Saturday, November 14, 2020

ஐபிஎல்லில் சாதித்த இளைஞர்கள்

 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தது. 734 சிக்சர்கள், 1582 பவுண்டரிகள் என்று ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்த இந்த ஐ.பி.எல்.-ல் பெரிய தொகைக்கு விலைபோன நிறைய வீரர்கள் ஜொலிக்கவில்லை. உதாரணமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ரூ.10¾ கோடிக்கு வாங்கப்பட்ட கிளைன் மேக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா) 13 ஆட்டத்தில் வெறும் 108 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அவர் மட்டும் தனது திறமைக்கு ஏற்ப அதிரடி காட்டியிருந்தால் நிச்சயம் பஞ்சாப் அணி பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்திருக்கும். இதனால் அடுத்த சீசனில் அவரை கழற்றி விட அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

அதே சமயம் சிறிய தொகைக்கு எடுக்கப்பட்ட சர்வதேச போட்டி அனுபவம் இல்லாத இந்திய இளம் வீரர்கள் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்க சிலரது விவரம் வருமாறு:-

 டி.நடராஜன் (ஐதராபாத் சன்ரைசர்ஸ்): 2018-ம் ஆண்டு ஐதராபாத் அணியால் ரூ.40 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு 2018, 2019-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த ஐ.பி.எல்.-ல் யார்க்கர் வீசுவதில் கில்லாடியாக உருவெடுத்த 29 வயதான நடராஜன் எதிரணியின் ஓட்ட வேகத்தை இறுதிகட்டத்தில் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். பெங்களூருக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் அபாயகரமான பேட்ஸ்மேன் டிவில்லியர்சை யார்க்கரில் வீழ்த்திய விதம் சிலிர்க்க வைத்தது. 16 ஆட்டங்களில் 16 விக்கெட் கைப்பற்றிய அவருக்கு அதன் மூலம் அவுஸ்திரேலிய 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் கால்பதிக்கும் அதிர்ஷ்டமும் கிட்டியுள்ளது.

 வருண் சக்ரவர்த்தி (கொல்கத்தா): தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி ரூ.4 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். சுழலில் 7 விதமாக வீசும் திறன் படைத்த வருண் சக்ரவர்த்தி இந்த ஐ.பி.எல்.-ல் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் (டெல்லிக்கு எதிராக) வீழ்த்திய ஒரே ஒரு பந்து வீச்சாளர் ஆவார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியை இரண்டு முறை கிளீன் போல்டு ஆக்கியது சிறப்பு அம்சமாகும். 28 வயதான வருண் 13 ஆட்டத்தில் 17 விக்கெட்டுகளை (ஓவருக்கு சராசரி 6.84 ஓட்டம் விட்டுக்கொடுத்தார்) அறுவடை செய்தார். அந்த அணிக்காக ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்சை விட (14 ஆட்டத்தில் 12 விக்கெட்) இது அதிகமாகும். ஐ.பி.எல்.-ல் கலக்கியதால் வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்கும் தேர்வானார். துரதிர்ஷ்டவசமாக காயத்தால் விலக நேரிட்டது.

 தேவ்தத் படிக்கல் (பெங்களூரு): கர்நாடக அணிக்காக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடிய 20 வயதான தேவ்தத் படிக்கல் ஐ.பி.எல்.-ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக பிரமாதமாக பேட்டிங் செய்து கவனத்தை ஈர்த்தார். 15 ஆட்டத்தில் 5 அரைசதம் உள்பட 473 ஓட்டங்கள் குவித்த அவர் இந்த சீசனில் வளரும் வீரருக்கான விருதைச் தட்டிச் சென்றார். ஐ.பி.எல்.-ல் அறிமுக தொடரிலேயே சர்வதேச போட்டியில் ஆடாத ஒரு இந்தியர் திரட்டிய அதிக ஓட்டங்கள் இது தான். இவரை ரூ.20 லட்சத்திற்கு தான் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இஷான் கிஷன்(மும்பை): ஜூனியர் உலக கோப்பை போட்டியின் மூலம் ஏற்றம் கண்ட ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான இஷான் கிஷன் மும்பை அணியின் வெற்றிப்பயணத்தில் முக்கிய வீரராக அடையாளம் காணப்பட்டார். 14 ஆட்டத்தில் 4 அரைசதம் உள்பட 516 ஓட்டங்கள் சேர்த்த அவர் அதிக சிக்சர் நொறுக்கிய வீரருக்கான (30 சிக்சர்) விருதை பெற்றார். இந்த சீசனில் மும்பை அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்தவரான இவரது ஊதியம் ரூ.6 கோடியே 20 லட்சம் ஆகும்.

 ருதுராஜ் கெய்க்வாட்(சென்னை): சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்ட மராட்டியத்தை சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட்டை ரெய்னா விலகியதும் 3-வது வரிசையில் களம் இறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரை சரியாக பயன்படுத்த முடியாமல் போய் விட்டது. இருப்பினும் கடைசி 3 ஆட்டங்களில் 3 அரைசதங்கள் (6 ஆட்டத்தில் 204 ஓட்டங்கள்) விளாசி அசத்தினார். பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக கப்டன் டோனியால் புகழப்பட்ட 23 வயதான ருதுராஜ் அடுத்த ஐ.பி.எல்.-ல் நிச்சயம் சென்னை அணியில் தக்கவைக்கப்படுவார் என்று நம்பலாம். 

  ஆல்-ரவுண்டர் ராகுல் திவேதியா (ராஜஸ்தான்), சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் (பஞ்சாப்) ஆகியோரின் செயல்பாடும் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது.

Thursday, November 12, 2020

டெல்லியால் கைவிடப்பட்ட போல்ட் சாதனை


 

ட்ரென்ட் போல்ட் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர். புதிய பந்தில் ஸ்விங் செய்வதில் உலகில் முன்னணியில் இருப்பவர். அவர் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் முதன்முறையாக இடம் பெற்று 18 விக்கெட்கள் வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

 
அடுத்த ஆண்டு காகிசோ ரபாடா டெல்லி அணியில் இணைந்தார். அவர் விக்கெட் வேட்டையாடி மிரட்டினார். ட்ரென்ட் போல்ட் அணியில் தன் முக்கியத்துவத்தை இழந்தார். சில போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. டெல்லி அணி அவரை மொத்தமாக ஒதுக்கியது.

 2020 ஐபிஎல் சீசனுக்கு முன் ஐபிஎல் அணிகள் வீரர்களை அணி மாற்றம் செய்யும் வாய்ப்பு இருந்தது. அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணிக்கு சிறந்த புதிய பந்தை வீசும் ஸ்விங் பந்துவீச்சாளர் தேவை என்பதால் டெல்லி அணிக்கு தேவைப்படாத ட்ரென்ட் போல்ட்டை தங்கள் அணிக்கு மாற்றிக் கொள்ள வலை வீசியது.

டெல்லி அணி அவரை பணம் பெற்றுக் கொண்டு மும்பை அணியிடம் தாரை வார்த்து விட்டதாக அப்போது கூறப்பட்டது. 2020 ஐபிஎல் தொடரில் ட்ரென்ட் போல்ட் மும்பை அணிக்கு முதல் ஓவரை வீசினார். பவர்பிளே ஓவர்களில் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்தார் அவர்.

இந்த ஒரே சீசனில் போட்டிகளின் முதல் ஓவரில் மட்டும் அவர் 8 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார். இறுதிப் போட்டியில் தன் பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவருக்கு இறுதிப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

 மும்பை இந்தியன்ஸ் எப்படி சரியாக டெல்லி அணியின் வீரரை சுமார் ஒரு மாதத்துக்கு முன்பே விலைக்கு வாங்கி அதே அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தியது என ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். அம்பானியின் அணி என்பதால் இதெல்லாம் சகஜம் தான் என கிண்டல் செய்தும் வருகின்றனர்.


 இதில் பரிதாப நிலையை அடைந்தது டெல்லி அணிதான். நல்ல வீரரை தவறாக கணித்து வெளியேற்றியதோடு, அவரே தங்கள் அணிக்கு 2020 ஐபிஎல் இறுதிப் போட்டியில் எமனாகவும் வருவார் என அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்து இருக்க மாட்டார்கள்.

Wednesday, November 11, 2020

ஐந்தாவது முறை சம்பியனானது மும்பை


 

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றை பெற்ற மும்பை 5 ஆவது முறையாக சம்பியனானது.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் கடந்த 2 மாதங்களாக நடந்து வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், டெல்லி கேப்பிட்டல்சும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

 மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள்  துபாயில் பலப்பரீட்சைசெய்தன. டெல்லி அணியில் மாற்றம் இல்லை. மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக ராகுல் சாஹருக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டார். டெல்லி அணியில் அதிகமான இடக்கை வீரர்கள் அங்கம் வகித்ததால் அதை மனதில் கொண்டு ‘ஆப்-பிரேக்’ வீசும் ஜெயந்த் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.


நாணயச்சுழற்சியில்  ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். இதன்படி மார்கஸ் ஸ்டோனிசும், ஷிகர் தவானும் டெல்லி அணியின் இன்னிங்சை தொடங்கினர். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய  முதல் பந்திலேயே ஸ்டோனிஸ் (0) விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். சற்றே எழும்பி வந்த பந்து அவரது ப‌ட்டின் விளம்பில் பட்டு விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கின் கையில் சிக்கியது. அடுத்து வந்த ரஹானேவும் (2 ஓட்டங்கள்) பவுல்ட்டின் பந்து வீச்சுக்கு இரையானார். மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் (15 ஓட்டங்கள்) ஜெயந்த் யாதவின் சுழலில் முட்டிப்போட்டு விளாச முயற்சித்த போது பந்து ஸ்டம்பை தாக்கியது.


ஓட்டங்க‌ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (3.3 ஓவர்) இழந்து டெல்லி தள்ளாடியது. இந்த நெருக்கடியான சூழலில் க‌ப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டும் கைகோர்த்து அணியை மோசமான நிலைமையில் இருந்து மீட்டெடுத்தனர். அதே சமயம் ஏதுவான பந்துகளை விரட்டியடிக்கவும் தவறவில்லை. குருணல் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் ரிஷாப் பண்ட் 2 சிக்சர்களை பறக்க விட்டார். இந்த சீசனில் முதல்முறையாக அரைசதம் எட்டிய ரிஷாப் பண்ட்  56 ஓட்டங்களில் (38 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கவுல்டர்-நிலேவின் பந்து வீச்சில் தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். ஸ்ரேயாஸ்-பண்ட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 96 ஓட்டங்கள் எப்படியும் 170 ஓட்டங்களை நெருங்குவார்கள் என்று கணிக்கப்பட்ட நிலையில் அடுத்து வந்த வீரர்கள் ள் மும்பையின் துல்லியமாஓட்டக்களிலும், அக்ஷர் பட்டேல் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ரபடா (0) ரன்-அவுட் ஆனார். கடைசி வரை மல்லுகட்டி நின்ற ஸ்ரேயாஸ் அய்யர் 65 ஓட்டங்கள் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 156 ஓட்டங்கள் அடித்தது. மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும், நாதன் கவுல்டர்-நிலே 2 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஜஸ்பிரித் பும்ராவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.


 157 ஓட்டங்கள் இலக்கை நோக்கி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் களம் புகுந்தனர். இருவரும் டெல்லி பந்து வீச்சை துவம்சம் செய்தனர். ரபடாவின் ஒரே ஓவரில் டி காக் 3 பவுஓட்டங்ரன்கள் விளாசி ஆட்டத்தை முழுமையாக டெல்லியிடம் இருந்து தட்டிப்பறித்தனர். டி காக் 20 ரன்களில் (12 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார். அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார்.

டெல்லி பந்து வீச்சாளர்களை மிரள வைத்த ரோகித் சர்மாவும் அதிரடி காட்ட அணி வெற்றியை நோக்கி வேகமாக பயணித்தது. பிரவீன் துபேவின் ஓவரில் ரோகித் சர்மா சர்வ சாதாரணமாக சிக்சர்களை கிளப்பினார். இதற்கிடையே ரோகித் சர்மாவுக்காக சூர்யகுமார் யாதவ் (19 ஓட்டங்கள்) தனது விக்கெட்டை ரன்-அவுட்டில் தியாகம் செய்தார்.


 

வெற்றியை நெருங்கிய சமயத்தில் ரோகித் சர்மா (68 ஓட்டங்கள், 51 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த பொல்லார்ட் (9 ஓட்டங்கள்), ஹர்திக் பாண்ட்யா (3 ஓட்டங்கள்) எடுத்து ஆட்டமிழந்தாலும் மும்பைக்கு எந்த சிக்கலும் எழவில்லை. 

மும்பை அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்கள் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. இஷான் கிஷன் 33 ஓட்டங்களுடனும் (19 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), குருணல் பாண்ட்யா ஒரு ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.

மும்பை அணி கோப்பையை உச்சிமுகர்வது இது 5-வது முறையாகும். ஏற்கனவே 2013, 2015, 2017, 2019-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருக்கிறது. ஐ.பி.எல். வரலாற்றில் வேறு எந்த அணியும் 3 முறைக்கு மேல் கோப்பையை வென்றதில்லை. இந்த வகையில் மும்பை க‌ப்டன் ரோகித் சர்மா ஐ.பி.எல். வரலாற்று புத்தகத்தில் இடம் பிடித்து விட்டார். அதே சமயம் முதல்முறையாக இறுதிசுற்றுக்குள் நுழைந்திருந்த டெல்லி அணியின் கனவு தகர்ந்து போனது.


முதல்முறையாக....

* மும்பை அணி இதற்கு முன்பு கோப்பையை கைப்பற்றிய 4 முறையும் முதலில் துடுப்பெடுத்தாடி வெற்றி பெற்றிருந்தது. முதல்முறையாக இந்த சீசனில் 2-வது பேட்டிங்கில் அசத்தியிருக்கிறது.

* மும்பை க‌ப்டன் ரோகித் சர்மாவுக்கு இது 200-வது ஐ.பி.எல். ஆட்டமாகும். சென்னை கேப்டன் டோனிக்கு (204) அடுத்து இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.


* 4 ஆண்டுக்கு ஒரு முறை வரும் ஒவ்வொரு லீப் வருடத்திலும் (366 நாட்களை கொண்டது) புதிய அணி தான் ஐ.பி.எல். கோப்பையை வெல்கிறது. அந்த வகையில் இந்த லீப் ஆண்டில் டெல்லி அணி முதல்முறையாக கோப்பையை வெல்லும் என்ற கணிப்பை மும்பை பொய்யாக்கி விட்டது.