Monday, February 26, 2024

சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட நவல்னி


 ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சில பகீர் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புட்தினை கடுமையாக விமர்சித்து வந்த அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த வாரம் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை ரஷ்யச் சிறை துறை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

நவல்னியின் குடும்பத்தினர் இதை கொலையாக இருக்கும் என்று சந்தேகிக்கின்றனர். ரஷ்ய அரசே இதற்குக் காரணம் என்றும் கூறுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி பைடன் வெளிப்படையாக இந்த மரணத்திற்கு புட்தின் தான் காரணம் எனச் சாடியிருந்தார்.

இந்த மரணம் தொடர்பாக சில பரபர தகவல்கள் வெளியாகியுள்ளது. இதயத்தில் வந்து விழுந்த ஒரே ஒரு வலுவான குத்தினால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாகச் சோவியத் கால உளவு அமைப்பான கேஜிபி தனது இலக்குகளை இப்படி தான் காலி செய்வார்கள். இப்போது அதை முறையைப் பயன்படுத்தி நவல்னி கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் சிறை அதிகாரி ஒருவர் பிரபல பிரிட்டன் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். நவல்னியின் உடலில் சில காயங்கள் காணப்பட்டதாக ரஷ்யாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட மற்றும் மனித உரிமை ஆர்வலர் விளாடிமிர் ஓசெக்கின் தெரிவித்தார். அந்த காயம் கேஜிபி பயன்படுத்தும் ஒன்-பன்ச் கொலை முறையுடன் ஒத்துப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த நபர் மேலும் கூறுகையில், "இது கேஜிபி சிறப்புப் படை பயன்படுத்தும் பழைய முறை. உடனடியாக ஒருவரைத் தீர்த்துக் கட்ட இதயத்தின் மையத்தில் குத்த கேஜிபி ஏஜெண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இது கேஜிபியின் தனிச்சிறப்பாக இருந்தது.

: இந்த வகை காயத்தைப் பார்த்தாலே இது கேஜிபி வேலை தான் என்பது தெரியும் அதுதான் அவர்களின் ஹால்மார்க். நவல்னி இருந்த சிறையில் கேஜிபி அதிகாரிகளின் நடமாட்டம் இருந்ததையும் நம்மால் மறுக்க முடியாது. இணக்கு கிடைத்த தகவல்கள் படி பல நாட்கள் திட்டமிட்டு அந்த சிறப்பு ஆப்ரேஷனை (நவல்னியை கொல்வது) நடத்தியுள்ளனர். மேலிடத்தில் இருந்து நேரடியாக இந்த கட்டளை வந்திருக்கிறது. ஏனென்றால் மேலிடத்தின் உத்தரவு இல்லாமல் சிறை கேமராக்களை அகற்றி இருக்க முடியாது.. நவல்னிக்கு நோவிச்சோக் என்ற விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று நவல்னியின் மனைவி யூலியா கூறுகிறார். ஆனால், எனக்கு இதில் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் நோவிச்சோக் கொடுத்தால் டெஸ்டிங்கில் அது தெரிந்துவிடும். எனவே, நோவிச்சோக் கொடுக்க   வாய்ப்புகள் குறைவு.. அவரது உடலில் எந்தவொரு தடயத்தை விட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நோவிச்சோக்கொடுத்திருக்க   மாட்டார்கள்.

அங்கே வெப்பம் மைனஸ் 27 டிகிரி செல்சியஸில் இருக்கும்.. எனவே, நவல்னியை கொல்லும் முன்பு அங்கே வெளியே அவரை சுமார் இரண்டரை முதல் நான்கு மணி நேரம் கழிக்க வைத்து இருப்பார்கள். நீண்ட நேரம் குளிரில் அவரைத் தள்ளி, ரத்த ஓட்டத்தைக் குறைப்பதன் மூலம் அவர்கள் முதலில் உடலைப் பலவீனப்படுத்தினார்கள். இந்தளவுக்கு ஒருவரது உடல் பலவீனமாக இருந்தால் ஒரே அடியில் அவரை வீழ்த்திவிடலாம்" என்றார். சிங்கிள் பன்ச் டெக்னிக் என்பது கேஜிபியின் சிறப்புப் படைகள் பயன்படுத்தும் படுகொலை நுட்பமாகும். இதன் மூலம் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவது ரொம்பவே கடினம். இதன் காரணமாகவே ரஷ்யச் சிறப்பை படை இந்த நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

 

No comments: