சினிமவின் மீது இருந்த ஆர்வத்தால் வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்னையில் கால் பதித்த பஞ்சு அருணாசலம் சிறந்த பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், கதையாசிரியர், திரைக்கதை வடிவமைப்பாளர் என சினிமாவின் அனைத்திலும் வெற்றிக்கொடி நாட்டினார்.
பெரியப்பாவிடம் செட் அசிஸ்டென்ட்டாக திரை வாழ்க்கையைத்
தொடங்கினார். பிறகு, தன் சித்தப்பா கண்ணதாசனிடம்
பாடல் எழுதும் உதவியாளராகப் பணிபுரிந்தார். பஞ்சு அருணாசலத்தின் உறவினார்கள் பலர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதும்தகக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி யாரிடமும் கேட்கவில்லை. பஞ்சு அருணாசலம் எழுதிய ஒரே ஒரு
பாட்டு அவரின் வாழ்க்கையை மாற்றியது.
சாரதா’
ஏ.எல்.எஸ் தயாரித்த படம். பாடல் எழுத கவிஞர் ஊரில் இல்லை. அவசரமாக பாடல் தேவைப்பட்டது.
கே.வி. மகாதேவன் அவர்கள் தான் இசை. அவருடைய உதவியாளர் புகழேந்தி பஞ்சுவிற்கு மிகவும்
நெருக்கமானவர்.
அந்த
புகழேந்தி பஞ்சுவை பற்றி கே.வி.எம்.மிடம் சொல்ல அவர் அதுக்கென்ன இந்த சிச்சுவேஷனுக்கு
பாட்டை எழுதித் தரச்சொல்லு, நல்லா இருந்தா யூஸ் பண்ணிப்போம் என்று கூறினார். கே.வி.எம்.
எப்போதும் பாட்டுக்குத்தான் மெட்டு போடுவார். பஞ்சுவும் ஒரு அருமையான பாடலை தர அனைவர்
ஆமோதிப்புடன் பஞ்சுவின் பாடல் பதிவாகியது. அந்தப் பாடல்தான் ‘மணமகளே மணமகளே வா…
வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா’
. பயத்துடன் பஜ்சு அருணாசலம் எழுதிய பாடல் அரை நூற்றாண்டு கடந்தும் இன்றுவரை திருமண வைபவத்தைல் ஒலிக்கிறது. " வாராயென் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ" எனும் பாடல் மணமகளை அழைத்துவரும் தேசிய கீதமாக இன்றும் தமிழ் மக்கள் வாழும் நாடெங்கும் ஒலிக்கிறது.அந்தப்பாடலை கண்ணதாசன் எழுதியதாக நம்பும் பலர் இன்றைக்கும் வாழ்கிறார்கள்.
"
வாராயென் தோழி வாராயோ" தந்த வெற்றியால் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த
பஞ்சு அருணாசலம் முழுநேரப் பாடலாசிரியரானார்.பஞ்சு அருணாசலம் என்றதும் இளையராஜாவை அரிமுகப்படுத்தியவர் என்ற ஒற்றை வரிதான் ஞாபகத்துக்கு வரும். தமிழ் சினிமாவில்
அவர் செய்த சாதனைகள் பலருக்கும் தெரியாத சங்கதி. ரஜினியின் அடையாளத்தை முதன் முதலில்
மாற்ரியவர் பஞ்சு அருணாசலம். வேகமாக நடப்படு கையைக் காலை ஆட்டுவது, சிகரெட்டைபிடிப்பது
என்ர ரஜினியின் கெட்டப்பை "புவனா ஒரு
கேள்விக்குரியில் மாற்ரினார். ஆறிலிருந்து
அறுபதுவரை, எங்கேயோ கேட்டகுரல் , போன்ற படங்கள்
ரஜினியின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தின.
சகல கலா வல்லவன் என கமலை அடையாளப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம்.
.
இந்தப்
பாடலின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.வி.எம் செட்டியர் 'நானும் ஒரு பெண்' படத்தில் பூப்போல
பூப்போல பிறக்கும் என்ற பாடலை எழுத வாய்ப்புக் கொடுத்தார்.
இதைப்
பார்த்துக் கவியரசர் வருத்தப்படவில்லை, வாழ்த்தினார். இவராக வலியப் போய் யாரிடமும்
வாய்ப்புக் கேட்டதில்லை. அதுவாக ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அதை உபயோகித்துக் கொள்வார்,
அவ்வளவுதான். கவிஞர் ஊரில் இல்லாத சமயங்களில் பல திரைப்பட கம்பெனிகளுக்கு டிஸ்கஷன்
செல்வார். தேவர் பிலிம்ஸ் மாதிரி பெரிய பெரிய கம்பெனிகளுக்கும் செல்வார். அவர் சொல்லும்
சீன்கள் பிடித்தால் அதற்கேற்றார் போல் ஒரு தொகையை கொடுப்பார்கள். சினிமாவிற்கென்று
ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. என்னதான் சிபாரிசு இருந்தாலும் தனியாளாக சினிமாவில்
வாய்ப்பு கிடைப்பதும் பேரெடுப்பதும் கஷ்டம். பஞ்சுவிற்கு திடமான எந்தக் குறிக்கோளும்
இல்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற் போலத்தான் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தார்.
ஒரு
சமயம் புரட்சித்தலைவருக்கும் கவிஞருக்கும் அரசியல் சம்பந்தமாக கருத்து வேறுபாடு வந்தது.
இனி எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுதப் போவதில்லை என்று முடிவெடுத்தார். அந்தச் சமயமத்தில்
ஜி.என்.வேலுமணி எம்.ஜி.ஆர்-ஐ வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த படத்திற்கு
எம்.எஸ்.வி. தான் இசை. கவிஞர் எழுத முடியாத காரணத்தால் பஞ்சுவை கூப்பிட்டு தான் போட்ட
டியூனுக்கு பாட்டு எழுதச் சொல்லியிருக்கிறார். அதன்படி பஞ்சுவும் ‘பொன் எழில் பூத்தது
புது வானில்” என்ற பாடலையும், “என்னை மறந்ததேன் தென்றலே”
என்ற பாடலையும் எழுதித் தந்திருக்கிறார். பாடலும் பதிவாகி கேஸட் வடிவத்தில் எம்.ஜி.ஆரிடம்
சென்றடைந்திருக்கிறது. பாடலை கேட்ட எம்.ஜி.ஆர், “இது கண்ணதாசன் எழுதிய பாடல், என்னை
ஏமாற்ற பஞ்சு எழுதிய பாடல் என்று கூறுகிறீர்கள்” என்று பாட்டை வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
பஞ்சுவுக்கோ
அழகையே வந்துவிட்டது. பிறகு எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து “என் மீது நம்பிக்கை
இல்லையா? நான் உங்களிடம் பொய் சொல்வேனா?” என்று பலவாறாக சத்தியம் செய்திருக்கிறார்.
பிறகு எம்.ஜி.ஆர் உண்மையை உணர்ந்து பாடலை பாராட்டியதோடு, “பஞ்சுவை என்னை நேரில் வந்து
பார்க்கச் சொல், இன்னும் வாய்ப்புகள் தருகிறேன்”, என்ற கூறியிருக்கிறார்.
ஸ்.பி.
முத்துராமன், தேவராஜ், மோகன் போன்றவர்கள் பஞ்சுவுடன் சேர்ந்து ஒரு குழுவானர்கள். உறவு
சொல்ல ஒருவன், உறவாடும் நெஞ்சங்கள், மயங்குகிறாள் ஒரு மாது போன்ற படங்கள் வந்து மிகப்பெரும்
வெற்றியை பெற்றன. இதன்பிறகு பஞ்சு ஒரு தயாரிப்பாளர் ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அப்போதெல்லாம் தமிழ்படங்கள் ஒரளவிற்கு நன்றாக இருந்தால் 50 நாட்கள் ஓடும். மிகவும்
நன்றாக இருந்தால் 100 நாட்கள் ஓடும். மிக மிக நன்றாக இருந்தால் 175 நாட்கள் ஓடும்.
இந்திப் படங்களைப் பார்த்து, கிந்திபாடல்களைப் பாடிய தமிழக ரசிகர்களை தமிழ்ப் படத்தின் பக்கமும், பாடல்களின் பக்கமும் திருப்பியதில் பஞ்சு அருணாசலம் முதன்மையானவர்.
No comments:
Post a Comment