Monday, February 12, 2024

ஒலிம்பிக் ஜோதியை சுமக்கிறார் 100 வயதான சார்லஸ் கோஸ்ட்

பரிஸில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் இலொம்பிக் போட்டியில் ஜீதிய ஏந்திச்செல்வதற்கு   100 வயதான சார்லஸ் கோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.    பிரான்ஸ் ஒலிம்பிக் சம்பியனான மிகவும் வயதானவர், சுடரை ஏற்றிச் செல்லும் பெருமையைப் பெறுவார். 1948 ஆம் ஆண்டு இலண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பர்சூட் சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் சார்லஸ் கோஸ்ட்  தங்கப் பதக்கம் வென்றார்.

 1948 இலண்டன்  ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 76 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் தீபத்தை அவர் ஏந்திச் செல்வார். ஒலிம்பிக் தங்கத்தைப் பெற்ற போது  23 வயதாக இருந்த கோஸ்டே, பெப்ரவரி 8 ஆம் திகதி 100 வயதை எட்டினார். "இது மறக்க முடியாததாக இருக்கும். நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,  இப்போது நான் உடல் ரீதியாக என்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். என் முழங்கால்கள் என்னைக் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் நான் சில மீற்றர்களுக்குச் சுடரைச் சுமக்க முயற்சிப்பேன்"என்று   கோஸ்ட் கூறினார்.

  "சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் பதக்கங்களை ஒரு பெட்டியில் பெற்றனர், அவர்களின் கழுத்தில் அல்ல பெட்டியில் வைத்துக் கொடுத்தது  இன்றும்  பசுமையாக  இருப்பதாகச்   சொல்கிறார்  சார்லஸ் கோஸ்ட்.

No comments: