Wednesday, June 19, 2024

யூரோ கிண்ணப் போட்டியில் ஜோர்ஜியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது துருக்கி

ஸ்டேடியன் டார்ட்மண்டில் நடந்த குரூப் எஃப் இன் முதல் ஆட்டத்தில்  ஜோர்ஜியாவை எதிர்த்து விளையாடிய துருக்கி  3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

துருக்கி அதைத் தொடங்கியதுசெவ்வாயன்று BVB ஸ்டேடியன் டார்ட்மண்டில் நடந்த குரூப் எஃப் இன் முதல் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜியாவுக்கு எதிராக யூரோ 2024 பிரச்சாரம் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

25வது நிமிடத்தில் மெர்ட் முல்டர், பாக்ஸின் விளிம்பில் இருந்து ஒரு அபாரமான  கோல் அடித்தார். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, கெனன் யில்டிஸ்  அடித்தகோல்  ஆஃப்சைடில் இருப்பதைக் கண்டறிந்த பிறகு கோல் நிராகரிக்கப்பட்டது.

ஜோர்ஜியா  வீரர் ஜார்ஜஸ் மிகாடாட்ஸே கோல் அடித்து சமப்படுத்தினார்.

இரண்டாவது பாதியில்,துருக்கி வீரர்  அர்டா குலேர்     கோலை அடித்ததன் மூலம் வரலாற்றை எழுதினார்.

 ஐரோப்பிய சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (19 ஆண்டுகள் மற்றும் 114 நாட்கள்) தனது அறிமுகத்திலேயே கோல் அடித்த இளைய வீரர் ஆனார் குலேர்  .  2004 இல் கிறிஸ்டியானோ ரொனால்டோ 19 ஆண்டுகள் மற்றும் 128 நாட்களில் செய்த சாதனையை முறியடித்தார்.

கூடுதல் நேரத்தில் கெரெம் அக்துர்கோக்லு அடித்த கோல் மூலம்     3-1 என்ற கோல் கணக்கில் துருக்கி  வெற்றி பெற்றது.

Tuesday, June 18, 2024

நிக்கோலஸ் பூரானின் வெறியாட்டத்தால் கலங்கி நின்ற ஆப்கானிஸ்தான்

ரி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று  கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள்  104  ஓட்டங்களால்  வெற்றி பெற்றது.

 நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  ஆப்கானிஸ்தான் அணியின் கேடன் ரஷீத் கான் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். முதலில் விளையாடிய  மேற்கு இந்திய அணி துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய பிரெண்டன் கிங் 7 ஓட்டங்களில் வெளியேற மூன்றாவது வீரராக களம் புகுந்த நிக்கோலஸ் பூரான் அதிரடியில் வெளுத்து வாங்கினார்.

 நிக்கோலஸ் பூரானின் ஆட்டத்தை பார்த்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் கதி கலங்கிவிட்டனர். இந்த போட்டியில் 53 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 98 ஓட்டங்கள் குவித்து பயம் காட்டினார்.

கடைசி ஓவரின் போது அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் எதிர்பாராவிதமாக ரன் அவுட்டாகி அவர் வெளியேறினார். 

 20 ஓவர்கள் விளையாடிய  மேற்கு இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 218  ஓட்டங்கள் எடுத்தது.

219 என்ற பிரமாண்ட  வெற்றி என்ற மாபெரும் இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மட்டுமேஎடுத்தது. 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  மேற்கு இந்திய  அணி அபார வெற்றி பெற்றது.

ஒலிம்பிக்கிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட டோங்கா கைட்ஃபோய்லர் விபத்தில் மரணம்

 பரிஸ் ஒலிம்பிக்கில் டோங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்ததெரிவான அமெரிக்காவில் பிறந்த 18 வயதானகைட்ஃபோய்லர் ஜேஜே ரைஸ் டைவிங் விபத்தில் இறந்தார்.

ரைஸின் தந்தை டேரன் ரைஸ் தனது மகனின் மரணத்தை திங்களன்று மாதங்கி டோங்கா செய்தித்தாளுக்கு உறுதிப்படுத்தினார்.

ஜாக்சன் ஜேம்ஸ் ரைஸ் ஒலிம்பிக் போட்டிகளில் டோங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் காகசியன் ஆனார். அவரது மரணம் டோங்கா தீவுக்கூட்டத்தில் உள்ள ஹாபாய் தீவில் உள்ள ஃபலேலோவாவில் சனிக்கிழமை நிகழ்ந்தது.அவர் படகில் இருந்து   டைவிங் செய்து கொண்டிருந்தபோது மரணமானார்.

ரைஸ் பிரிட்டனின்  பெற்றோருக்கு  அமெரிக்காவில் பிறந்தார், ஆனால் அவரது பெற்றோர் ஒரு சுற்றுலா விடுதியை நடத்தும் ஹாபாயில் வளர்ந்தார். அவர் டிசம்பரில் நடந்த சைல் சிட்னி நிகழ்வில் எட்டாவது இடத்தைப் பிடித்து தனது ஒலிம்பிக் இடத்தைப் பெற்றார்.

ஸ்லோவாக்கியாவிடம் பெல்ஜியம் அதிர்ச்சித் தோல்வி


  ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் காட்டு குரூப் D இல் ஸ்லோவாக்கியாவிடம் பலம் வாய்ந்த  பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. வீடியோ மதிப்பாய்வு மூலம் இரண்டு ரொமேலு லுகாகு கோல்கள் நிராகரிக்கப்பட்டன.

ஸ்லோவாக்கியா ஏழாவது நிமிடத்தில் முன்னோக்கி இவான் ஷ்ரான்ஸ் ஒரு கோலை அடித்தார்.  62வது நிமிடத்தில்,  லுகாகுவின் முதல் 'கோல்' ஒரு வீடியோ மதிப்பாய்வில் ஆஃப்சைடு இருப்பதைக் கண்டறிந்து நிராகரிக்கப்பட்டது.

86வது  நிமிடத்தில் அடித்த கோல்  அடிக்க முன்னர் கையில் பட்டதால் நிராகரிக்கப்பட்டது. ஒரு போட்டியில் இரண்டு  கோல்கள் நிராகரிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த யூரோ கிண்ணப் போட்டியில்    லுகாகு ,  14 கோல்கள்  அடித்தார்.   பெல்ஜியத்திற்காக 85 கோல்களை அடித்துள்ளார் .

  டொமினிகோ டெடெஸ்கோவின் பயிற்சியின் கீழ் பெல்ஜியம் 15 ஆட்டங்களில் முதல் தோல்வியைச் சந்தித்தது. கொலோனில் சனிக்கிழமை மாலை நடைபெறும் ஆட்டத்தில் ருமேனியாவை எதிர்கொள்கிறது.

 

Monday, June 17, 2024

வினோதமான உலக சாதனையுடன் இலங்கை வெற்றி

 செயின்ட் லூசிய நகரில்  நடந்த ரி20 உலகக்கிண்ணப் போட்டியில்  நெதர்லாந்தை எதிர்த்து விளையாடிய இலங்கை  38  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில்  வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசியது.   முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை   20 ஓவர்களில்  6 விக்கெற்களை இழந்து 201  ஓட்டங்கள் எடுத்தது அசலங்கா 46, குசால் மெண்டிஸ் 46 ஓட்டங்கள் எடுத்தனர்.   

 202 ஓட்டங்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே இலங்கை அணியின் நேர்த்தியான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறியது.   சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 16.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 118  ஓட்டங்கள் எடுத்தது.    அதிகபட்சமாக கப்டன் ஸ்காட்எட்வர்ட்ஸ் 31, மைக்கேல் லேவிட் 31 ஓட்டங்கள் எடுத்தனர். இலங்கை சார்பில்  நுவான் துசாரா 3, கப்டன் ஹசரங்கா 2, மதீஸா பதிரனா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை ரி20 உலகக் கோப்பையில் தங்களுடைய 2வது பெரிய வெற்றியை பதிவு செய்து அசத்தியது.   நிஷாங்கா 0, குசால் மெண்டிஸ் 46, கமிண்டு மெண்டிஸ் 17, டீ சில்வா 34, அசலங்கா 46, ஏஞ்சேலோ மேத்தியூஸ் 30*, ஹஸரங்கா 20* ஓட்டங்கள் எடுத்தனர். ஆனால் யாருமே 50 ஓட்டங்களைத் தாண்டி அரை சதமடிக்கவில்லை.ரி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அரை சதம் அடிக்காமலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற வினோதமான உலக சாதனையை இலங்கை சமன் செய்தது. -

 இதற்கு முன் இதே உலகக் கோப்பையில் பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவும் அரை சதம் கூட அடிக்காமல் 201/7 ஓட்டங்கள் குவித்து அந்த சாதனையை படைத்துள்ளது. அத்துடன் இந்த தொடரில் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்த இலங்கை 4 போட்டிகளின் முடிவில் 3 புள்ளிகளை பெற்றது.  குரூப் டி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்து தப்பிய இலங்கை 3வது இடத்தைப் பிடித்தது.      

அடங்க மறுத்த அயர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்


 ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில்  3 விக்கெற்களால்  வெற்றி பெற்றது பாகிஸ்தான். சூப்பர் 8 க்குத் தகுதி பெறாத பாகிஸ்தான் ஆறுதல்  வெற்றிக்காகப் போராடியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் பந்து வீசைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெட்த்தாடிய அயர்லாந்து 6.3 ஓவர்களில் 6 விக்கெகளை இழந்து 32  ஓட்டங்கள் எடுத்தது.   அயர்லாந்து 50 ஓட்டங்கலைத் தாண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் அப்போது கெரத் டிலானி அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 31    அடுத்ததாக வந்த மார்க் அடைர் 15,  மெக்கார்த்தி 2  ஓட்டங்களில் ஆடமிழந்தனர்.

  அயர்லாந்து 100  ஓட்டங்களைத் தாண்டாது  என்று நம்பப்பட்டபோது.  கடைசி நேரத்தில் அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட ஜோஸ்வா லிட்டில் 22* (18) ஓட்டங்கள் குவித்தார். அவருடன் பெஞ்சமின் 5* (20) ஓட்டங்கள் எடுத்ததால் 20 ஓவரில் முழுமையாக தாக்குப் பிடித்த அயர்லாந்து  9  விக்கெற்களை இழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் சாகின் அப்ரிடி 3, இமாத் வாசிம் 3, முகமது அமீர் 2 விக்கெட்கள் எடுத்தனர்.

107 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு  5 விக்கெற்களை இழந்து 57  ஓட்டங்கள் எடுத்து தோல்வியை  நோக்கிச் சென்றபோது  3வது இடத்தில் களமிறங்கிய கப்டன் பாபர் அசாம் நங்கூரமாக விளையாடினார். இருப்பினும் அவருடன் சேர்ந்து விளையாடிய அப்பாஸ் அப்ரிடி 17 ஓட்டங்ளுடன்  முக்கிய நேரத்தில் அவுட்டானார். அதனால் மீண்டும் வெற்றி கேள்விக்குறியான போது ஷாகின் அப்ரிடி 2 சிக்ஸருடன் 13* (5) ஓட்டங்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் பாபர் அசாம் 32* (34)  ஓட்டங்கள் எடுத்ததால் 18.5 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த உலகக் கிண்ணப் போட்டி  பாகிஸ்தானுக்கு வேதனையாகவும் ரணகளமாகவும் அமைந்தது என்றே சொல்லலாம். இருப்பினும் இப்போட்டியில் அடித்த 32*  ஓட்டங்களையும் சேர்த்து ரி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் கப்டனாக 549 ஓட்டங்கள் குவித்துள்ளார். ரிடி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ஓட்டங்கள் அடித்த  இந்தியாவின்கப்டன்    எம்எஸ் டோனி சாதனையை உடைத்த பாபர் அசாம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

பரிஸ் ஒலிம்பிக்கில் இங்கிலாந்து அணிக்கு ஆண்டி முர்ரே தலைமை தாங்குகிறார்

 ஒலிம்பிக் சாம்பியனான ஆண்டி முர்ரே பிரிட்டனுக்கான பாரிஸ் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளதாக பிரிட்டிஷ் ஒலிம்பிக் சங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

லண்டன் 2012 மற்றும் ரியோ 2016 விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற 37 வயதான ஸ்காட், ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் பட்டங்களை தொடர்ச்சியாக வென்ற ஒரே வீரர் ஆவார்.இது முர்ரேயின் கடசி ஒலிம்பிக் போட்டியாக  இருக்கும்.     ஜாக் டிராப்பர், கேமரூன் நோரி   டான் எவன்ஸ் ஆகியோருடன்  ஆண்டி முர்ரே  ஒலிம்பிக்கில் பங்கு பற்றுகிறார்.

முன்னாள் அமெரிக்க ஓபன் சம்பியனான எம்மா ரடுகானு இந்த வரிசையில் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு தனது மணிக்கட்டு மற்றும் கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திரும்பி வரும் ராடுகானு, அணிக்கு தானாக தகுதி பெற முடியாத அளவுக்கு குறைந்த தரவரிசையில் இருந்தவர், வைல்டு கார்டு வாய்ப்பை நிராகரித்தார்.

 இங்கிலாந்து வீராங்கனை கேட்டி போல்டர் மகளிர் ஒற்றையர் போட்டியில் ஒலிம்பிக்கில் அறிமுகமாகிறார். டோக்கியோ விளையாட்டு ஒலிம்பியன்களான நீல் ஸ்குப்ஸ்கி மற்றும் ஜோ சாலிஸ்பரி ஆகியோர் ஆடவர் இரட்டையர் பிரிவில் போட்டியிடுகின்றனர்.

ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 4 வரை பரிஸில் உள்ள ரோலண்ட் கரோஸில் நடைபெறுகிறது