Tuesday, September 9, 2025

ஹொங்கொங்கை வீழ்த்தி ஆப்கான் சாதனை வெற்றி

 அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆசியக்கிண்ண கிறிக்கெற் போட்டியில்  ஹொங்கொங்கை எதிர்த்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 94 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற ஆப்கானிஸ்தான்  முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து  188  ஓட்டங்கல் எடுத்தது.  189  என்ற  வெற்றி இலக்குடன் களம்  இறங்கிய ஹொங்கொங்  20  ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 94 ஓட்டங்கள் எடுத்தது.

ஆப்கானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான செதிகுல்லா 52 பந்துகளில் அட்டமிழக்காமல் 73  ஓட்டங்கள் எடுத்தார். முகமது நபி 33  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  ஐந்தாவது விக்கெற்றில்  செதிகுல்லாவுடன்  இணைந்த ஒமர்சாய் 21 பந்துகளில் அதிரடியாக 53 ஓட்டங்கள் எடுத்தார்.  ரஹமதுல்லா 8  ஓட்டங்களுடன் வெளியேறினார். எனைய நால்வரும் அதற்குக் குறைவான ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். ஹொங்கொங் வீரர்களான ஆயுஸ் சுக்லா, கின்ஷிட் ஷா ஆகிய இருவரும் தலா   2  விக்கெற்களை கைப்பற்றினர்.

ஆப்கான் வீர பாபர் ஹயட்  அதிக பட்சமாக 39 ஓட்டங்கள் எடுத்தார். ஹொங்கொங் அணித் தலைவர் யாசிம் முர்தாசா 16  ஒட்டங்கள் எடுத்தார். ஏனையவர்கள்  ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். ஆப்கான் வீரர்களான் பரூக்கி, குல்பதின் நைப் தலா  ஆகியோர் தலா 2 விக்கெற்களை வீழ்த்தினர்.

2016 ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியில் ஹொங்கொங் அணியை 66 ஒட்ட வித்தியாசத்தில்  வென்றதே ஆப்கானிஸ்தானின் முந்தைய சாதனையாகும்.

ரி20 யில் 20 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த வீரராக ஆப்கானின் அஸ்மத்துல்லா உமர் சாய் சாதனை படைத்தார். ஆப்கானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் செடிகுல்லா அடல் கொடுத்த மூன்று கச்களை ஹொங்கொங்  வீரர்கள் தவற விட்டனர்.  அதே வேளை இரண்டு  ரன் அவுட்களைத்தவறவிட்டனர். 

 ஆட்ட நாயகன்  விருதை அஹமதுல்லா உமர்சாய்  பெற்றுக்கொண்டார்.

மக்கள் அலையால் குலுங்கியது மதுரை சாதித்துக் காட்டினார் விஜய்

 மக்கள் அலையால் குலுங்கியது மதுரை

 சாதித்துக் காட்டினார் விஜய்

தமிழ்க வெற்றிக் கழகத்தின் இரண்டாவது  மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில்  கடந்த வியாழக்கிழமை  இலட்சக் கணக்கான தொண்டர்களின் 506 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான திடலில் நடைபெற்றது.  இலட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி இருந்த இந்த கூட்டத்தில் விஜய் வழக்கம் போல் தீம் சாங் வெளியிட்டு, ரேம்ப் வாக் சென்று தனது உரையை துவக்கினார். விஜய் பேசுகையில், தங்களின் கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக தான் என்றும் மீண்டும் வலியுறுத்தி பேசினார். பாஜக மற்றும் திமுக.,வை மீண்டும் கடுமையாக தாக்கி பேசினார் விஜய். பாஜக., உடன் கண்டிப்பாக கூட்டணி கிடையாது என்றும் விஜய் அறிவித்து விட்டார்.

 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு, ரசிகர்களின் பெரும் கூட்டம் காரணமாக முன்கூட்டியே 3 மணிக்கே தொடங்கியது.

  நடிகர் விஜயின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர்  ஷோபா ஆகியோருக்கும் மேடையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. விஜயின் மனைவியும் மகனும் மாநாட்டில் பங்கு பற்றவில்லை.

243 தொகுதிகளிலும் தான்  போட்டியிடுவதாக நினைத்து வாக்களிக்குமாரு வேண்டுகோள் விடுத்தார்.  இதன்  மூலம்  கூட்டணி இல்லை என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார் விஜய்.

25  நிமிடங்கள் விஜய் பேசினார். வழக்கம் போல் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.பாஜக்வையும்  அவர் விட்டு வைக்கவில்லை. எட்ப்பாடி, ரஜினி ஆகியோரையும் சாதுவாக சாடினார்.

பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கார், விஜயகாந்த்  ஆகியோரையும்  துணைக்கு அழைத்திருந்தார். பெரியாரின் கொள்கையைக் கடைப்பிடிக்கும் விஜய்யின் தொண்டர்கள் மேடையில் யாகம் செய்தார்கள். அவர்கள் செய்த யாகம் வினோதமானது.  மழை வரக்கூடாது என விஜயின் ரசிகர்கள் யாகம் செய்தார்கள். மழை வேண்டி மக்களும், விவசாயிகளும் யாகம் செய்வது வழமையான சங்கதி.  அஜித்தின் கடவுட்  விஜயின் மாநாட்டுத் திடலில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

மதுரையில்  நின்றுகொண்டு  விஜயகாந்தை   புகழ்ந்து பேசினார்., "மதுரை என்றால் நினைவுக்கு வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். நமது வைகை ஆறுதான். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மதுரை மீனாட்சி அம்மன்.இந்த மண்ணோட உண்மையான குணம் உணர்வுப்பூர்வமான மண். இந்த மண்ணில் வாழும் மக்களும் உணர்வுப்பூர்வமான ஆட்கள் தான்"

"இந்த மண்ணில் கால் வைத்த பிறகு ஒருவரை பற்றி தான் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. சினிமானாலும், அரசியல் என்றாலும் சரி நமக்கு பிடித்தது எம்ஜிஆர்.அவரோடு பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அவரை போன்ற குணம் கொண்ட விஜயகாந்த்துடன் பழகும் நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவர் மதுரை மண்ணை சேர்ந்தவர் தான். அவரை மறக்க முடியுமா?." என்றார்.

  திமுகவை தாக்கிப் பேசிய விஜயின் பேச்சுகு அவரது தொண்டர்கள் ஆரவாரம் செய்தார்கள். ஒரு சில இடங்கலில் அவரது பேச்சு எல்லை மீறியது. இவ்ஜய் பேசிய சில கீழ்த்தரமான சொற்களால்   பெண்கள்  முகம் சுழித்தார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள், சித்தப்பா  எனப் பேசியதை கட்சிசார்பற்றவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். துப்புரவுப் பணியாளர்களின்  போராட்டம்  ப‌ற்றி விஜய் எதுவும் பேசவில்லை.அம்புலன்ஸ் சாரதியை எடப்பாடி மிரட்டியதை தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும்  கண்டித்தார்கள். விஜய் அதுபற்றி வாயைத் திறக்கவில்லை.

திமுகவையும் சீமானையும் கடுமையாகச் சாடிய விஜய் , அவர்களின் எதிர்ப்பு வாக்கைக் குறி வைக்கிறார்.

அதீத வெயில் காரணமாக   மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் உடநலக்குறைவு ஏற்பட்டிருந்தது. பலருக்கும் மாநாட்டு திடலிலேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிலருக்கு முதலுதவி மட்டும் போதுமானதாக இல்லை. இதையடுத்து சுமார் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்தளவுக்கு   மதுரையில் வெப்பம் மிக மோசமாகவே இருந்தது. ஒருவர் மாரடைப்பால்  இறந்துவிட்டார்.

மாநாடு ஆரம்பமாவதற்கு  முன்னர்  மின்சாரம் தாக்கி  இளைஞர்  ஒருவர் மரணமானார். 100 அடி கொடிக்கம்பம் நிறுத்தப்பட்ட போது கிறேன் அறுந்து  விழுந்தது.  உயிர்ச் சேதம் எதுவும்  ஏற்படவில்லை. அங்கு நின்ற கார் ஒன்று பலத்த சேதமடைந்தது.

பாரதீய ஜனதாவையும், அதிமுகவையும்  ஓரம் கட்டி, திமுக எதிர் தவெக என நிலைநாட்ட விஜய் முயற்சிக்கிறார்.

கடந்த காலங்களில் திமுக எதிர்ப்பு வாக்குகளை, அதிமுகவும் , சீமானும் பங்கு போட்டன. தனைத் தன்பக்கம் இழுக்க விஜய்  திட்டம் போடுகிறார். 

  திமுக எதிர்ப்பு வாக்குகளையும்,   சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து விஜய்யின் அரசியல்  நடவடிக்கை  இருப்பதாக அரசியல்   விமர்சகர்கள் கணிப்புகளை கூறுகிறார்கள்.

வழக்கமாக, திமுகவின் எதிர்ப்பு வாக்குகளின் ஒரு பகுதி பாஜகவுக்கம், பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளின் ஒரு பகுதி திமுகவுக்கும் செல்லும் நிலையில், இந்த இரு எதிர்ப்பு வாக்குகளில் விஜய் எவ்வளவு பெறப்போகிறார்? என்பதும் மிகப்பெரிய ஆர்வமாக உள்ளது.

அதேசமயம், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அவர்களது தரப்பில் அதிகாரபூர்வமாக கூறிவிட்டதால், இனி அதிமுகவும் தவெக கூட்டணிக்கு வர ஆர்வம் காட்டாது. அந்தவகையில், நாம் தமிழர், பாமக, தேமுதிக மற்றும் , கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு வலையை விரிக்க துவங்கியிருக்கிறது தவெக.

கடந்த முறை விஜய் நடத்தியிருந்த முதலாம் மாநாட்டில் திமுகவை மட்டுமே பிரதானமாக குறி வைத்து விஜய் பேசியிருந்தார்.

இந்த முறை  எடப்பாடி,ரஜினி, சீமான் ஆகியோருடன்  மோடியையும்  தாக்கிப் பேசினார்.

இலட்சக் கணக்காகத் திரண்ட மக்கள் வெள்ளம் வாக்காக மாறுமா என்பதை அறிய 2026 வரை காத்திருக்க  வேண்டும்.

உலகக்கிண்ண தகுதிச் சுற்றுக்கான ஜேர்மனி அணியில் மூன்று புதுமுகங்கள்,

  2026 ஆம் ஆண்டு   நடைபெறும் உலகக்  கிண்ண   தகுதிச் சுற்றுக்கான தொடக்கப் போட்டிகளுக்கான தனது 23 பேர் கொண்ட அணியை ஜேர்மனி தலைமைப் பயிற்சியாளர் ஜூலியன் நாகல்ஸ்மேன் புதன்கிழமை அறிவித்தார், சில அனுபவமிக்க வீரர்களை விடுவித்து மூன்று புதிய முகங்களை அறிமுகப்படுத்தினார்.

 ஸ்லோவாக்கியா , வடக்கு அயர்லாந்துக்கு ஆகியவற்றுக்கு எதிரான  போட்டிகளில்  புதிய வீரர்களுடன்  ஜேர்மனி களம் இறங்கும்.

ஆக்ஸ்பர்க்கைச் சேர்ந்த கோல்கீப்பர் ஃபின் டாமென், ஐன்ட்ராக்ட் பிராங்பேர்ட்டைச் சேர்ந்த டிஃபென்டர் நாம்டி கொலின்ஸ் ,மைன்ஸ் மிட்ஃபீல்டர் பால் நெபெல் ஆகிய மூவரும்  ஜேர்மனிய தேசிய அணியில் இடம் பிடித்துள்ளனர்.. இந்த மூவரும் ஏற்கனவே ஜேர்மனியின் இளைஞர் அணிகளில் பிரகாசித்துள்ளனர். கொலின்ஸ் ,நெபெல் ஆகிய இருவரும் இந்த கோடையின் தொடக்கத்தில் U21 ஐரோப்பிய சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார்கள்.

 , 2021 ஆம் ஆண்டில் முன்னாள் U21 ஐரோப்பிய சம்பியனாக டாமென் மதிப்புமிக்க அனுபவத்தைக் கொண்டு வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நேஷன்ஸ் லீக் பிரசாரத்தில் ஏமாற்றமளித்ததைத் தொடர்ந்து அணியை புத்துயிர் பெறச் செய்யும் நாகல்ஸ்மேனின் உறுதிமொழியை அவர்களின் அழைப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

ரியல் மாட்ரிட்டின் அன்டோனியோ ருடிகர், மைன்ஸின் நதியம் அமிரி, , விஎஃப்பி ஸ்டட்கார்ட் இரட்டையர்கள் ஏஞ்சலோ ஸ்டில்லர்   ஜேமி லெவெலிங் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்புகின்றனர்.   ரசிகர்கலுக்குப் பழக்கமான பல வீரர்கள் ஜேர்மனிய அணியில் இல்லை.

சமீபத்தில் பேயர்னை விட்டு வெளியேறிய பிறகு துருக்கியின் கலாட்டசரேக்குச் சென்ற‌ லெராய் சேன் சேர்க்கப்படவில்லை.  சேனின் வெளிநாட்டு குடிபெயர்வை சுட்டிக்காட்டி நாகல்ஸ்மேன் இந்த விடுபட்டதை நியாயப்படுத்தினார், விங்கர் இப்போது "ஐரோப்பாவின் உயர் மட்டத்திற்கு சற்று கீழே" ஒரு லீக்கில் போட்டியிடுகிறார் என்றும், திரும்ப அழைக்கப்படுவதற்கு அவர் "அங்கு இன்னும் தனித்து நிற்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.

அலெக்ஸாண்டர் பாவ்லோவிச், ராபின் கோசன்ஸ், திலோ கெஹ்ரர் , பெலிக்ஸ் நெமேச்சா ஆகியோர் பங்கேற்காத பிற வீரர்களாகும். காயங்கள் காரணமாக ஜமால் முசியாலா, கை ஹாவர்ட்ஸ், நிகோ ஷ்லோட்டர்பெக், முதல் தேர்வு கோல்கீப்பர் மார்க்-ஆண்ட்ரே டெர் ஸ்டீகன் போன்ற முக்கிய வீரர்களும் பங்கேற்கவில்லை.

ஜேர்மனி தனது தகுதிச் சுற்றுப் பயணத்தை வியாழக்கிழமை இரவு பிராட்டிஸ்லாவாவில் ஸ்லோவாக்கியாவுக்கு எதிராகத் தொடங்கி, மூன்று நாட்களுக்குப் பிறகு கொலோனில் வடக்கு அயர்லாந்தைச் சந்திக்கிறது.   வரலாற்று ரீதியாக, ஜேர்மனி  இரு எதிராளிகளுக்கும் எதிராக வலுவான சாதனையைப் படைத்துள்ளது: ஸ்லோவாக்கியாவுடன் 11 மோதல்களில் இருந்து எட்டு வெற்றிகள் , வடக்கு அயர்லாந்திற்கு எதிரான 19 போட்டிகளில் 13 வெற்றிகள்

ரமணி

ஆசியக் கிண்ண கிறிக்கெற் இன்று ஆரம்பம்

 17 ஆவது ஆசியக் கிண்ண கிறிக்கெற் தொடர் இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகிறது. அபுதாபியில் ஆரம்பமாகிறது. ரி20 வடிவத்தில் நடைபெறும் இப்போட்டித் தொடர் எதிர் வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை அபுதாபி, துபாய் ஆகிய மைதானங்களில் நடைபெறும்

A’ பிரிவு:

இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ,ஓமான்.

B’ பிரிவு:

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ,ஹொங்கொங்

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இரவு 8 மனிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது.

2025 ஆசியக் கிண்ண முதல் போட்டிக்கு வானிலை சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபுதாபியில் இன்று போட்டி நடைபெறும் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும். மழைக்கான வாய்ப்பு முற்றிலும் இல்லை என்பதால், ரசிகர்கள் ஒரு முழுமையான கிரிக்கெட் போட்டியை எதிர்பார்க்கலாம். வெப்பநிலை 30 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம், மேலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாகக் காணப்படும். இது பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக அமையக்கூடும்.

ஆசியக் கோப்பை வரலாற்றில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஹொங்கொங், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்ற சோகமான சாதனையை வைத்துள்ளது. அந்த அணி ஆப்கானிஸ்தானை கடைசியாக 2015-ல் தோற்கடித்தது. ஆனால், அதன்பிறகு ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட்டில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

சுழற்பந்து வீச்சில் பலம் வாய்ந்த ஆப்கானிஸ்தான் அணியைச் சமாளிப்பது,ஹொங்கொங்கிற்குப் பெரும் சவாலாக இருக்கும். தொடக்க ஆட்டக்காரர் அன்ஷுமன் ரத் சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஹாங்காங் அணி இந்தப் போட்டியில் சவால் விடுக்க முடியும். மறுபுறம், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத் என உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கானிஸ்தான் வலுவாக இருக்கிறது. 

Monday, August 25, 2025

காலையில் பலி மாலையில் விபத்து மதுரையில் கர்ஜித்த சிங்கம்

 காலையில் பலி மாலையில் விபத்து

மதுரையில் கர்ஜித்த சிங்கம் 

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்  தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரை, பரபத்தி பகுதியில் உள்ள 506 ஏக்கர் பரப்பளவில்  நேற்று வியாழக்கிழமை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தது.

  மாலை 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு,  இலட்சக்கணக்கான மக்கள் கூடியதால் முன்கூட்டியே 3 மணிக்கே தொடங்கியது.

மாநாட்டு அரங்கம் முழுவதும் தொண்டர்களாலும்,  ரசிகர்களாலும் நிரம்பி வழிந்தது.

மாநாட்டுக்காக  பதாகையைக் கட்டிய இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சுமார் 100 அடிஉயரமான கொடிக்கம்பம் நிலை நாட்டப்பட்ட போது கிறேன்  கேபிள் அறுந்ததால் கொடிக்கம்பம் விழுந்து கார்  ஒன்று  சேதமாகியது. கொடிக் கம்பத்துக்கு அருகே இருந்தவர்கள் சிதறி ஓடியதால் பெரும் ஆபத்து விலகியது.

விக்ரவாண்டியில் நடைபெற்ற முதலாவது   மாநில மாநாட்டில் கலந்துகொண்ட  நான்கு  இளைஞர்கள் பலியானார்கள். அப்போது விஜய் நேரில் செல்லவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.விக்ரவாண்டியைப் போன்று அசம்பாவிதம் எதுவும் நடகக்கூடாது என்பதில்  ஏற்பாட்டாளர்கள்  மிகுந்த அவதானத்துடன் இருந்தார்கள். ஆஅனால், அவர்களையும் மீறி அசம்பாவிதங்கள் நடந்துள்ளன.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் மாநாடு நடை பெற்றது.  அதிக வெப்பம்,  கட்டுக்கடங்காத கூட்டம் ஆகியவற்றால் சுமார் 60 பேர் மயங்கி விழுந்தார்கள்.  இருவர் மாரடைப்பால் மரணமானார்கள்.

 விஜயின் வருகைக்காக சுமார்  2  இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் காத்திருந்தார்கள்.

விஜயைக் கண்டதும்  ஆரவார கோஷம் வானைப் பிளந்தது. விஷேடமாக அமைக்கப்பட்ட  நடைபாதையில் கையை அசைத்தபடி விஜய் நடந்தார். விஜயைப் பார்த்த பின்னர் கூட்ட  மெது மெதுவாகக் கலையத் தொடங்கியது.

விஜயி  பேச்சைக் கேட்க அரசியல் ஆய்வாளர்கள் ஆவலாக  இருந்தார்கள். விஜய் பேசத் தொடங்கியதும் அவர் மீதிருந்த  திப்பு  ஒட்டுமொத்தமாகச் சரிந்து விட்டது.

முதல்வரை அங்கிள் என்றார் 

 பிரதமர் மோடியை நரேந்திர மோடிஜீ என்றார்.

விஜய்  பேசிய ஒரு சில சொற்களால் அங்கிருந்த  பெண்கள்  முகம் சுழித்தார்கள்.

விஜயின் முக்கிய எதிரி திமுகதான்.

பாரதீயா ஜனதா, அதிமுக ஆகிய கட்சிகளை ஒப்புக்கு திட்டினார்.

கமலையும், சீமானையும் கண்டபடி விமர்சித்தார். ரஜினியையும்  லேசகச் சீண்டிப்பார்த்தார்.

காமராஜரும், அண்ணாவும்  தனது அர்சியல் வழிகாட்டிகள் என விஜய் சொன்னார். காமராஜர் மீதும் அண்ணாவின் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள்.

காமராஜருக்கு  காங்கிரஸ் கட்சி இருக்க்கிறது.  அண்ணாவை திமுகவும், அதிமுகவும் பங்கு போட்டுள்ளன.

எம்.ஜி.ஆரையும், மதுரையின் மைந்த விஜயகாந்தையும் நினைவு படுத்தினார்.

அதிமுகவை விட்டு  எம்.ஜி.ஆரின் விசுவாசிகள்  வெளியேற மாட்டார்கள். விஜயகாந்துக்கு என தனியாக ஒரு கட்சி இருக்கிறது.

எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. தமிழகத்தின் 234  தொகுதிகளிலும் தவெக போட்டியிடும் சகல தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என்றார்.

அதிமுகவுடனும், பாரதீய ஜனதாவுடனும்  நடைபெற்ற பேச்சு வர்த்தை தோல்வியடைந்ததை சாதுரியமாக மறைத்துவிட்டார்  விஜய்.

அரசியல் ரீதியாகவும் ,கொள்கை ரீதியாகவும் விஜயை எதிர்க்கும் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் விஜயிக் குறி வைத்துள்ளன. ஆகையால் விஜய் நினைப்பது போல் இலகுவாக வெற்றியடைய முடியாது. விஜய் போட்டியிடும் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெறலாம். விஜய் எதிர்பார்ப்பது போல் 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

தமிழக வெற்றிக் கழகம் ஒரு வலிமையான அரசியல் சக்தி என்பதை நிரூபிக்கவும், தொண்டர்களை அணிதிரட்டவும் இந்த மாநாடு ஒரு முக்கிய சக்தியை வெளிப்படுத்தும் களமாக பார்க்கப்படுகிறது.

தவெகவின் ஐந்து கொள்கைத் தலைவர்கள் தவிர தற்போது புதிதாதக மறைந்த முதல்வர்களான அண்ணாதுரை , எம்ஜிஆர் ஆகியோரது படங்களும் இடம் பிடித்துள்ளன. இதில் அண்ணாதுரை திமுகவை நிறுவியவர். எம்ஜிஆர் அதிமுகவின் நிறுவனர் என்பது சுவாரஸ்யமானது.

மாநாட்டு வளாகத்தில் மிகப் பெரிய அளவில் பல்வேறு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்படன.. 70க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் , 200 சிசிடிவி கமராக்கள்,பெண்களுக்கு தனி இடங்கள், குடிநீர், கழிப்பறைகள் ,தாய்ப்பால் கொடுக்கும் அறைகள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் என்பன அமைக்கப்பட்டன.

தனக்கு இருக்கும் செல்வாக்கை விஜய் வெளிப்படுத்திவிட்டார். இந்த மக்கள் கூட்டம் வாக்காக மாறுமா என்பதை அறிவதற்கு 2026 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி உள்ளது.

மக்கள் அலையால் குலுங்கியது மதுரை சாதித்துக் காட்டினார் விஜய்

மக்கள் அலையால் குலுங்கியது மதுரை

 சாதித்துக் காட்டினார் விஜய்

தமிழ்க வெற்றிக் கழகத்தின் இரண்டாவது  மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில்  கடந்த வியாழக்கிழமை  இலட்சக் கணக்கான தொண்டர்களின் 506 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான திடலில் நடைபெற்றது.  இலட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி இருந்த இந்த கூட்டத்தில் விஜய் வழக்கம் போல் தீம் சாங் வெளியிட்டு, ரேம்ப் வாக் சென்று தனது உரையை துவக்கினார். விஜய் பேசுகையில், தங்களின் கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக தான் என்றும் மீண்டும் வலியுறுத்தி பேசினார். பாஜக மற்றும் திமுக.,வை மீண்டும் கடுமையாக தாக்கி பேசினார் விஜய். பாஜக., உடன் கண்டிப்பாக கூட்டணி கிடையாது என்றும் விஜய் அறிவித்து விட்டார்.

 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு, ரசிகர்களின் பெரும் கூட்டம் காரணமாக முன்கூட்டியே 3 மணிக்கே தொடங்கியது.

  நடிகர் விஜயின் பெற்றோர்களான எஸ்..சந்திரசேகர்  ஷோபா ஆகியோருக்கும் மேடையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. விஜயின் மனைவியும் மகனும் மாநாட்டில் பங்கு பற்றவில்லை.

243 தொகுதிகளிலும் தான்  போட்டியிடுவதாக நினைத்து வாக்களிக்குமாரு வேண்டுகோள் விடுத்தார்.  இதன்  மூலம்  கூட்டணி இல்லை என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார் விஜய்.

25  நிமிடங்கள் விஜய் பேசினார். வழக்கம் போல் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.பாஜக்வையும்  அவர் விட்டு வைக்கவில்லை. எட்ப்பாடி, ரஜினி ஆகியோரையும் சாதுவாக சாடினார்.

பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கார், விஜயகாந்த்  ஆகியோரையும்  துணைக்கு அழைத்திருந்தார். பெரியாரின் கொள்கையைக் கடைப்பிடிக்கும் விஜய்யின் தொண்டர்கள் மேடையில் யாகம் செய்தார்கள். அவர்கள் செய்த யாகம் வினோதமானது.  மழை வரக்கூடாது என விஜயின் ரசிகர்கள் யாகம் செய்தார்கள். மழை வேண்டி மக்களும், விவசாயிகளும் யாகம் செய்வது வழமையான சங்கதி.  அஜித்தின் கடவுட்  விஜயின் மாநாட்டுத் திடலில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

மதுரையில்  நின்றுகொண்டு  விஜயகாந்தை   புகழ்ந்து பேசினார்., "மதுரை என்றால் நினைவுக்கு வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். நமது வைகை ஆறுதான். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மதுரை மீனாட்சி அம்மன்.இந்த மண்ணோட உண்மையான குணம் உணர்வுப்பூர்வமான மண். இந்த மண்ணில் வாழும் மக்களும் உணர்வுப்பூர்வமான ஆட்கள் தான்"

"இந்த மண்ணில் கால் வைத்த பிறகு ஒருவரை பற்றி தான் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. சினிமானாலும், அரசியல் என்றாலும் சரி நமக்கு பிடித்தது எம்ஜிஆர்.அவரோடு பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அவரை போன்ற குணம் கொண்ட விஜயகாந்த்துடன் பழகும் நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவர் மதுரை மண்ணை சேர்ந்தவர் தான். அவரை மறக்க முடியுமா?." என்றார்.

  திமுகவை தாக்கிப் பேசிய விஜயின் பேச்சுகு அவரது தொண்டர்கள் ஆரவாரம் செய்தார்கள். ஒரு சில இடங்கலில் அவரது பேச்சு எல்லை மீறியது. இவ்ஜய் பேசிய சில கீழ்த்தரமான சொற்களால்   பெண்கள்  முகம் சுழித்தார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள், சித்தப்பா  எனப் பேசியதை கட்சிசார்பற்றவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். துப்புரவுப் பணியாளர்களின்  போராட்டம்  ற்றி விஜய் எதுவும் பேசவில்லை.அம்புலன்ஸ் சாரதியை எடப்பாடி மிரட்டியதை தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும்  கண்டித்தார்கள். விஜய் அதுபற்றி வாயைத் திறக்கவில்லை.