எகிப்து தலைமைப் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன், தனது இரண்டு மனைவிகளுக்கு இடையே நடந்ததாகக் கூறப்படும் வாக்குவாதத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, போர்டோ மெரினாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மயங்கி விழுந்தார்.
ஹசனின்
முதல் மனைவி ஹொவைடா எல்-கர்பாவி , இரண்டாவது மனைவி தீனா முஸ்தபா ஆகியோர் ஹோட்டல் கஃபே
ஒன்றில் கைகலப்பில் ஈடுபட்டதாகவும், இதில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச்
சம்பவம் ஹசனின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை அவரது
இரண்டாவது மனைவியின் வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்.
அல்
அரபியாவின் அறிக்கையின்படி, எகிப்து தேசிய
உதைப்ந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன், போர்டோ மெரினாவில்
உள்ள ஒரு ஹோட்டலில் தனது இரண்டு மனைவிகளுக்கு இடையே நடந்த வன்முறை மோதலின் நடுவில்
சிக்கியதைத் தொடர்ந்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
ஹோட்டல்
சம்பவத்தைத் தொடர்ந்து, ஹசன் தனது முதல் மனைவி ஹொவைதா எல்-கர்பாவியை விவாகரத்து செய்ய
முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
ஹசனுக்கும்
ஹொவைதாவுக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்தத் தம்பதியினர் 2022-ல் பிரிந்திருந்தாலும்,
சுமார் பத்து நாட்களுக்குள் மீண்டும் சேர்ந்துவிட்டனர். ஹசன் 2015-ல் தீனா முஸ்தஃபாவைத்
திருமணம் செய்துகொண்டார்.

No comments:
Post a Comment