Monday, February 26, 2024

ரஷ்யாவின் மேன்முறையீட்டை தள்ளுபடிசெய்த நீதிமன்றம்


 சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின்  இடைநீக்கத்திற்கு எதிரான ரஷ்யாவின் மேல்முறையீடு வெள்ளிக்கிழமை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தால்  தள்ளுபடி செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட பிரதேசங்களை அங்கீகரிப்பதன் மூலம் உக்ரைனின் உறுப்பினர்களின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறியதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி  இடைநீக்கம் செய்தது.

உக்ரைனின் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரத்தின் கீழ் உள்ள டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் , சபோரிஜியா ஆகிய பிராந்திய விளையாட்டு அமைப்புகளை அதன் உறுப்பினர்களாக சேர்க்க  ரஷ்யா முடிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு,  2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி  இடைநீக்கம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்ரத்தில் ரஷ்யா  மூல் முறையீடு செய்தது.

பரிஸ்  ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் உக்ரைன் மீதான போரை   ஆதரிக்காத   ரஷ்ய , பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கு டிசம்பரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பச்சைக்கொடி காட்டியது. அப்போது, நடுநிலை வீராங்கனைகளாக தகுதி பெற்ற ரஷ்யாவைச் சேர்ந்த எட்டு வீரர்களும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று வீரர்களும் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

  ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 11 வரை நடைபெறும் பரிஸ் ஒலிம்பிக்கிற்கு 60 க்கும் மேற்பட்ட உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

ரமணி

No comments: