தென் ஆபிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்ட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது.
நடப்பு சம்பியனான இந்திய
லீக் சுற்றில் பங்களாதேஷ், அயர்லாந்து அமெரிக்கா ஆகியவற்றைத் தோற்கடித்து சூப்பர் 6 சுற்றுக்கு
சென்றது. சூப்பர் 6 சுற்றில் வலுவான நியூசிலாந்தையும்,
நேபாளை எளிதாகவும் தோற்கடித்த இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
முதல்
அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 245 ஓட்டங்களை துரத்திய இந்தியா போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
பேனோனி நகரில் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில்
4 விக்கெற்கலை இழந்து இந்தியா தடுமாறிய போது கப்டன் உதய் சஹரன் 84, சச்சின் தாஸ் 95 ஓட்டங்கள்
குவித்து தென்னாபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க உதவினர்.
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் 9வது முறையாக இந்தியா இறுதிப் போட்டிக்கு
தகுதி பெற்றுள்ளது. கடந்த 1988 முதல் 19
வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணப் போட்டி நடைபெறுகிறது. அப்போதிலிருந்து இந்த வருடத்தையும்
சேர்த்து இதுவரை மொத்தம் 15 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அந்த 15 தொடர்களில் இந்தியா தான்
அதிகபட்சமாக 9* முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக 2016, 2018,
2020, 2022, 2024* என கடைசியாக நடந்த 5 உலகக்
கோப்பை இறுதிப் போட்டிகளுக்கு தொடர்ச்சியாக இந்தியா தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
தகுதி பெற்ற 8
இறுதிப் போட்டிகளில் 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய 5 வருடங்களில் முறையே
முகமது கைப், விராட் கோலி, உமுக் சந்த், பிரிதிவி ஷா, யாஷ் துள் ஆகியோரின் தலைமையில் இந்தியா 5 சம்பியன் பட்டங்களை
வென்றுள்ளது. அந்த வகையில் அண்டர்-19 உலகக் கோப்பையை அதிக முறை வென்ற அணி என்ற உலக
சாதனையும் இந்தியா படைத்துள்ளது. அதிகபட்சமாக
அவுஸ்திரேலியா 3 கோப்பைகளை வென்றுள்ளது
அந்த வகையில் சீனியர் கிரிக்கெட்டில் 6 உலகக் கோப்பைகளை வென்ற அவுஸ்திரேலியாவை போல அண்டர்-19 கிரிக்கெட்டில் இந்தியா முடி சூடா மன்னனாகத்திகழ்கிறது என்றே சொல்லலாம்.
No comments:
Post a Comment