2024 டேவிஸ்கிண்ண இறுதிப் போட்டியின் குழு நிலைக்கான தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த ஜோகோவிச் இல்லாத குரோஷியாவும், சேர்பியாவும் வெளியேற்றப்பட்டன.
உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் இல்லாமல் விளையாடிய சேசெர்பியா
4-0 என்ற செற் கணக்கில் ஸ்லோவாக்கியாவிடம் தோல்வியடைந்தது. உலகின் முன்னாள் மூன்றாம்
நிலை வீரரான மரின் சிலிச் டோடிக்-பாவிக் ஜோடியுடன் களம் இறங்கிய
குரோஷியா 3-1 என பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது.
பிறேஸில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டியின் குரூப் சுற்றுக்கு தகுதி பெறும்
16 நாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர்
10-15 வரை போடிகள் நடைபெறும். இதில் வெற்றி
பெறும் முதல் எட்டு அணிகள் நவம்பர் 19 முதல்
- 24 வரை மலகாவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாட
உள்ளன.
டேவிஸ் கிண்ணப் போட்டிக்குத்
தகுதி பெற்ற 16 அணிகள்:
இத்தாலி (சம்பியன்),அவுஸ்திரேலியா (கடந்த போட்டியில்
இரண்டாம் இடம்) , இங்கிலாந்து (அழைக்கப்பட்டது),ஸ்பெயின்
(அழைக்கப்பட்டது),கனடா, ஸ்லோவாக்கியா, பெல்ஜியம்,ஜேர்மனி, நெதர்லாந்து ,செக். குடியரசு,அமெரிக்கா,பிரான்ஸ்,
ஆர்ஜென்ரீனா,பிறேஸில்,சிலி.
No comments:
Post a Comment