பிரேஸிலில் அடுத்த
ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு 32 நாடுகள்
தகுதி பெற்றுள்ளன.பீஃபாவில் அங்கத்துவம் வகிக்கும் 207 நாடுகளுக்கிடையே கடந்த
இரண்டு வருடமாக நடைபெற்ற தகுதி காண்போட்டிகள் நடைபெற்றன.
ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா,
அவுஸ்திரேலியா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபியன் தீவுகள்,
ஓசியானிக் தீவுகள் ஆகியவற்றுடன் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற நாடுகள் பிரேஸிலில் விளையாடுவதை உறுதிசெய்தன.தகுதி
காண்போட்டிகளில் இரண்டாம் இடம்பெற்ற சில நாடுகள் பிளேஓவ்
போட்டிகளில் மூலம் வெற்றி பெற்று உலகக்கிண்ணப் போட்டியின் விளையாடும் தகுதியைப்
பெற்றன.
ஐரோப்பாவிலிருந்து 13,
தென் அமெரிக்காவிலிருந்து 06, ஆபிரிக்கா விலிருந்து05, ஆசியாவிலிருந்து04,
வடஅமெரிக்கா மத்திய அமெரிக்கா கரிபியன் தீவுகளில் இருந்து04
நாடுகள் பிரேஸிலுக்குச் செல்லத் தயாராக உள்ளன.
ஓசியானிக் தீவுகளில்
இருந்து எந்தவொரு நாடும் தகுதி பெறவி ல்லை
உலகக்கிண்ண
உதைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற நாடுகளை எட்டு
பரிவுகளாகப் பரிக்கப்படும்.ஒருகுழுவில் நான்கு நாடுகள் விளையாடி முதல் இடம்பெறும்
இரண்டு நாடுகள் இரண்டாவது சுற்றிலிருந்து லீக்முறை ஆரம்பமாகும்.வெற்றி பெற்ற
நாடுகள் கால் இறுதி,அறை இறுதி சம்பியனாகும் போட்டி வரை முன்னேறும்.
உலகக்கிண்ண
உதைப்பந்தாட்டப் போட்டிகளில் தகுதி பெற்ற 32 நாடுகளும் நான்கு குழுக்காகப் பிரிக்கப்பட்டு
போட்டியிடும் நாடுகள் தெரிவு செய்யப்பட உள்ளன..குழு 1இல் பிரேஸில் , ஆர்ஜென்டீனா,கொலம்பியா,
உருகுவே,ஸ்பெயின்,ஜேர்மனி, பெல்ஜியம், சுவீடன் குழு2இல் நெதர் லாந்து,இத்தாலி, பொஸ்னியா,
இங்கிலா ந்து, போர்த்துக்கல், ரஷ்யா கி ரீஸ்,கொஸ் ரோரியா, குழு3
இல் பிரான்ஸ், சிலி,ஈக்கு வடோர், கானா கமரூன், ஜவொ ரிகா ,அல்ஜீரியா குழு 04 இல் ஜப்பான் அவுஸ்திரேலியா ஈரான் தென் கொரியா, அமெரிக்கா, கொஸ்
ரிகா, ஹொண்டூராஸ் மெக்சிகோ ஆகிய நாடுகளும்
உள்ளன.
எதிர்வரும் 6 ஆம் திகதி
போட்டியிடும் நாடுகளின் தெரிவு நடைபெறுகிறது
2 comments:
முதல் பிரிவு மட்டும் ‘பெரிய’ அணிகளாக இருப்பது போல் தெரிகிறதே. அப்படியா..?
முதல் இரண்டு பிரிவுகளும் பெரிய அணிகள்.முதல் பிரிவிலிருந்து ஒருநாடும் இரண்டாவது,மூன்றாவது நான்காவது பிரிவுகளிலிருந்து தலா ஒருநாடும் ஒருகுழுவில்போட்டியிட உள்ளன.
Post a Comment