Tuesday, February 6, 2024

இங்கிலாந்து இந்தியா இரண்டாவது டெஸ்ட் சாதனைகள்

  விசாகபட்டனத்தில் நடைபெற்ற  இங்கிலாந்துக்கு எதிரான  இரண்டாவது போட்டியில் இந்தியா  109 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற     இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியது.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வாலின் 209 ஓட்டங்களுடன், 396 ஓட்டங்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி   முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்கள் சேர்த்தது.   143 ஓட்ட  முன்னிலையுடன் இந்தியா  இரண்டாவதி  இன்னிங்ஸைத் தொடங்கியது. சுப்மன் கில்லின்  சதத்துடன் [104] 255  ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்தின்  வெற்றிக்கு  398  ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்ததுஇந்திய அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பும்ரா மொத்தம் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.. முதல் இன்னிங்ஸில் விக்கெட் எதுவும் கைப்பற்றாத அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச 

ஆட்ட நாயகன்  பும்ராவின் மகத்தான சாதனை

இரண்டாவது  டெஸ்ட்டில் பும்ரா 91 ஓட்டங்கள் கொடுத்து 9 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இது அவரது இரண்டாவது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு ஆகும். முன்னதாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 2018இல் 86 ரன்களுக்கு 9 விக்கெட்கள் வீழ்த்தி இருந்ததே அவரது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாகும். இதைத் தவிர்த்து அவர் இந்திய மண்ணில் 9 விக்கெட்கள் வீழ்த்தி வேறு எந்த வேகப் பந்துவீச்சாளரும் செய்யாத சாதனையை செய்து இருக்கிறார்.

பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

இந்திய  பந்துவீச்சாளர்களில் குறைந்த பந்துகளை வீசி 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் பும்ரா  படைத்துள்ளார்.

  இந்திய மண்ணில் ஜாக் கிராலி தனித்துவ சாதனை

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்ததன் மூலம், ஜாக் கிராலி 10 ஆண்டுகளில் இரண்டு இன்னிங்ஸிலும் 50 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது வெளிநாட்டு வீரரானார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி முதல் இன்னிங்ஸில் 78 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 76 ஓட்டங்கள் எடுத்தார். இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் 132 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸர்களுடன் 73 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக புதிய வரலாறு படைத்த அஸ்வின்

இந்த டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 499 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்னும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் அஸ்வின் டெஸ்டில் தன்னுடைய 500வது விக்கெட்டை கைப்பற்றுவார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 500 விக்கெட் என்ற மைல் கல்லை அடைவதுடன், டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 100 விக்கெட்டை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய  இளம் வீரர்களின் அரியசாதனை

 

முதல் இன்ன்ங்ஸில் இரட்டைச்சதம் [209] அடித்தி ஜெய்ஸ்வால்  இந்தியாவைக் காப்பாற்றினார். இரண்டாவது  இன்னிங்ஸில்  சுப்மன் கில் சதம் [104] ஓட்டங்கள் எடுத்து இந்தியாவுக்கு ஆறுதலளித்தார்.

22 வயதாகும் ஜெய்ஸ்வால் , 24 வயதாகும் கில் ஆகிய இளம் வீரர்கள் இப்போட்டியில் இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள். 27 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 25 வயதுக்கு உட்பட்ட இரண்டு இந்திய வீரர்கள் சதமடிக்கும் அரிதான நிகழ்வு இப்போட்டியில் நடந்துள்ளது.

சாதனைகளுடன்  இரட்டைச் சதம் அடித்த ஜெய்ஸ்வால் 

 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசும் 25வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல் இந்திய அணிக்காக இரட்டை சதம் விளாசிய 4வது இடதுகை வீரர்  என்ற சாதனையையும் படைத்துள்ளார். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 7 சிக்ஸ், 19 பவுண்டரி உட்பட 209 ஓட்டங் கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் ஒரு இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் 50 ஓட்டங்கள்   அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

No comments: