Sunday, February 11, 2024

ஒலிம்பிக் அணியில் பிரிட்னி கிரைனர் இல்லை


 ரஷ்யச் சிறையில் 10 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க நட்சத்திரமான பிரிட்னி கிரைனர், ஒலிம்பிக் தகுதிச் சுற்று அணியில் சேர்க்கப்படவில்லை.

பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில்  கடந்த வியாழக்கிழமை வியாழக்கிழமை தொடங்கிய  மகளிர் கூடைப்பந்து ஒலிம்பிக் தகுதிப் போட்டியில்  அமெரிக்க தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 வீரர்களில் 10 மாதங்கள் ரஷ்யாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரிட்னி கிரைனர், சேர்க்கப்படவில்லை.

  நியூயார்க்கில் மூன்று நாள் பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்ட 18 வீரர்களில் பிரிட்னி கிரைனர் இடம்  பெற்றார்.

 நடப்பு சம்பியனான அமெரிக்கா பரிஸ் ஒலிம்பிக்குத் தகுதி பெற்றுள்ளது.  ஆனால் அவர்களின் ஒலிம்பிக் விதிகளின்  பிரகாரம்   தகுதி போட்டியில் விளையாட வேண்டும்.  ஒலிம்பிக் கூடைப்பந்தில்  ஏழு தங்கப்பதக்கங்களைப் பெற்ற அமெரிக்கா  எட்டாவ‌து தங்கத்தைக் குறி வைத்துள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு  சிறைத் தண்டனை அனுபவித்த  பிரிட்னி கிரைனர்,  2022 ஆம் ஆண்டு சீசனையும் தவறவிட்டார். அவர்  . கடந்த சீசனில் பீனிக்ஸ் அணிக்காக பிரிட்னி கிரைனர்  சராசரியாக 17.5 புள்ளிகளையும்,  6.3 ரீபவுண்டுகளையும்  பெற்றார்.

 பெல்ஜியத்தில் நடைபெறும் த‌குதிப் போட்டியில்  அமெரிக்க பெண்கள் அணியில்  ஐந்து முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற 41 வயதான  டயானா டவுராசி உட்பட (அவருக்கு 2024 பாரிஸில் ஏற்கனவே 42 வயது இருக்கும்). ஏழு ஒலிம்பியன்கள் உள்ளனர்.

இந்த நூற்றாண்டின் சிறந்த அமெரிக்க பெண்கள் கூடைப்பந்து வீராங்கனைகளில் டயானா டவுராசியும் ஒருவர்.  2,000 புள்ளிகள்   500 ஷட்களைத் தடுத்த முதல்  வீராங்கனை.

No comments: