Saturday, May 30, 2026

நட்பு போட்டிகளில் நெய்மர் விளையாட மாட்டர்


  வலது கெண்டைக்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வரும் நெய்மர், உலகக்கிண்ணப்  போட்டிக்கு முந்தைய  இரண்டு நட்பு ஆட்டங்களைத் தவறவிடுவார்.  ஜூன் 13 ஆம் திகதி  நியூ ஜெர்சியில் மொராக்கோவுக்கு எதிராக நடைபெறும் குரூப் சி பிரிவின் தொடக்க ஆட்டத்தில் அவர் பங்கேற்பாரா என்பதும் சந்தேகமாக உள்ளது.

"எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் இரண்டாம் நிலை தசைக்காயம் கண்டறியப்பட்டுள்ளது. அவர் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் விளையாடத் தயாராகிவிடுவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று ரியோ டி ஜெனிரோவுக்கு வெளியே அமைந்துள்ள பிறேஸிலின் போட்டிக்கு முந்தைய பயிற்சி மையத்தில் லாஸ்மர் கூறினார்.

தனது சிறுவயது கிளப்பான சாண்டோஸுக்காக விளையாடும் நெய்மர், 2023-ஆம் ஆண்டு முதல் தேசிய அணிக்காக விளையாடவில்லை. மேலும், தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியின் எதிர்பாராத தேர்வாக அவர் இருந்தார்.

  

No comments: