Wednesday, May 27, 2026

ஈரான் அணி மெக்ஸிகோவில் தங்குவதற்கு அனுமதி


 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் ஈரானிய தேசிய உதைப்ந்தாட்ட அணி மெக்சிகோவில் தங்குவதற்குத் தனது அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகவும் , ஆனால் அந்த அணியை உபசரிக்க அமெரிக்கா விரும்பவில்லை என்றும் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம் திங்களன்று தெரிவித்தார்.

அந்த அணி தனது குழுநிலைப் போட்டிகளை அமெரிக்காவிலேயே தொடர்ந்து விளையாடும். ஆனால், அதன் தளம் கலிபோர்னியாவின் சான் டியாகோவிற்குச் சற்று தெற்கே உள்ள மெக்சிகோவின் டிஜுவானாவிற்கு மாற்றப்பட்டுள்ளது . இந்த மாற்றத்தை ஈரானின் உதைப்ந்தாட்ட கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்ததுடன், விளையாட்டின் நிர்வாக அமைப்பான பீபாவும் இதை உறுதிப்படுத்தியது.

ஈரான் தனது மூன்று குழுப் போட்டிகளையும் அங்கு அமெரிகாவில் விளையாடும். போட்டித்தொடர் முழுவதும் ஈரான் அணி நாட்டில் தங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று கூறியதைத் தொடர்ந்து, பீபா தனது அரசாங்கத்தை அணுகியதாக ஷெயின்பாம் கூறினார் .

ஈரானிய தேசிய அணி அமெரிக்காவில் இரவு தங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை,” என்று ஷெயின்பாம் செய்தியாளர்களிடம் கூறினார். பின்னர்அவர்கள் மெக்சிகோவில் இரவு தங்க முடியுமா?” என்று கேட்டதாக பீபா பிரதிநிதி ஒருவர்,அவர் கூறினார்.

அதற்கு நாங்கள், ‘ஆம், எந்தப் பிரச்சினையும் இல்லை. அதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லைஎன்று கூறினோம்,” என்றார் அவர்

No comments: