பிரேஸிலில் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தொண்டர்களாக கடமையாற்ற 240,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியை ஒழுங்கமைப்பதற்கான தொண்டர்களின் சேவை 1948ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. 7000 தொண்டர்களின் உதவியுடன் ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. ஒலிம்பிக்போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு உதவி புரிவது, மைதானம் பராமரிப்பது உணவு வழங்குவது போன்ற பல பணிகளில் இவர்கள் சிறந்த முறையில் கடமையாற்றினார்கள். பிரேஸில் ஒலிம்பிக்கில் தொண்டர்களாக கடமையாற்ற 191 நாடுகளிலிருந்து 240,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அமெரிக்கா,ரஷ்யா,சீனா,இல்ங்கிலாந்து ஆகிய நடுகளில் இருந்து அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் 70,000 பேர் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
Sunday, December 28, 2014
அவர்கள் அழட்டும்
அமானுஷ்ய உறைவின்
ஏகாந்த வெளியில்
அவர்கள்
ஒரு தசாப்த நினைவில்
உருகிப்போனர்கள் .
எதுவுமற்ற காற்று வெளியிடையே
அவர்கள்
கண்ணீரின் உப்பு நிறைந்திருந்தது .
விதைப்பு நிலத்தின்
குறும் பரப்பினுள்
மண் திட்டுக்களை
கட்டி அணைத்து
ஓலங்கள் நிறைய முத்தமிட்டுக்
கொண்டிருக்கின்றார்கள் .
ஆறாத மன வடுக்களோடு
ஆழியின் கோரத்தை எண்ணி
நம்பிக்கையீனங்களை நிலையிருத்த்தி
வெந்து கொண்டிருந்தார்கள் .
ஆண்டுகள் ஆனாலும்
உப்பு நிலத்தினிடையே
உருக்குலையாது
உறங்கும் தம் செல்வங்களை
தாலட்டு பாடி செல்லம்
பொழிந்து கொண்டிருக்கின்றாள்
ஓர் அபலைத் தாய் .
அலையாய் இதம் தரினும்
ஆழியின் ஒரு நொடிப்பொழுது
கோரத்தண்டவத்தை
மன்னிக்க முடியாது
ஆழியை வெறித்துப்
பார்த்துக்கொண்டிருந்தான்
மூன்று செல்வங்களை
அலைக்கு கொடுத்த ஓர்
ஏழைத் தகப்பன் .
ஓலத்தின் வெளியாகி
உயிர் நிகழ் வெளி
காட்டாற்று துயர அரங்காய்
காட்சியானது .
தயவு செய்து
அழுபவர்களை ஆற்றுப்படுத்தும்
எங்கள் உறவுகளே
விடுங்கள்
தயவு செய்து அவர்களை
நிம்மதியாக தன்னிலும்
அழ விடுங்கள் .
அழுகைகள் கூட
மட்டுப்படும்
நிலவெளியில்
அவர்கள் இன்றாவது அழட்டும் .
அவர்களை தடுக்காதீர்கள்
காரணம்
அவர்கள் எல்லாவற்றிற்கும் சேர்த்து
அழுது கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் நிம்மதியாய் அழட்டும்
அவர்கள் அழட்டும் .
-----------'''''------------------"""""""--------------
வெற்றி துஷ்யந்தன் 26.11.2014.
Monday, December 8, 2014
பலோன் டிஓ விருதுக்கு கடும் போட்டி
விளையாட்டுமைதானத்தில் தமது அணியின் வெற்றிக்காக போராடிய கிறிஸ்ரியானோ ரொனால்டொ லியனல் மேசி ஆகிய இருவரும் சிறந்த
வீரரிக்கன போட்டியிலும் முட்டி மோதுகின்றனர். இவர்களுக்குப்போட்டியாக ஜேர்மனியின் கோல்கீப்பர் மனுவல் நெயூரும் களத்தில் உள்ளார்.சிறந்தவீரர்,சிறந்த வீராங்கனை,சிறந்த பயிற்சியாளர்களைத் தெரிவு செய்து விருது வழங்கிவருகிறது பீபா. 1956 ஆம் ஆண்டு பலோன் டிஓ விருது அறிமுகப்படுத்தப்பட்டபோது இங்கிலாந்து வீரர் ஸ்ரான்லி மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார். 12 அம்திகதி விருது பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்படும்.
சிறந்த வீரருக்கான பலோன் டிஓ விருதுக்காக சிறப்பாகசெயற்பட 23 விரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. உலகக்கிண்ண சம்பியனான ஜேர்மனியின் ஆறு வீரர்களும் ஜேர்மனியிடம் தோல்வியடைந்த ஆர்ஜென்ரீனாவின் மூன்று வீரர்களும் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்தனர். இங்கிலாந்து பிரிமியர் லீக் தொடரில் விருது பெற்ற செளரஸின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. உலகக்கிண்ணப்போட்டியில் விளையாடிய அவர் இத்தாலிய வீரரின் தோள்பட்டையைக்கடித்தபடியால் இந்தச்சந்தர்ப்பத்தை இழக்க நேர்ந்தது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இங்கிலாந்து வீரர்கள் எவரும் பரிந்துரைக்கப்படவில்லை.
2008 ஆம் ஆண்டு பலோன் டிஓ விருதை ரொனால்டோ பெற்றார்.
2009 ஆம் ஆண்டுமுதல் 2013 ஆம் ஆண்டுவரை இந்தவிருது மேசி வசமானது. 2013 அம் ஆண்டு மேசியிடமிருந்த விருது ரோனால்டோவசமானது.ரொனால்டோ மூன்றாவ்து முறையும், மேசி ஐந்தாவது முறையும் விருதை வெல்லக்காத்திருக்கிறார்கள்.இவர்களுடன் மனுவல் நொயர் முதல் முதலாக இருத எதிர்பர்த்துக் காத்திருக்கிறா. முன்னதாக 1963 ஆம் அண்டு சோவியத்யூனியன் கோல்கீப்பர் லீகா யசின் இந்த விருதை வென்றார். அதன் பின்னர் இப்போதுதான் கோல்கீப்பர் ஒருவர் இந்தவிருதை நோக்கி முன்னேறி உள்ளார்.
சம்பியன் லீக்கில் ரொனால்டோ 33 கோல்கள் அடித்துள்ளார்.13 கோல்கள் அடிக்க உதவி செய்துள்ளார். மேசி 30கோல்கள் அடிட்தார். 14 கோல்கள் அடிக்க உதவி செய்துளார். நோயர் அபாரமாக விளையாடி 16 கோல்களைத்தடுத்துள்ளார். உலகக்கிண்ணப்போட்டியில் மேசி தங்கக்காலணியையும், நோயர் தங்கக்கை உறையையும் பெற்றனர்.
ஜேர்மனி,பிறேஸில்,அமெரிக்கா,ஸ்பெய்ன்,ஜப்பான், சுவீடன்,பிரான்ஸ் ஆகிய நாடுகளைச்சேர்ந்த 10வீராங்கனைகள் சிறந்த வீரர்கனை விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். ஜேர்மனியின் நடீன் கெல்லர், பிறேஸில்வீரங்கனை மாதா, அமெரிக்காவின் அபி வம்பெச் ஆகியோர் இறுதிப்பட்டியலில் உள்ளனர்.
இத்தாலி,ஜேர்மனி,ஆர்ஜென்ரீனா,ஸ்பெய்ன்,போத்துகல்,சிலி,ஆஜென்ரீனா,நெதர்லாந்து ஆகிய நாடுகளைச்சேர்ந்த 10 பயிற்சியாளர்கள் சிறந்த ஆண்பயிற்சியாளர் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டனர். இத்தாலியைச்சேர்ந்த காலோஏன் செட்டி ,இவர் ரியல் மட்ரிட் அணியின் பயிற்சியாளர். சம்பியன் லீக் கிண்ணத்தை வென்ற பயிற்சியாளராக உள்ளார். உலகக்கிண்ணச்சம்பியனான ஜேர்மனியின் பயிற்சியாளர் ஜோகிம் லோ,உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஜேர்மனியிடம் தோல்வியடைந்த ஆர்ஜென்ரீனாவின் பயிற்சியாளர் டீகோ சைமன் ஆகியமூவரும் இறுதிச்சுற்றில் போட்டியிடுகின்றனர்.
மிகச்சிறந்தாகோல் அடித்ததற்காக புஸ்கிவிருது வழங்கப்பட உள்ளது.ஜேம்ஸ் ரொட்ரொட்டிகஸ்[கொலம்பியா], ரொபின் வன் பீரிஸ் [நெதர்லாந்து],இப்றாஹிமிவோச் [சுவீடன்] உட்பட 10வீரர்களுடன் அயர்லாந்துவீராங்கனை ஸ்டெபானி ரோஷேயின் பெயரும் முதல்பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டது.
ரொபின் வன் பீரிஸ்,ஜேம்ஸ் ரொட்டிகஸ்,ஸ்டெபிபானி ரோஷே ஆகிய மூவரும் இறுதிச் சுற்றில் போட்டியிடுகிறார்கள்.
இவைதவிர பீபாவின் உலக அணிக்காக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.தேசிய அணியின் பயிற்சியளர்கள்,அணித்தலைவர்கள்,பத்திரிகையளர்கள் ஆகியோர் இந்த விதுதுகளுக்குரியவர்களைத் தெரிவுசெய்வதற்கு வாக்களிப்பார்கள்.
தமிழ்மிரர்
Saturday, November 8, 2014
தனி மரமான வாசன்
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ்
கட்சியிலிருந்து வாசன் வெளியேறப்போகிறார்
என்ற செய்தி பரபரப்பாகப்
பேசப்பட்டது. தே ர்தலின்போது ஏற்பட்ட
எதிர்பார்ப்பை வாசன் பொய்யாக்கினார். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஆதரவாக
பிரசாரம் செய்தார். ஆனால், தேர்தலில்
போட்டியிடவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மேலிடம் அவர் மீது நம்பிக்கை இழந்தது.
அவர் விரும்பிய சிலர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் அனுமதிக்கவில்லை. இதை
எல்லாம் மனதில் வைத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை
ஆரம்பித்துள்ளார்.
தமிழக காங்கிரஸில் பல கோஷ்டிகள் உள்ளன. வாசன் தலைமயிலான கோஷ்டி
மிகப்பலமானது 1996 ஆம் ஆண்டு வாசனின்
தகப்பன் ஜி.கே .மூப்பனார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் மாநில
காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிட்ட அவரது கட்சி பெரும் வெற்றி
பெற்றது. காங்கிரஸ் கட்சி படு தோல்வியடைந்தது. ஊழல் கட்சியான அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர்வதை எதிர்த்து முப்பனார்
புதிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் க ழகத்துடன்
இணைந்து படு தோல்வியடைந்தார்.
புதிய கட்சியை
ஆரம்பிப்பதற்கான எந்தவிதமான சூழ்நிலையும் இப்போது இல்லை. ஆனாலும் துணிந்து கட்சியை
ஆரம்பித்து விட்டார் இளங்கோவன். காங்கிரஸ் கட்சியின் உள்ளே கனன்று கொண்டிருந்த அனல்
வெளிப்பட்டுவிட்டது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து ஞானதேசிகன் இராஜினாமா செய்தபின்னர் வாசன் புதிய கட்சியைப்பற்றிய அறிவிப்பை
வெளியிட்டுள்ளார். முப்பனார் புதிய கட்சியை ஆரம்பித்தபோது காங்கிரஸ் கட்சிக்கு
எதிரான அலை இருந்தது. இப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை உள்ளது . அந்த அலையால் வாசனுக்கு எந்தவிதமான விதமான இலாபமும் இல்லை. எழமுடியாத அதல பாதாளத்தில் காங்கிரஸ் கட்சி விழுந்துள்ளது.
தமிழகத்தில் இப்போது தேர்தல் நடைபெறும் சூழல் இல்லை. ஆகையினால் வாசனின் புதிய
கட்சியுடன் இணைவதற்கு பெரிய கட்சிகள் இப்போதைக்கு தயாராக இல்லை. தேர்தல்
நெருங்கும் போது பெரிய கட்சிகள் தன்னைத்தேடி வரும் என வாசன் நம்புகிறார்.
முப்பனார் புதிய
கட்சியை ஆரம்பித்தபோது ப.சிதம்பரம்,ஜெயந்தி நடராஜன்,ஆதித்தன், அருணாசலம்,
தனுஷ்கோடி ஆனந்தன் , எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் போன்ற தலைவர்கள் அவருக்கு ஆதரவாக
இருந்தார்கள். ஆனால் வாசனுக்கு ஆதரவாக ஞானதேசிகனைத்தவிர
வேறு யாரும் இல்லை. ஞானதேசிகனுக்கு
மக்கள் ஆதரவு இல்லை.
ஞானதேசிகன் இராஜினாமாச்செய்த உடனே இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக
நியமிக்கப்பட்டார். ராகுல், சோனியா ஆகியோருக்கு விசுவாசமானவர் இளங்கோவன். மூப்பனார்
காங்கிரஸில் இருந்து பிரிந்துபோய் புதிய கட்சியை ஆரம்பித்தபோதும் இளங்கோவன் தமிழக
காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். மூப்பனாரின் மகன் இப்போது காங்கிரஸில் இருந்து பிரிந்தப்போதும் தலைமைப்
பதவி இளங்கோவனைத் தேடிவந்துள்ளது. பிரிந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள்
இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திராவிட
முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவற்றுடன் கூட்டணி சேரக்கூடாது என்பதில் உறுதியாக
இருப்பவர் இளங்கோவன். காங்கிரஸை தூக்கி நிறுத்த வேண்டிய தலையானபணி இளங்கோவனுக்கு
உள்ளது. நேருகுடும்பத்துக்கு வெளியே உள்ள ஒருவர் காங்கிரஸ் தலைவராக வேண்டும்
என சிதம்பரம் கூறி உள்ளார். இதனை ராகுலும்,சோனியாவும்
ரசிக்கவில்லை. ஸ்பெக்ரம் விவகாரத்தில்
முன்னாள் பிரதமர் மன்மோகன் இராஜினாமா செய்திருக்க வேண்டும் என்றும் சிதம்பரம்
கூறியுள்ளார். இதுவும் சிதம்பரத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி
உள்ளது. ஆகையினால் அடுத்தகுறி சிதம்பரமாக இருக்கலாம். அப்படி ஒருநிலை ஏற்பட்டால்
அவர் வாசனுடன் சேர்ந்துவிடுவார். அது வாசனுக்கு பெரும் பலமாக அமைந்துவிடும்.
தமிழகத்தில் ஏதாவது
மாற்றங்கள் செய்யும்போது தமிழகத் தலைவர்களுடன் ஆலோசனை செய்வது வழமை . இளங்கோவனைத்
தலைவராக்கியபோது ஒப்புக்குக்கூட யாரையும் கலந்தாலோசிக்கவில்லை. இளங்கோவனைத்
தவிர மற்றவர்களை மத்திய காங்கிரஸ் தலைவர்கள் நம்பவில்லை. இதனால் இளங்கோவன்
மிகப்பெரிய சவாலை எதிர்நோக்க உள்ளார். இதனால் தமிழக காங்கிரஸில் மாற்றங்கள்
ஏற்படும் நிலை உண்டாகும். இது வாசனுக்கு சாதகமாக அமையும்.
Friday, October 31, 2014
கைவிட்டது மே.இந்தியத்தீவுகள்; கைகொடுத்தது இலங்கை.
மேற்கு
இந்தியத்தீவுகள்
கிரிக்கெற் சபைக்கும், வீரர்களுக்குமிடையேயான சம்பளப்பிரச்சினக்காரணமாக இந்திய கிரிக்கற்தொடரை கைவிட்டுவிட்டு மேற்கு இந்திய வீரர்கள் நாடுதிரும்பிவிட்டனர். இதன் காரணமாக , மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெற்றுக்கும்
,இந்திய கிரிக்கெற்றுக்கும் இடையே பாரிய விரிசல் விழுந்துள்ளது.
மேற்கு இந்திய வீரர்கள் இந்தியாவுக்குச் செல்லும் முன்பேசம்பளப்பிரச்சைனை
உண்டாகியது. தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக முதல் நாள் போட்டியில்
கறுப்பு பட்டி அணிந்து விளையாடினார்கள். தொடர் முடியும் வரை எதுவிதமான பிரச்சினையும் ஏற்படாது என இந்தியா எதிர்பார்த்தது. நான்காவது ஒரு நாள் போட்டி முடிந்ததும், தொடரைக்கைவிட்டு மேற்கு இந்தியத்தீவுகள் வீரர்கள் நாடுதிரும்பிவிட்டனர். இதனால் இந்தியா
அதிர்ச்சியடைந்தது.
ஐந்தாவது ஒருநாள் போட்டி டெஸ்ட் போட்டிகள் ரி 20 போட்டி என்பன கைவிடப்பட்டதனால் இந்தியக்கிரிக்கெற்றின் வருமானத்தில் அடிவிழுந்தது.
இழந்த வருமானத்தை ஓரளவேனும் மீட்பதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுத்தது இந்தியா. எதுவித மறுப்பும்தெரிவிக்காது
உடனடியாக இலங்கை சம்மதம் தெரிவித்தது. இதேவேளை மேற்கு இந்தியத்தீவுகளிடம் இருந்து இழப்பீட்டைப்பெறுவதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது. கிரிக்கெற் தொடர் கைவிடப்பட்டதால் சுமார் 400 கோடி ரூபா இழப்பு என இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு
எதிரான கிரிக்கெற் தொடர் கைவிடப்பட்டதற்கு வீரர்கள் தான் காரணம் என மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெற் சபை அறிவித்துள்ளது. சம்பள ஒப்பந்தப்பிரச்சினையை பேசித்தீர்த்திருக்கலாம் என்ற மேற்கு இந்திய கிரிக்கெற் சபையின் கூற்றை வீரர்கள் நிராகரித்துள்ளனர். வீரர்கள் சங்கத்தலைவர் ஹிண்ட்ஸ்சுக்கும் வீரர்களுக்கும் இடையேயான பிரச்சினைதான் இதற்கு முக்கிய காரணம். மேற்கு இந்திய கிரிக்கெற் சபை இதனை சுமுகமாகத்தீர்த்திருக்கலாம் எனறு இந்தியா கருதுகிறது.
மேற்கு
இந்தியதீவுகளுடனான கிரிக்கெற் தொடர்களுக்கு ஐந்து வருடங்கள் தடைவிதிப்பது, ஐ.பி.எல் தொடர்களில் இருந்து மேற்கு இந்தியாதீவுகள் வீரர்களை நீக்குவது போன்ற அதிரடிமுடிவுகளை இந்திய கிரிக்கெற் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.மேற்கு இந்தியத்தீவுகள் வீரர்களுக்கு ஆதரவான சமிக்ஞையை இந்தியா வெளிப்படுத்தி உள்ளது. ஐ.பி.எல்லில் இருந்து வீரர்களை வெளியேற்றுவதில்லை என இந்தியா தீர்மனித்துள்ளது. மேற்கு இந்தியத்தீவுகள் வீரர்களுக்கான ரசிகர் பட்டாளம் இந்தியாவில் உள்ளது. அதனை இழக்க இந்திய கிரிக்கெற் விரும்பவில்லை.
மேற்கு இந்திய கிரிக்கெற் வீரர்களை இந்தியா பாதுகாத்துள்ளது. ஆகையினால் இத ற்கு சுமுகமான
முடிவைக்காணும்
சூழ்நிலைக்கு மேற்கு இந்தியத்தீவுகள் தள்ளப்பட்டுள்ளது.
இந்திய
கிரிக்கெற்றுடன் பகைத்தால் வருமானத்தில் பாதிப்பு ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்தியா விரும்பியதுபோல ஐந்து வருடங்களுக்கு மேற்கு இந்தியாத்தீவுகளுடன் விளையாடாமல்விட்டால் அதன் பொருளாதார தாக்கத்தை சமாளிப்பது கடினம். ஆகையினால் ஏதோ ஒரு வழியில் இந்தியாவைச்சமாதானப்படுத்த மேற்கு இந்தியத்தீவுகள் முயற்சி செய்யும்.
இந்திய
பாகிஸ்தான் அரசியல் பிரச்சினைகாரணமாக இந்திய கிரிக்கெற் அணி பாகிஸ்தானுக்குச் செல்வதில்லை. ஐ.பி.எல்லில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள்
அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக பகிஸ்தான் கிரிக்கெற்றுக்கும் வீரர்களுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.இதேவேளை ஐ.பி.எல்லில் பயிற்சியாளர்களாகவும் வர்ணனையாளர்களாகவும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் கடமையாற்றுகின்றனர்.
சம்பள நிலுவை காரணமாக இலங்கை வீரர்களும் மிகவும் துன்பப்பட்டனர். ஆனால் எந்தநிலையிலும் இலங்கைக்கு அவமானம் தரும் வகையில் அவர்கள் நடந்து கொண்டதில்லை. சம்பளப்பிரச்சினை காரணமாக மேற்கு இந்தியத்தீவுகள் வீரர்கள் நாடுதிரும்பியதால் அந்த இடத்தை நிரப்புவதற்காக இலங்கை வீரர்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். திட்டமிடப்படாத இந்தத்தொடர் இலங்கை வீரர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு
எதிரான தொடரை இலங்கைவீரர்கள் எதிர்பார்க்கவில்லை. அனுபவம் மிக்கவரான சங்ககார தனது மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக அறிவித்துள்ளார். இந்திய வீரர்களுக்கு எதிராக விளையாடுவதற்கு தயாராக இல்லாத நிலையிலேதான் இலங்கை வீரர்கள் சென்றுள்ளனர். முதல் மூன்று ஒரு நாள்
போட்டிகளில் டோனி விளையாடமாட்டார். கடைசி இரண்டு போட்டி ஒரு நாள் போட்டிகளிலும்
டோனி விளையாடுவார். இந்திய அணி முழுப்பலத்துடன் உள்ளது.
மலிங்க, ரங்கண ஹேரத்,அஜந்த மெண்டிஸ் ஆகியோர் அணியில்
இல்லாததனால் பந்து
வீச்சில்சற்று தளர்வு உள்ளது. சங்ககார களம் இறங்குவாரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. எத்தகைய இக்கட்டான நிலையிலும் மன உதியுடன் விளையாடும் துணிவு இலங்கை வீரர்களிடம் உள்ளது. ஆகையினால் ஒருநாள் தொடரில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. கிரிக்கெற்றின் வெற்றி என்பதற்கு அப்பால் உலகக்கிண்ண கிரிக்கெற் போட்டியில் விளையாடும் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற அவா ஒவ்வொரு வீரருக்கும் உள்ளது என்பதனால் அதிக பட்ச திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடி வீரர்களுக்குஉள்ளது.
இங்கிலாந்து,
மேற்கு இந்தியத்தீவுகள் ஆகியவற்றுக்கு எதிரான தொடர்களில் வெற்றி பெற்ற நம்பிக்கையில் இந்தியா உள்ளது. பாகிஸ்தான்,தென்.ஆபிரிக்கா ஆகியவற்றுக்கு எதிரான தொடர்களில் தோல்வியடந்த இலங்கை இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா
,பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெற் போட்டியை நடத்தின. அப்போது இலங்கையில்
குண்டு வெடிப்புகள் அடிக்கடி நடைபெறுவதனால் பாதுகாப்பு இல்லைஎன அவுஸ்திரேலியாவும் மேற்கு இந்தியத்தீவுகளும் இலங்கையில் விளையாட மறுப்புத் தெரிவித்தன. இலங்கையில் எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக இந்திய பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து இலங்கையில் விளையாடினார்கள்.
இந்திய நாடாளுமன்றதேர்தல் காலத்தில் ஐ.பி.எல்லுக்கு பாதுகாப்பு தரமுடியாது என மத்திய அரசாங்கம் அறிவித்ததனால்,2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல்லின் சிலபோட்டிகள் தென். ஆபிரிக்காவில் நடத்தப்பட்டன. அப்போது இந்திய, தென். ஆபிரிக்க கிரிக்கெற் உறவுகள்கள் மிக இறுக்கமாக இருந்தன. 2013 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியது. இந்திய கிரிக்கெற் அணி தென்.ஆபிரிக்காவில் விளையாடும் போட்டிகளின் அட்டவணை ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டது எனக்குற்றம் சாட்டியது இந்தியா. அதன் காரணமாக மேற்கு .இந்தியத்தீவுகளை தனது நாட்டுக்கு அழைத்து இரண்டு டெஸ்ட்போட்டிகளை நடத்தியது.
தென்.ஆபிரிக்காவுடனான முறுகல் காரணமாக சச்சினின் 200 ஆவது டெஸ்ட்போட்டி அங்கு நடப்பதை இந்தியா விரும்பவில்லை. ஆகையினால் மேற்கு இந்தியத்தீவுகளை தனது நாட்டுக்கு அழைத்து சச்சினின் 200 ஆவது போட்டியை நடத்திதிருப்தியடைந்தது.
இப்போது மேற்கு இந்தியத்தீவுகள் தொடரைக்கைவிட்டதனால்
அந்த இடைவெளியை நிரப்புவதற்காக இலங்கையை அழைத்துள்ளது.
தமிழ்மிரர்
Subscribe to:
Posts (Atom)






