இந்தியா , இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஏகப்பட்ட சாதனை நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் ஏற்பட்டுள்ள ஒரு அரிதான நிகழ்வு குறித்த ஒரு தகவலும் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட வேளையில் விராட் கோலி கடைசி நேரத்தில் விலகினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர்களாக இந்திய அணியில் ரஜத் பட்டிதார் , சர்பராஸ் கான் ஆகியோர் இணைக்கப்பட்டனர். அதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது காயம் காரணமாக கே.எல் ராகுல் விளையாட முடியாமல் போனதால் ரஜத் பட்டிதாருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமாகச் செயற்பட்டதாஅல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ் பரத் மூன்றாவது போட்டியின் போது நீக்கப்பட்டடு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.
இரண்டாவது போட்டி முடிந்த கையோடு காயம் காரணமாக மிடில் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேறியதால் பதிலாக மூன்றாவது போட்டியில் சர்பராஸ் கானுக்கும் அறிமுகவாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ராஞ்சி நகரில்நேற்று துவங்கி நடைபெற்று வரும் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்பிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக2000-ஆவது ஆண்டு முரளி கார்த்திக், வாசிம் ஜாபர், முகமது கைப், நிகில் சோப்ரா ஆகியோர் ஒன்றாக ஒரே தொடரில் அறிமுகமாகியிருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது 24 ஆண்டுகள் கழித்து ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான், துருவ் ஜுரேல், ஆகாஷ் தீப் என இப்படி 4 வீரர்கள் இந்திய அணிக்காக ஒரே தொடரில் அறிமுகமாகியுள்ளனர்.
ராஞ்சியில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து துடுப்பெடுத்தாடுகிறது. ஜானி பேர்ஸ்டோவை ஆட்டமிழக்கச் செய்த அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 100 விக்கெற்களை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அஸ்வின் 23 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அஸ்வினுக்கு அடுத்த படியாக பிஎஸ் சந்திரசேகர் 23 போட்டிகளில் 95 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
பும்ராவிற்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட ஆகாஷ் தீப், தொடர்ச்சியாக 7 ஓவர்கள் வீசி 24 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இங்கிலாந்து அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தி தனது டெஸ்ட் கரியரை அட்டகாசமான துவங்கி உள்ளார்.
No comments:
Post a Comment