
பிப்ரவரியில்
முழங்கால்
தசைநார்
காயத்தால்
பாதிக்கப்பட்ட
முன்கள
வீரர்
சாமு
அகெஹோவா ஸ்பெயின் அணியில்
இருந்து வெளியேற்றப்பட்டார்.
அகெஹோவா ஸ்பெயின்
அணிக்காக
நான்கு உலகக்கிண்ணப் போடிகளில்
விளையாடியுள்ளார்.
சிலம்பு
31/526






No comments:
Post a Comment