தென்னாப்பிரிக்க நகரான பெனோனி நகரில் உள்ள வில்லோவ்மோரே மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய அணியும் அவுஸ்திரேலியா 79 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா முதலில்துடுபெடுத்தாடி 50 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 253 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா 43.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 174 ஓட்டங்கள் எடுத்தது.
அவுஸ்திரேலியா ஹர்ஜஸ் சிங் 55, ஒலிவர் பீக்கே 46 , கப்டன் ஹுக் வெய்ப்ஜென் 48 ஓட்டங்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளை எடுத்தார். 254 என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு அர்சின் குல்கர்னி 3 நம்பிக்கை நட்சத்திரம் முஷீர் கானும் 22 ஓட்டங்கள் எடுத்தனர்.
அவுஸ்திரேலியா அணியின் அபாரமான பந்து வீச்சினால் இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். 100 ஓட்டங்களை எட்டுவதற்குள் 6 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் 47 , டைல் எண்டர் பேட்ஸ்மேன் முருகன் அபிஷேக் 42 ஓட்டங்களும் சேர்த்திருந்தனர். இறுதியில் இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ஓட்டங்கள் சேர்த்தது. இதனால் அவுஸ்திரேலியா அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகக் கிண்ணத்தை வென்றது.
அண்டர்-19 உலகக் கிண்ணரலாற்றின் இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த அணி என்ற சாதனையும் அவுஸ்திரேலியா படைத்துள்ளது. 1998ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 3 விக்கெற்களை இழந்து 242 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
சம்பியன் பட்டத்தை தக்க வைக்க தவறிய இந்திய அணி 6வது முறையாக சம்பியனாகும் வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. சீனியர் கிரிக்கெட்டில் 2023 டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ,உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஆகியவற்றில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது. 19 வயதுக்குட்பட்ட இறுதிப் போட்டியிலும் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது.
4வது முறையாக அண்டர்-19 கோப்பையை வென்று சாதனை படைத்தது அவுஸ்திரேலியா. 2023 மகளிர் ரி20 உலகக் கிண்ணமும் அவுஸ்திரேலியாவிடம் உள்ளது.
உலகிலேயே ஆடவர் , மகளிர் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 4 தொடர்ச்சியான ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் அணியாக மாபெரும் சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து அவுஸ்திரேலியா முடி சூடா அரசனாக செயல்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment