‘மோகமுள்’, ‘முகம்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘ராமானுஜன்’ போன்ற படங்களின் முலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயகுநர் ஞான சேகரன். பயோபிக் படங்களான ‘பாரதி’, ‘பெரியார்’, ‘ராமானுஜன்’ படங்கள் அவருக்குப் புகழ் சேர்த்தவை.
குட்வில் ஹன்டிங் (Goodwill Hunting) என்ற ஹாலிவுட் படம் பார்த்தேன்.
அந்தப் படத்துல ஒரு கதாபாத்திரம், இன்னொரு கதாபாத்திரம் கிட்ட “நீ என்ன பெரிய ராமானுஜன்னு
நினைப்பா?”ன்னு சொல்லுது. “உனக்கு என்ன பெரிய ஜீனியஸ்னு நினைப்பா..” அப்படிங்கிறதுக்குப்
பதிலா “நீ என்ன பெரிய ராமானுஜன்னு நினைப்பா?”ன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டுல பிறந்த ஒருத்தனைப்
பத்தி ஹாலிவுட்ல வசனம் இருக்கு. ராமானுஜன் பற்றி அமெரிக்காவுல ஒரு புத்தகம் வெளியாச்சு.
அதோட 15-வது பதிப்பு இப்போ வித்துகிட்டு இருக்கு. துதான் ராமானுஜர் படம் எடுக்க காரணமானது எனச் சொன்னார் ஞான சேகரன்
அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான கலைத்தன்மை கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு மாறுபட்ட விஷயத்தைப் பேசுவதாகவும் இருந்தது. அதன் உருவாக்கமும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டிருந்தது. சென்னையில் மத்திய அரசின் சார்பில் தணிக்கை அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்திலிருந்து, தான் இயக்கிய எல்லாப் படங்களையுமே தணிக்கை விதிகளை மீறாதவாறு எச்சரிக்கையோடு உருவாக்கினார்.
அதேபோல ஒரு தணிக்கை அதிகாரியாக அவரது அனுபவங்கள் சுவாரஸ்யம் நிறைந்தவை.
அப்போதெல்லாம் தமிழில் ஆண்டுக்கு 300 படங்களுக்குக் குறையாமல் வெளிவரும். அதனால் ஒரு
தணிக்கை அதிகாரியாக ஞான ராஜசேகரன் நிறையப் படங்களைப் பார்க்க வேண்டி இருந்தது. இயக்குநர்
மணி ரத்னம், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என பலருடன்
முரண்பட வென்டிய நிலை ஏற்பட்டது.
சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட ஞான சேகரன் திரைப்பட இயக்குநராக
வரவேண்டும் என்று இளம் வயதிலேயே கனவு கண்டவர்.அதற்காகவே அவர் திரைப்படக் கல்லூரியில்
சேர்ந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்ததுபோல
திரைப்படக் கல்லூரிப் பாடங்கள் இல்லாததால் ஏமாற்றமடைந்தார்.
அப்பாவின் விருப்பத்திற்கிணங்க
எம்.எஸ்சி., படித்து ஐஏ எஸ் ஆனார். கேரளத்தின் பணிச் சூழல் அவரது சினிமா ஆசைக்கு உரம்
இட்டது. அவரது சினிமா குறித்தான புரிதலுக்கு கேரள மாநிலத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின்
மேலாண்மை இயக்குநர் பதவி அவரைத் தேடி வந்தது. அவர் கேரள மாநிலத்தில் பணி புரிந்தார்.
திருச்சூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஞான ராஜசேகரன், கேரளத்தின் பல்வேறு துறைகளில் இயக்குநர்
மற்றும் செயலாளர் பதவிகளில் இருந்தவர். மத்திய அரசின் சார்பில் சென்னைத் திரைப்படத்
தணிக்கை அதிகாரியாகவும் பணிபுரிந்திருக்கிறார்
ஒரு
திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தபோது அவருக்குத் தனது ஆட்சிப் பணியிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டியதிருந்தது. பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இதுபோன்ற விடுப்புகள் வழக்கத்தில் இல்லை. ஆனாலும் அவரது கலை ஆர்வத்தைக் கணக்கில் கொண்டு அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது. கேரளாவாக இருந்ததால் அது சாத்தியமானது.
ஞான
ராஜசேகரனின் தலைமையிலான தணிக்கைக் குழு கமலின் ‘ஹே ராம்’ பட
தணிக்கையின்போது பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியது. இதனால் கமல் கடும் கோபமடைந்தார்.
‘ஹே
ராம்’ படத்தின் இறுதியில் மகாத்மா காந்தி கோட்சேயால் சுடப்படும் காட்சியில் காந்தி சுடப்பட்டதும் தரையிலிருந்து உயர எறியப்பட்டு கீழே போய் விழுவார். “என்ன இது... தேசப்பிதாவை இப்படியா காட்டுவது?” என்று தணிக்கைக் குழுவிலிருந்த ஒரு காங்கிரஸ்காரர் கேட்டார். “ஆட்டன்பரோ தனது ’காந்தி’ படத்தில் இதே காட்சியை எவ்வளவோ மேன்மையாகக் காட்டியிருக்கிறார். இதிலோ ஏதோவொரு மிருகத்தைச் சுடுவதுபோலக் கேவலமாகக் காட்டியிருக்கிறார்” என்று அவர் வேதனை தெரிவித்தார். ஆனால், “அந்தக் காட்சியை தணிக்கைக் குழு வெட்டச்சொல்ல முடியாது” என்று ஞான ராஜசேகரன் கூறினார்.
இந்த விவாதத்திற்கு பதில் சொன்ன கமல், "கோட்சே உயயோகித்த அதே போர் (Bore) உள்ள துப்பாக்கியைப் பல இடங்களில் தேடியலைந்து லண்டனில்தான் என்னால் வாங்க முடிந்தது. அந்தத் துப்பாக்கியால் ஷூட் செய்தால் நான் படத்தில் காட்டியபடிதான் சுடப்பட்டவர் உயரச்சென்று விழுவார். அதை யதார்த்தமாகக் காட்டியிருக்கிறேன்" என்றார். இயக்குநரின் விருப்ப உரிமை தொடர்பானது என்று கருதி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஞான ராஜசேகரன்.
தணிக்கை
செய்யும் படம் பற்றிய விபரம் அதிகாரிகளுக்குத்
தெரிவிக்கப்படுவதில்லை.
தணிக்கை அதிகாரிகள் வந்து விட்டார்கள். தலைவர் ஞான சேகரன் வந்ததும் ஒரு சிலர் அவரிடம் சென்று " தனது
படம் சென்சார் ஆகும்போது படக்காட்சி தொடங்குவதற்கு முன்னால் தணிக்கை அதிகாரியையும் குழுவினரையும் நேரில் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டுச் செல்வது ரஜினியின் வழக்கம்.
இப்போது ரஜினி சார் வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டார். கொஞ்சம் காத்திருந்தால் வந்துவிடுவார்" என்றார்.
அதனைக்
கேட்ட ஞான
சேகரன் “தயவுசெய்து
இங்கே வரவேண்டாம் என்று ரஜினிகாந்த் அவர்களிடம் சொல்லிவிடுங்கள். இதுவொரு தவறான அணுகுமுறையாகும். இதேபோல மற்ற நடிகர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிப்பதில்லை. நாங்கள் படத்தைப் பார்த்த பிறகு அவர் வந்து தாராளமாக
அன்று "பாட்ஷா"
படத்தை தணிக்கைக்காகப் பார்த்தார்கள். நடந்தது எதுவும் தெரியாமல் ரஜினி ச்ங்கு சென்றார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும், எதுவும் பேசாமல்
சென்றுவிட்டார். படம் முடியும்
தறுவாயில் சென்று தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு வணக்கம் சொன்னார். ‘முத்து’,
‘அருணாசலம்’, ’படையப்பா’ ஆகிய படங்களை ஞான ராஜசேகரனின் குழு பார்த்தபோது
ரஜினி அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அதுமட்டுமா? "இந்த அதிகாரி இருக்கும்வரை அவர் கொடுக்கும் ‘கட்’களை தட்டாமல் ஏற்றுக்கொள்ளுங்கள்; அப்பீலுக்குப் போகாதீர்கள்" என்று சொல்லிவிட்டார். எங்களைச் சந்திக்கலாம். அது அவரது உரிமையும்கூட” என்றார்.
No comments:
Post a Comment