Wednesday, April 12, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -64

 தமிழ் சினிமாவில் தனக்கென  ஒரு பாதையை வகுத்து வெற்றி பெற்றவர்  பாரதிராஜா. ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’ என தொடர்ந்து ஐந்து வெள்ளி விழாப் படங்களைத் தந்தவர் பாரதிராஜா. அந்த சாதனையை இன்னமும் எவரும் தொட்டுப் பார்க்கவில்லை.

சினிமாவில் தொடர் வெற்றிகளால் பூரித்துப் போன பாரதியாஜாவுக்கு அடுத்த  இரண்டு படங்களும் சறுக்கின.கல்லுக்குள் ஈரம், நிழல்கள் ஆகிய இரண்டு படங்களும் பாரதிராஜாவுக்கு சோதனையாக அமைந்தன. நிழல்கள்  நல்ல படம் என்றாலும் வசூலில்  பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஒளிப்பட்திவளர் நிவாஸ், கதாசிரியர்  பாக்கியஜார் ஆகியோர் இல்லாததுதான் பாரதிராஜாவின் தோல்விக்குக் காரணம் என்ர கதை அடிபட்டது. தனது  திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்த பாரதிராஜா "அலைகள்  ஓய்வதில்லை" மூலம்  மீண்டும் போற்றப்பட்டார். பாரதிஜா என்ற திறமையாளன்  மீது  மீண்டும்  வெளிச்சம் பாய்ந்தது.

  ஒளிப்பதிவாளரான நிவாசின் இயக்கத்திலே ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் ஒரு இயக்குநரின் கதாப்பாத்திரத்தில்பாரதிராஜா   நடித்தார்.  தெலுங்குப் பட உலகில் கொடி கட்டிப் பறந்த விஜயசாந்தியும்,  த அருணாவும் அந்த ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்கள். அடுத்ததாக அப்படத்தைத் தொடர்ந்து அவர் தனது சொந்தப் பட நிறுவனமான மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில்  ‘நிழல்கள்’ படத்தை தயாரித்து இயக்கினார். நிழல்கள் படத்தின் மூலம்   கதை வசனகர்த்தாவாக  மணிவண்ணனை அறிமுகமானார். ‘கல்லுக்குள் ஈரம்’ படத்துக்குப் பிறகு பாரதிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்தில் நிவாஸ் பணியாற்றவில்லை.   ஒலிப்பதிவுக் கலைஞரான பி.கண்ணன் அந்தப் படத்தில்தான் பாரதிராஜவோடு முதன்முதலாக இணைந்தார்.‘16  வயதினிலே’ படம் முதல்  பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய கதாசிரியர் பாக்யராஜ்  ‘புதிய வார்ப்புகள்’ படம் முடிந்தவுடன் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கி நடித்துக்  கொண்டிருந்ததால் அவரும் ‘நிழல்கள்’ படத்தில் பணியாற்றவில்லை.

  நிவாஸ், பாக்யராஜ்  ஆகிய இருவருடைய பங்களிப்பும் இல்லாமல் வெளிவந்த ‘நிழல்கள்’ படம் பாராட்டுக்களைப் பெற்ற அளவிற்கு வசூலைப்  பெறவில்லை. பாரதிராஜாவின் தொடர் வெற்றிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாத சிலர் பாரதிராஜாவின் வெற்றிகளுக்குக் காரணமே நிவாசும், பாக்கியராஜூம்தான் என்றும் அவர்கள் இல்லாததால்தான் ‘நிழல்கள்’ படத்தை பாரதிராஜாவால் வெற்றிப் படமாக தர முடியவில்லை என்றும்  ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.

பாரதிராஜாவின் வெற்றியைப் பார்த்து பிரமித்த  இளையராவின் மூத்த சகோதரரான பாஸ்கர் தனக்கொரு பரன் இஅயக்கும் பட்டி கேட்டுக் கொண்டேயிருந்ததால், ‘அலைகள் ஓய்வதில்லைபடத்தை பாஸ்கரின்  பாவலர் பிரதர்ஸ்நிறுவனத்திற்காக இயக்க முடிவு செய்தார் பாரதிராஜா.

மணிவண்ணன் கதை, வசனம் எழுதிய அந்தப் படத்தின் கதை ஒரு இஸ்லாமியப் பெண்ணை, பிராமண இளைஞன் ஒருவன் காதலிப்பதால் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்திதான் முதலில் அமைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அந்தப் படத்திலே இடம் பெற்றஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேஎன்று தொடங்கும் பாடலின் பல்லவியில்கூட  இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை கோவிலில் காதல் தொழுகை..’ என்று எழுதியிருந்தார் அப்பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து.பின்னர் இஸ்லாமிய சமூகத்திலிருந்து எதிர்ப்புகள் எழுமோ என்ற சந்தேகத்தில்தான் அந்தப் படத்தின் நாயகி பாத்திரம் மேரி என்ற கிறிஸ்துவப் பெண்ணின் பாத்திரமாக மாற்றி அமைக்கப்பட்டது.

தனது இரண்டாவது படமானகிழக்கே  போகும் ரயில்படத்தில் எல்லா பாத்திரங்களுக்கும் புதுமுகங்களை அறிமுகம் செய்தது போலஅலைகள் ஓய்வதில்லைபடத்திலும் பெரும்பாலும் புதுமுகங்களை அறிமுகம் செய்வது என்று முடிவெடுத்தார்  பாரதிராஜா.புதுமுகத் தேர்வில் அவர் இருந்தபோது அவரைப் பார்க்க தனது தாயாரான சரசம்மாவோடு வந்தார் அம்பிகா. அப்போதே அம்பிகா நடித்து சில படங்கள் வெளிவந்திருந்ததால் அந்தப் படத்தில் அவரைப் பயன்படுத்த முடியாத நிலையில்உனக்கு வேறு சகோதரிகள் இருக்கிறார்களா…?” என்று பாரதிராஜா அவரைப் பார்த்து கேட்டபோது, தனது கைப் பையிலிருந்து தங்கைகள் மல்லிகா, சந்திரிகா ஆகியோருடன் தானும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து நீட்டினார் அம்பிகா.

சந்திரிகாவின் புகைப்படத்தை ஊடுருவிப் பார்த்த பாரதிராஜாவின்   கண்கள்  அவரைக் கதாநாயகியாக்கியது. திருவனந்தபுரத்திலிருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த கல்லரா என்ற கிராமத்தில் சந்திரிகா பத்தாவதுவகுப்பி படிப்பதாகக் கூரினார்கள். போது கல்லராவிற்கு வந்து சந்திரிகாவை நேரில் பார்த்து விட்டு முடிவு செய்யலாம் என்றும் கூறினார்  பாரதிராஜா.ஒருவாரத்தின் பின்னர்  ஒளிப்பதிவாளரான பி.கண்ணனுடன் கல்லராவுக்கு பாரதிராஜா சென்றபோது மாலை ஆறு மணிக்கு மேலாகி விட்டது. அந்த  நேரத்தில் அங்கே கரண்ட் கட்டாகிவிடவே  மெழுகுவர்த்தியின் விளக்கு வெளிச்சத்தில்தான் பாரதிராஜாவால் சந்திரிகாவைப் பார்த்தார். நடிப்பதற்கு ஆர்வம்  இல்லாத சந்திரிகவை பரதிராஜாவின்  கமராக் கண் அளவெடுத்தது.


 அப்போது அவரது நடை, முகபாவம் இவற்றை எல்லாம் சரியாகப் பார்க்க முடியாமல் போனதாலோ என்பதாலோ என்னவோ தனக்கு அந்த வீட்டை சுற்றி காண்பிக்கச் சொன்னார் பாரதிராஜா.ஒரு மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு பேய்ப் படங்களில்  நடப்பது போல சந்திரிகா முன்னால் நடக்க அவரது முக பாவத்தை கூர்ந்து  கவனித்தபடி அவருக்கு பின்னாலே சென்று கொண்டிருந்த பாரதிராஜா அந்த வீட்டை விட்டு கிளம்பும்போதே சந்திரிகாதான் நாயகி என்பதை  முடிவு செய்துவிட்டார் பாரதிராஜா.

 பாரதிராஜாவின் அழைப்பின்  பேரில் சென்னையில் ரஞ்சித்  ஹோட்டலில் சந்திரிகாவுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, இளையராஜாவை சந்திக்க பிரசாத் ஸ்டுடியோவிற்கு சந்திரிகாக் கூட்டிச் சென்றார்பாரதிராஜாவுடன்.

இவர்தான்அலைகள் ஓய்வதில்லைபடத்தில்  அறிமுகமாகப் போகும் கதாநாயகி…” என்று இளையராஜாவிடம் பாரதிராஜா சந்திரிகாவை அறிமுகப்படுத்தியதும்இவர்தான் அந்த கப்பக் கிழங்கா..?” என்று கேட்டார் இளையராஜா.இளையராஜா அப்படிக் கேட்டதும் அவர் என் அப்படி அழைக்கிறார் என்று புரியாமல் முழித்தார் சந்திரிகா. இளையராஜா அப்படி அழைத்ததற்குக் காரணம்அலைகள் ஓய்வதில்லைபடத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு பாட்டு. அந்தப் படத்தின் நாயகன் நாயகியை கேலி செய்யும்விதமாகவாடி என் கப்பக் கிழங்கே…’ என்று தொடங்கும் பாடல், அந்தப் படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்ததால்தான் அவரை அப்படி அழைத்தார் இளையராஜா.

கிழக்கே போகும் ரயில்படத்தில் அறிமுகமான ராதிகாவின் பெயர்ஆர்என்று எழுத்தில் தொடங்கும் பெயராக அமைந்ததால்தான் பாரதிராஜாவின்புதிய வார்ப்புகள்பட நாயகிரதியாகவும்நிழல்கள்பட நாயகிரோகிணியாகவும் பெயர் மாற்றம் பெற்றனர். அந்தஆர்வரிசையில்ராதாஎன்று பெயர் சூட்டப்பட்டுஅலைகள் ஓய்வதில்லைபடத்தில் அறிமுகமான ராதா முதல் படத்திலேயே தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கனவுக் கன்னியானார்.

அலைகள்  ஓயதில்லை படத்தை   திரைப்படம்  தென்னிந்திய நடிகர் சங்கத்தில்பார்த்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்  பாரதிராஜாவைப் பாராட்டினார். அலைகள் ஓய்வதில்லைபடத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளையும், தொழில் நுணுக்கக் கலைஞர்களையும் பாராட்டுவதற்காக அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலைவாணர் அரங்கத்திலே ஒரு விழாவினை நடத்தினார். அந்த விழாவிலே அந்தப் படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் தனது கரங்களால் வெள்ளிக் கேடயங்கள் வழங்கி கெளரவித்தார் எம்.ஜி.ஆர்

No comments: