Tuesday, July 12, 2011

சரித்திரம்படைத்ததுஜப்பான்

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜப்பான், பிரான்ஸ் ஆகியன அரை இறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. ஜேர்மனி, ஜப்பான் ஆகியவற்றிற்கிடையேயான போட்டியில் மேலதிக நேரத்தில் ஒரு கோல் அடித்த ஜப்பான் அரை இறுதியில் விளையாடத் தகுதி பெற்றது. இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்ததனால் 43 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
நடப்புச் சம்பியனான ஜேர்மனியைத் தோற்கடித்த ஜப்பான் வரலாற்றில் முதன் முறையான அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது. அரை இறுதியில் விளையாடும் முதலாவது ஆசிய அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ஜப்பானுக்கு எதிரான போட்டியில் ஜேர்மனி இலகுவாக வெற்றி பெற்று விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஜப்பான் வீராங்கனைகளின் சாதுர்யமõன விளையாட்டுக்கு ஈடுகொடுக்க முடியõத ஜேர்மனி உலகக்கிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் வெற்றி பெற்ற ஜேர்மனியின் உலகக் கிண்ண கனவு பறிபோனது.
போட்டி ஆரம்பமாகி எட்டாவது நிமிடத்தில் முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமான ஜேர்மனிய வீராங்கனை குலிங் வெளியேறினார். இது ஜேர்மனிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஜேர்மனியும் ஜப்பானும் ஆட்ட நேரத்தினுள் கோல் அடிக்காததினால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
மேலதிக நேரத்தின் இடைவேளையின் பின்னர் 108 ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனை மருயாமா கோல் அடித்தார். கோல் அடிப்பற்கு ஜேர்மனி மேற்கொண்ட முயற்சிகள் எவையும் பயனளிக்கவில்லை. ஜேர்மனி வீராங்கனைகள் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
ஜேர்மன் அணிக்கு கோல் அடிக்க 23 சந்தர்ப்பங்களும் ஜப்பானுக்கு ஒன்பது சந்தர்ப்பங்களும் கிடைத்தன. ஜேர்மனி கோல் அடிப்பதற்கு கிடைத்த நான்கு சந்தர்ப்பங்களும் தவறிப் போயின. அதே போல் ஜப்பானுக்கு கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களை ஜேர்மனி முறியடித்தது. சிறந்த வீராங்கனையாக ஜப்பானை சேர்ந்த ஷாபா தெரிவு செய்யப்பட்டார்.
ஜப்பானுக்கு எதிராக நான்கு மஞ்சள் அட்டைகளும் ஜேர்மனிக்கு எதிராக ஒரு மஞ்சள் அட்டையும் காண்பிக்கப்பட்டது. போட்டியின் அதிக நேரம் ஜப்பான் வீராங்கனைகள் தமது கட்டுப்பாட்டில் பந்தை வைத்திருந்தனர்.
பிரான்ஸ் இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற பரபரப்பான போட்டி 11 என்ற சமநிலையில் முடிவடைந்ததால் பெனால்டி மூலம் 43 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
59 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் அடித்து முன்னிலை பெற்றது. 88 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் அடித்து சமப்படுத்தியது. மேலதிக நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடித்தமையினால் பெனல்õடி மூலம் வெற்றி தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரான்ஸ் வீராங்கனை முதலில் அடித்தார். இங்கிலாந்து கோல் கீப்பர் அதனை தடுத்து விட்டார். இங்கிலாந்து முதலாவது பெனால்டிய கோலாக்கியது. இரண்டாவது பெனால்டியையும் மூன்றாவது பெனால்டியையும் பிரான்ஜூம் இங்கிலாந்தும் தலாமூன்றுகோல்கள் அடித்துசமநிலையில் இருந்தபோதுநான்காவது பெனால்டியை பிரான்ஸ் கோலாக்கியது. இங்கிலாந்து வீராங்கøன நான்காவது பெனால்டியை கோல் கம்பத்துக்கு வெளியே அடித்தார். பிரான்ஸ் ஐந்தாவது பெனால்டியை கோலாக்கியது. 43 என்ற நிலையில் ஐந்தாவது பெனால்டியை அடித்தது இங்கிலாந்து. ஐந்தாவது பெனால்டி கோல் கம்பத்திற்கு வெளியேறியது. கோல் அடிப்பதற்கு பிரான்ஸூக்கு அதிக சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கிலாந்து வீராங்கனைகள் அதனை முறியடித்து விட்டனர். பிரான்ஸ் வீராங்கனைஅபினி சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டõர்.

ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

Wednesday, July 6, 2011

காலிறுதியில் மோதும் நாடுகள்

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் ஆகியன கால் இறுதியில் விளையாடத் தகுதி பெற்றன.
பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் 4 -2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஜேர்மனி அரை இறுதியில் விளையõடத் தகுதி பெற்றது.

25 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீராங்கனையான கார்கார்பிரீஸும், 32 ஆவது நிமிடத்தில் கிரிங்ஸிவ் கோல் அடித்து பிரான்ஸுக்கு அதிர்ச்சியளித்தõர். இடைவேளை வரை பிரான்ஸ் கோல் அடிக்க முடியாது தவித்தது. 56 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனையான டெலி கோல் அடித்தார். 65 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனையான சபோவிச் சிவப்புடை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஜேர்மனிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கிரிவ் கோலாக்கினார்.
72 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனை ஜோரிச் கோல் அடித்தார். இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். 89 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீராங்கனையான மபாவி கோல் அடித்தார். 90 நிமிடத்தின் பின்னர் பிரான்ஸ் வீராங்கனை அணி அடித்த இரண்டு கோல்களை ஜேர்மனிய கோல் காப்பாளர் தடுத்துவிட்டார்.
நைஜீரியா, கனடா ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியா வெற்றி பெற்றது. 73 ஆவது நிமிடத்தில் நைஜீரிய வீராங்கனையான வொகா கோல் அடித்தார்.
குழு ஏ யில் விளையாடிய கனடா மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தது. நைஜீரியா ஒரே போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியன கால் இறுதியில் விளையாட தகுதி பெற்றன.
ஜப்பான், இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையோன போட்டியில் 2- 0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஜப்பான் வீராங்கனைகள் பந்தை தமது கட்டுப்பாட்டினில் அதிக நேரம் வைத்திருந்தபோதிலும் இங்கிலாந்து வீராங்கனைகளின் பலமான தடுப்புகளை மீறி கோல் அடிக்க முடியவில்லை.
ஜப்பான் கோல் காப்பாளர் திறமையினால் பல கோல் தடுக்கப்பட்டன.
நியூசிலாந்து மெக்ஸிக்கோ ஆகியவற்றுக்கிடையேயõன போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
மிகவும் பரபரப்பான இப்போட்டி கடைசி நிமிடம் வரை ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. போட்டி ஆரம்பமாகி இரண்டாவது நிமிடத்தில் மெக்ஸிக்கோ வீராங்கனையான மயோர் கோல் அடித்து அதிர்ச்சியளித்தார். 29 ஆவது நிமிடத்தில் மெக்ஸிக்கோ வீராங்கனையான டொமிங்யூனி கோல் அடித்தார். இரு அணிகளுக்கும் கோல் அடிக்கக் கிடைத்த சந்தர்ப்பங்களை எதிரணிகள் முறியடித்தன. 90 ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து வீராங்கனையான ஸ்மித் கோல் அடித்தார். 2 -1 என்ற தோல் கணக்கில் மெக்ஸிக்கோ வெற்றி பெற்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் 90+ 4 ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து வீராங்கனையான விதின் சன் கோல் அடித்து சமப்படுத்தினார். 90 நிமிடம் வரை வெற்றி வீரராக வலம் வந்த மெக்ஸிக்கேõ ஏமாற்றமடைந்தது.
25 ஆம் திகதி ஜேர்மனியை எதிர்த்து ஜப்பானும் 26 ஆம் திகதி இங்கிலாந்தை எதிர்த்து பிரான்ஸும் கால் இறுதியில் விளையாடுகின்றன

ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

Monday, July 4, 2011

பிரேஸில், அவுஸ்திரேலியா வெற்றி

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பிரேஸில் அவுஸ்திரேலியõ ஆகியன வெற்றி பெற்றன.
நோர்வேக்கு எதிரான போட்டியில் 3 0 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வெற்றி பெற்றது. பிரேஸில் அணித் தலைவி மாதா இரண்டு கோல்கள் அடித்தார். 22 ஆவது நிமிடத்தில் பிரேஸில் தலைவி மாதா கோல் அடித்தார். பிரேஸில் வீராங்கனைகளின் தாக்குதல் விளையாட்டுக்கு பதிலளிக்க முடியாது நோர்வே தடுமாறியது. 46 ஆவது நிமிடத்தில் ரொஸானாவும் 48 ஆவது நிமிடத்தில் மாதாவும் ÷கால் அடித்து நோர்வேக்கு அதிர்ச்சி கொடுத்தனர். கோல் அடிப்பதற்கு இரண்டு அணிகளுக்கும் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் எதிரணி வீரர்களாலும் கோல் காப்பாளர்களாலும் அவை தடுக்கப்பட்டன.
பிரேஸில் அணித் தலைவி மாதா சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியா, கினியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 3 -1என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பித்து எட்டாவது நிமிடத்தில் அவுஸ்திரேலிய வீராங்கனை காமிஸ் கோல் அடித்து அதிர்ச்சியளித்தார். 21 ஆவது நிமிடத்தில் கினிய வீராங்கனைஅனோன்மன்கோல் அடித்து சமப்படுத்தினார். இடைவேளை முடிந்து ஆட்டம் ஆரம்பித்ததும் 48 ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலிய வீராங்கனை வன்எக்மன்ட்டும் 51 ஆவது நிமிடத்தில் டிவன்னாவும் கோல் அடித்து கினிய வீராங்கனைகளுக்கு அதிர்ச்சியளித்தனர். ஆட்ட நேரம் முடியும்வரை இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்க பெரிதும் முயற்சி செய்தனர். அவுஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார விளையாட்டுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத கினியா தோல்வியடைந்தது.அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த லிசா டி வன்னா சிறந்தவீராங்கனையாகத்தெரிவுசெய்யப்பட்டார்.

ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

அமெரிக்கா ,சுவீடன் வெற்றி

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் அமெரிக்கா சுவீடன் வெற்றி பெற்றன.
கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்க கால் இறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.
12 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான ரெய்லி கோல் அடித்து உற்சாகம் மூட்டினார். அமெரிக்கா ஒரு கோல் அடித்ததும் கொலம்பியா கோல் அடிக்க பலமுறை முயற்சி செய்தது. 50 ஆவது நிமிடத்தில் அமெரிக்கா வீரங்கனையான ரபினோ கோல் அடித்தார். 57 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான லொயிட் கோல் அடித்தார்.
84 ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான வம்பாச்சிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
அமெரிக்காவின் விளையாட்டுக்கு ஈடு கொடுக்க முடியாத கொலம்பியா தோல்வியுடன் வெளியேறியது. அமெரிக்க வீராங்கனையான லொயிட் சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
சுவீடன் வடகொரியா ஆகியற்வற்றுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் கால் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
வடகொரியா மிகச் சிறந்த முறையில் விளையாடிய போதும் கோல் அடிப்பதற்குரிய சந்தர்ப்பங்களை சுவீடன் வீராங்கனைகள் முறியடித்தன‌ர். பந்தை தமது கட்டுப்பாட்டினுள் அதிக நேரம் வடகொரிய வீராங்கனைகள் வைத்திருந்தனர்.
64 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனையானஉக்வின்ஸ்கோல் அடித்தார். சிறந்த வீராங்கனையாக சுவீடனைச் சேர்ந்த செகார்தெரிவுசெய்யப்பட்டார்.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

Sunday, July 3, 2011

ஜப்பான், இங்கிலாந்து வெற்றி

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜப்பான், இங்கிலாந்து ஆகியன வெற்றி பெற்றன.
ஜப்பான், மெக்ஸிக்கோ ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 4- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜப்பான் அணித்தலைவி சவா மூன்று கோல்களையும் ஹேனோ ஒரு கோலையும் அடித்தனர். 13 ஆவது நிமிடத்தில் அணித் தலைவி சவா கோல் அடித்தார். 15 ஆவது நிமிடத்தில் ஹேனோ கோல் அடித்தார். ஜப்பான் இரண்டு கோல்கள் அடித்ததனால் சுதாகரித்த மெக்ஸிக்கோ 19 ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க முயற்சி செய்தது. ஜப்பான் கோல் காப்பாளர் அதனைத் தடுத்துவிட்டார். 25 ஆவது நிமிடத்தில் மெக்ஸிக்கோ கோல் அடித்தது. ஆனால் அது ஓப்சைட் கோல் என்பதால் சோர்ந்து போனது. 39 ஆவது நிமிடத்தில் ஜப்பானுக்கு கிடைத்த கோணர் கிக்கை தலைவி சவா கோலாக்கினார். 50 ஆவது நிமிடத்தில் மெக்ஸிக்கோவும் 55 ஆவது நிமிடத்தில் ஜப்பானும் கோல் அடிக்க முயற்சி செய்தன. இரண்டும் ஓப் சைட் என்பதனால் 80 ஆவது நிமிடத்தில் தலைவி சவா கோல் அடித்தார்.
ஜப்பான் மெக்ஸிக்கோ ஆகிய இரண்டு அணி வீராங்கனைகளும் கோல் அடிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எதிரணியால் தடுக்கப்பட்டன. ஐந்தாவது மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் ஜப்பான் முதன் முதலாக காலிறுதிக்கு விளையாடத் தகுதி பெற்றது. சவா சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 2- 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
18 ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து கோல் அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது. இடைவேளை வரை இங்கிலாந்து கோல் அடிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை நியூசிலாந்து வீராங்கனைகள் முறியடித்தனர்.
63 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஸ்கொட் கோல் அடித்தார். அதன் பின்னர் போட்டியில் பரபரப்புக் கூடியது. 81 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை கிளாச் கோல் அடிக்க இங்கிலாந்து முன்னிலை பெற்றது. 88 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை அடித்த கோல் நியூசிலாந்து கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.
சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ் ஸ்கொட் தேர்வு செய்யப்பட்டார்.

ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

Saturday, July 2, 2011

ஜேர்மனி ,பிரான்ஸ் வெற்றி

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியன வெற்றி பெற்றன. நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பத்தில் இருந்து முடிவடையும் வரை ஜேர்மனிய வீராங்கனைகள் நைஜீரியாவுக்கு நெருக்குதல் கொடுத்தனர்.
ஆட்டம் ஆரம்பித்த மூன்றாவது பதின்மூன்றாவது நிமிடங்களில் ஜேர்மனி வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். நைஜீரிய கோல் கீப்பர் அவற்றைத் தடுத்துவிட்டார். நைஜீரியர் கைகளும் கோல் அடிக்க முயன்றபோது ஜேர்மனிய கோல் கீப்பர் அவற்றை தடுத்துவிட்டார்.
51 ஆவது நிமிடத்தில் நைஜீரிய வீராங்கனையான ஓலேக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 54 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீராங்கனையான சைமன் லவுடர் கோல் அடித்தார். நைஜீரியாவை ஜேர்மனி இலகுவாக வீழ்த்திவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. நைஜீரிய வீராங்கனைகள் திறமையாக விளையாடி ஜேர்மனிக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்தனர். 74 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீராங்கனையான குலிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஜேர்மனியைச் சேர்ந்த அன்னிக் கிரான் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஜேர்மனி கால் இறுதிக்குத் தகுதி பெற்றது.
பிரான்ஸ் கனடா ஆகியவற்றுக்கிடையேயான இன்னொரு போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
போட்டி ஆரம்பித்தது முதலே பிரான்ஸ் வீராங்கனைகள் போட்டியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். ஏழாவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனை அடித்த பந்தை கடைசி கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார். 24ஆவது நிமிடத்தில்தினெலிiகோல் அடித்தார். 37 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனைமபெரம்மஸுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 57ஆவது நிமிடத்தில் கனடா வீராங்கனை மதன்சனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 60 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனை தினெலி இரண்டாவது கோலை அடித்தார். 66 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனை கோல் அடித்தார். 30 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி முகத்துடன் விளையாட்டைத் தொடர்ந்தது. 83 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனையான தோமில் கோல் அடித்தார். 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் முதன் முதலாககாலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது. சிறந்த வீராங்கனையாக ஜேர்மனிய வீராங்கனையான திலினி தேர்வு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

Friday, July 1, 2011

உலகக்கிண்ணதகுதிகாண்போட்டி

பிரேஸிலில் 2014ஆம் ஆண்டு நடைபெறும் உலக கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் விளையாட உள்ள நாடுகளைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்று முன்தினம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
மலேஷியா, வியட்நாம், மொங்கோலியா, பங்களாதேஷ், பலஸ்தீனம், நேபாளம், கம்போடியா ஆகிய நாடுகள் வெற்றி பெற்றன. இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுக்கிடையேயான போட்டிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
சைனீஸ் தாய்பேக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மலேஷியா மக்காவுக்கு எதிரான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமும் மியான்மாருக்கு எதிரான போட்டியில் 1- 0 என்ற கோல் கணக்கில் மொங்கோலியாவும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷûம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீனமும், திமோருக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நேபாளமும்,
லாவேசுக்கு எதிரான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் கம்போடியாவும் பெற்றி பெற்றன.

ரமணி
மெட்ரோநியூஸ்