சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவர் அலெக்சி நவால்னி மரணம் அடைந்து விட்டதாக ச்றிவிக்கப்பட்டுள்லது. . ரஷ்யா கூறியிருக்கும் இந்த தகவலை நம்ப முடியாது என்றும் நவால்னி மரணம் அடைந்தது உண்மையென்றால் புட்டினை தண்டிக்காமல் விடக்கூடாது எனவும் நவால்னியின் மனைவி ஆவேசமாக கூறியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அரசியல் நடவடிக்கைகளை உலகளாவிய ரீதியில் எதிர்த்து விமர்சனம்செய்பவர் அலெக்சி நவால்னி. ரஷ்யாவின் எல்லைக்கு வெளியே மட்டுமன்றி உள்ளேயும் எதிர்ப்பாளர்களை விரும்பாதவராக புட்டின் அறியப்படுகிறார். எதிர்க்கட்சிகள் ரஷ்யாவில் உள்ளன. தேர்தல்களும் நடைபெறுகிறன. ஆனாலும், தொடர்ந்து வெற்றி பெற்று வரும் புட்டின், மன்னர் போலவே ஆட்சி நடத்தி வருகிறார். ரஷ்யாவை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புட்டினுக்கு அரசியல் ரீதியாக அலெக்சி நவால்னி கடும் நெருக்கடியை கொடுத்தார்.
ஊழல் குற்றச்சாட்டில்
அலெக்சி நவால்னி கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு 19 ஆண்டுகள் சிறை
தண்டனை விதிக்கப்பட்டது. நவால்னி, சிறைச்சாலையில்
உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவால்னி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் ரஷ்யாவில்
புட்டினுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நவால்னிக்கு ஏற்கனவே ஜேர்மனியில் வைத்து விஷம்
வைத்து கொல்ல முயற்சி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதற்கு ரஷ்யா மீதே ஜேர்மனி கை காட்டியது.
இதனால், நவால்னி மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில்,
தனது கணவர் நவால்னி, மரணம் அடைந்ததாக வெளியாகும் தகவல் உண்மையென்றால் புட்டினையும்
அவரது உதவியாளர்களையும் தண்டிக்காமல் விடக்கூடாது என்று யுலியா நவலன்யா கூறியுள்ளர்.
ஜேர்மனியின் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய
நவல்ன்யா :- எனது கணவர் அலெக்ஸி நவால்னி மரணம்
அடைந்து வெளியாகும் செய்தியில் எனக்கு சந்தேகம் உள்ளது. ஏனெனில், இது ரஷ்ய அரசாங்க
வட்டாரத்தில் இருந்து வந்திருக்கிறது. புடினையோ அவரது அரசாங்கத்தையோ நம்ப முடியாது.
கொடூரமான ஆட்சி: ஆனால் நவால்னி மரணம் அடைந்தது உண்மையாக இருந்தால், புட்டின், அவரது மொத்த சகாக்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
இதற்கான காலம் வெகுவிரைவில் வரும். ரஷ்யாவில் நடந்து வரும் கொடூரமான ஆட்சிக்கு எதிராக
சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும். ரஷ்யாவில் நடைபெறும் அனைத்து கொடூரமான விஷயங்களுக்கும்
புட்டினும் அவரது அவரது ஆட்சி நிர்வாகமும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்ய அதிபராக இருந்து வருபவர் விளாடிமிர் புடின்.
தனது அதிரடி நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் எதிர்ப்புகளை சம்பாதித்து வைத்திருக்கும்
புடின், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். ராணுவ வல்லமையும் மிக்க
நாடாக இருக்கும் ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுத்தது. இதனால் ஒட்டு
மொத்தமாக நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் பகையையும் புடின் சம்பாதித்துக் கொண்டார்.
ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்தின் பின்ன்ர் கூடி ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது - குறைந்தது 100 பேர் கைது செய்யப்பட்டதாக மனித உரிமைக் குழு ஒன்று கூறியுள்ளது.ரஷ்யாவின் இரண்டு பெரிய நகரங்களான மாஸ்கோ செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். படையினரவர்களை விரட்டுகின்றனர். நாட்டிங் ஹில் அருகே உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே நவல்னியின் முகத்தின் படங்களை ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய லண்டன் உட்பட ஐரோப்பா முழுவதும் போராட்டங்கள் ரஷ்யாவிற்கு வெளியேயும் போராட்டங்கள் நடத்தப்பட்டன .பெர்லினில், நூற்றுக்கணக்கானோர் ரஷ்ய தூதரகத்திற்கு அருகில் "புடின் டு தி ஹேக்" உட்பட ரஷ்ய, ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் கலந்த கோஷங்களை எழுப்பினர்.
லிதுவேனியாவில், முன்பு மாஸ்கோவில் இருந்து இயங்கி
வருகிறது, ஆனால் இப்போது நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ளது,
துக்கம் கொண்டாடுபவர்கள் நவல்னியின் உருவப்படத்தில்
மலர்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை வைத்தனர்.ரோம், ஆம்ஸ்டர்டாம், பார்சிலோனா, சோபியா,
ஜெனிவா மற்றும் தி ஹேக் உள்ளிட்ட நகரங்களிலும் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
19 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நவல்னி ஜனவரி 2021 இல் ஜெர்மனியில் இருந்து திரும்பியதிலிருந்து சிறைக்குப் பின்னால் இருந்தார், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பணியாற்றினார், அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைப்பதற்கான அரசியல் உந்துதல் முயற்சியாக அவர் நிராகரித்தார்.வெள்ளியன்று நவல்னி உடல்நிலை சரியில்லாமல் சுயநினைவை இழந்ததாக ரஷ்ய சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment