Tuesday, May 19, 2026

ஜேர்மனி அணியில் மீண்டும் மானுவல் நியூயர்

  உலகக்  கிண்ண உதைப்ந்தாட்ட அணியில் நட்சத்திர கோல்கீப்பர்  மானுவல் நியூயர் தேசிய அணிக்குத் திரும்புவார் என  ஜேர்மனிய பத்திரிகையான 'கிக்கர்' தெரிவித்துள்ளது.

போட்டிக்கு முன்னதாக ஜேர்மனி பயிற்சியாளர் ஜூலியன் நாகல்ஸ்மான் சமர்ப்பித்த 55 வீரர்களைக் கொண்ட பூர்வாங்கப் பட்டியலில் நியூயர் இடம்பெற்றுள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

  யூரோ 2024 போட்டிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நியூயர் அறிவித்திருந்த போதிலும்,  அவரை மீண்டும் அணிக்கு அழைப்பது குறித்து தற்போது தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக 'கிக்கர்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

  உலகக்  கிண்ண ஜேர்மனியின் முதல்நிலை கோல்கீப்பராக ஹாஃபன்ஹெய்ம், கோல்கீப்பர் ஆலிவர் பாமன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்,   ஸ்டட்கார்ட்டின் அலெக்சாண்டர் நியூபெல் மாற்றுத் தேர்வாகக் கருதப்படுகிறார்.

பாமன், நியூபெல், ஆக்ஸ்பர்க் கோல்கீப்பர் ஃபின் டாஹ்மென், பேயர்ன் மியூனிக்கின் ஜோனாஸ் அர்பிக் ,நியூயர் ஆகியோர் அனைவரும் பரிசீலனையில் இருப்பதாக கிக்கர் செய்தி வெளியிட்டது.

 

    

No comments: