Monday, February 19, 2024

44 ஆவது வ‌யதில் வயதில் சாதனையைசெய்த‌ இம்ரான் தாஹீர்


 கிறிக்கெற் போட்டிகளை பொறுத்தவரை 35 வயதை கடந்து விட்டாலே  வயதான வீரர்  என்று முத்திரை குத்தப்படுவது வழக்கம். ஆனால் ஒரு சில வீரர்கள் 40 வயதை கடந்தும் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.   சர்வதேச கிரிக்கெட் உலகில் தனது 32-வது வயதில் அறிமுகமான இம்ரான் தாஹீர் தற்போது தனது 44-ஆவது வயதில்  ரி20யில் 500 விக்கெற்களை வீழ்த்தி சாதனை செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி, முதல்தர கிறிக்கெற்,  லிஸ்ட் கிறிக்கெற்  ஆகியவற்றில் விளையாடிய இம்ரான் தாஹீர்ஆயிரத்திற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  இம்ரான் தாஹீருக்கு கடந்த 2011-ம் ஆண்டு  32-ஆவது வயதில் தான் தென்னாப்பிரிக்க தேசிய அணியில் விளையாட  இம்ரான் தாஹீருக்கு இடம் கிடைத்தது.

தென்னாப்பிரிக்க அணிக்காக அவர் 20 டெஸ்ட் போட்டிகள், 107 ஒருநாள் போட்டிகள், 38 ரி20 போட்டிகளில் மட்டுமே இம்ரான் தாஹீர்  விளையாடி உள்ளார்.   தென்னாப்பிரிக்க அணியில் விளையாடியிருந்தால் ஆயிரக்கணக்கில் இம்ரான் தாஹீர் வீழ்த்திய கிக்கெற்களின் தொகை அதிகமாக  இருந்திருக்கும்.      சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 293 விக்கெற்டுகளை வீழ்த்தியுள்ள இம்ரான் தாஹீர், ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2018 , 2021 ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்ற அணியில் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக  இருந்தார்.

 தற்போது 44 வயதாகியுள்ள இம்ரான் தாஹீர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உலகெங்கிலும் நடைபெற்று வரும் ரி20 லீக் போட்டிகளில் முக்கிய பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார்.

பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும்  இம்ரான் தாஹீர்  குல்னா டைகர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 26 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் மாபெரும் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.  இம்ரான் தாஹீர் எடுத்த இந்த 5 விக்கெட்டுகளின் மூலம் ரி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக ரி20 கிரிக்கெட்டில் டுவைன் பிராவோ, ரஷீத் கான், சுனில் நரேன் மட்டுமே 500 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்திருக்கும் வேளையில் தற்போது நான்காவது வீரராக இம்ரான் தாஹீர் 44 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிராவோ 634, ஷீட்கான் 556, சுனில் நரேன் 532, இம்ரான் தாஹீர் 502 விக்கெற்களை வீழ்த்தியுள்ளனர்.

No comments: