Saturday, October 29, 2022

பிலிப்ஸ் சதம் நியூஸிலாந்து  வெற்றி

8-வது 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறதுநியூஸிலாந்து- இலங்கை அணிகள் மோதின. நியூஸிலாந்து  65  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.   நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக பின் ஆலென் மற்றும் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த அணியின் பின் ஆலென் , கான்வேஆகிய ஒருவரும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.ப்டன் வில்லியம்சன் 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்இதனால் அந்த அணி 3.6  ஓவர்களில்  மூன்று விக்கெற்களை இழந்து  15 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.     நான்காவது விக்கெற்ரில் இனைந்த  கிளென் பிலிப்ஸ்,டேரில் மிட்செல்  ஜோடிநியூஸிலாந்தை நிமிர்த்தியது. இவர்களி இருவரும் 64 பந்துகளில் 84  ஓட்டங்கள் எடுத்தனர். டார்ல் மிட்சேல் 22 (24) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜிம்மி நீசம் 5 (8) ஓட்டங்கலில் ஆட்டமிழந்தனர்.

இலங்கைக்கு சிம்ம சொப்பனமாக மாறிய கிளன் பிலிப்ஸ் நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்தி 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 104 (64) ஓட்டங்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ரி20 உலக கோப்பை வரலாற்றில் ஜாம்பவான் ப்ரண்டன் மெக்கலமுக்கு பின் (123 ஓட்டங்கள், பங்களாதேசத்துக்கு எதிராக, 2012இல்) சதமடித்த 2வது நியூசிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்த அவர் ஒட்டுமொத்தமாக ரி20 உலக கோப்பையில் சதமடித்த 10வது வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

மிட்சேல் சாட்னர் 11* (5) ஓட்டங்கள் எடுத்தார். நியூஸிலாந்து 20 ஓவரில்  7 விக்கெற்களை இழந்து 167 ஓட்டங்கள் எடுத்ததுஇலங்கை சார்பில் அதிகபட்சமாக கௌசன் ரஜித்தா 2 விக்கெட்களை எடுத்தார்.

  168 ஓட்டங்கள்   எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நிசாங்கா 0, குசல் மெண்டிஸ் 4, தனஞ்ஜெயா 0, அசலங்கா 4, கருரத்ணே  என விக்கெட்டுகளை போல்ட் வீழ்த்தினார்.

அதனால் 8/4 என தொடங்கி 24/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இலங்கைக்கு   பனுக்கா ராஜபக்சா அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 34 (22) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹஸரங்கா 4 (6) தீக்சனா 0 (3) என வெளியேற மறுபுறம் போராடிய ப்டன் சனாக்காவும் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 35 (32) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை முழுமையாக தாக்குப் பிடிக்க முடியாத இலங்கை 19.2 ஓவரில் சகல விக்கெட்களையும் இழந்து  102  ஓட்டங்கள் எடுத்தது.

 

 

No comments: