Saturday, February 3, 2024

கூட்டணிக்காகக் காத்திருக்கும் அரசியல் கட்சிகள்

இந்திய நாடாளும்ன்றத் தேர்தல்  இந்த  வருடம் நடை பெற  உள்ளது. தேசிய ரீதியிலும்மாநிலங்களிலும்  கூட்டணி பற்றிய கருத்துப் பகிர்வுகள் நடை பெறுகின்றன.

மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா அரசை வீழ்த்துவதற்காக எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரும்  ஒரு  அணியில் திரண்டு நம்பிக்கையளித்தனர். மாநிலங்களில் பலமாக  இருக்கும் கட்சிகள் காங்கிரஸுக்கு எதிரான அரசியலைச் செய்வதால் பாரதீய ஜனதாவை வீழ்த்த முடியாமல் உள்ளது. எதிர்க் கட்சிகளின்  இந்தியா  கூட்டணியால்  பாரதீய ஜனதா பயந்தது. மாமதாவும், கெஜ்ரிவாலும்   காங்கிரஸுடன் இணையப் போவதில்லை என அறிவித்துள்ளன.  இதனால் பாரதீயா ஜனதா நிம்மதிப் பெருகூச்சு விடுத்தது. மறு புறத்தில் தனது வழக்கமான சதியால் நிதீஷ் குமாரை இந்திய  கூட்டணியில் இருந்து  பிரித்தெடுத்தது.

இந்திய கூட்டணிக்கு அச்சாரம் போட்டவரை அங்கிருந்து தூக்கியது பாரதீய ஜனதா. உண்மையில் இது பாரதீய ஜனதாவின்  வெற்றி  அல்ல. இந்திய  கூட்டணிக்குள்  உள்ள கருத்து வேறுபாட்டினால்   வெறுப்புற்றிருந்த நிதீஷ் குமாரை வலை வீசிப் பிடித்தது பாரதீய ஜனதாக் கட்சி.

இந்திய கூட்டணியில் இருந்து வெளியேறிய பீகார்  முதலமைச்சர் நிதீஷ் குமார் முதலமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தார்.    பாரதீய ஜனதாக் கட்சியுடன்  கைகோர்த்து  மீண்டும்  முதலமைச்சரானார்.  முதலமைச்சர் பதவிக்காக கட்சி மாறுவது ஐக்கிய ஜனதா தள தலைவர்  நிதீஷ் குமாருக்குக் கைவந்தகலை. செத்தாலும் பாரதீய ஜனதாவுடன் சேர மாட்டேன் எனச் சபதம் எடுத்த நிதீஷ் குமார் பதவி ஆசையால அதனை மறந்து  விட்டார்.

 எதிர்க் கட்சிகளின்  கூட்டணிக்கு  இந்தியா எனப் பெயரிட வேண்டாம் நிதீஷ் குமார் வேண்டுகோள் விடுத்தார். அவரின்  வேண்டுகோள்  புறக்கணிக்கப்படது  விரிசலுக்கு முதல் காரணமாக அமைந்தது.

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமாரை பரிந்துரைத்தார் சீதாராம் யெச்சூரி. ஆனால், மம்தாவை கேட்டுவிட்டு முடிவு செய்யலாம் என்று ராகுல் கூறியதால், அந்த பதவியே வேண்டாம் என்று நிதிஷ் கூறியதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே லாலுவை ஒருங்கிணைப்பாளராக்கலாம் என்ற நிதிஷின் பரிந்துரையும் ஏற்கப்படாமல், ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டார்.. நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்க, கூட்டணியில் எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்த நிதிஷ்குமார் கூட்டணியை முறித்துக்கொள்ளும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, வாரிசு அரசியலை விமர்சித்து கூட்டணி தலைவர்களான லாலு, மு..ஸ்டாலின், ராகுல் உள்ளிட்டோரையும் சீண்டியது ஒட்டுமொத்தமாக விரிசலுக்கு வழிவகுத்தது.

இந்திய கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமாரை பரிந்துரைத்தார் சீதாராம் யெச்சூரி. ஆனால், மம்தாவை கேட்டுவிட்டு முடிவு செய்யலாம் என்று ராகுல் கூறியதால், அந்த பதவியே வேண்டாம் என்று நிதிஷ் கூறியதாக தகவல் வெளியானது.

 பீகாரில் தக்கு போட்டியாக  இருக்கும்  லல்லுவை ஒருங்கிணைப்பாளராக்கலாம் என்ற நிதிஷின் பரிந்துரையும் ஏற்கப்படாமல்,   மல்லிகார்ஜுன கார்கே  ஒருங்கிணைப்பாளராகத் தெரிவானார்.

  வாரிசு அரசியலுக்கு எதிராகக் குரல் கொடுத்து லை விமர்சித்து லல்லு பிரசாத் யாதவ்,ராகுல், ஸ்டாலின் ஆகியோரை மறைமுகமாகச் சாடினார் நிதீஷ் குமார்.


 நிதிஷ் குமார் இந்தியில் பேசிய போது ஆங்கிலத்தில் பேசும்படி திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர்களும், வேறு சில தலைவர்களும் வேண்டுகோள் விடுத்த போது  இந்தி படியுங்கள் என  முகத்தில் அடித்தது போல் கூறினார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில்  பீகாரில் ஆட்சி அமைக்க லாலு முயன்று வந்ததாக கூறப்படுவதும், கூட்டணி முறிவுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் தான், பிகாரைச் சேர்ந்த கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்த நிதிஷ்குமார், அப்படியே, பாஜக கூட்டணிக்கும் அச்சாரம் போட்டு அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.

   நாடாளுமன்றத் தேர்தலின் போது  இந்தியா  முழுவதும் நிதிஷ்குமாரால் தாக்கத்தை ஏர்படுத்த முடியாது. பீகார்  மாநிலத்தில் மட்டும் நிதீஷ் குமாரின் செல்வாக்கு உள்ளது. அடிக்கடி கட்சி மாறுவதால் அவரின் செல்க்காக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மோடி, அமித் ஷா ஆகியோருக்கும் இந்த  உண்மை தெரியும்.   இந்தியக் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தவே நிதீஷ் குமாரத் தம் பக்கம் இழுத்துள்ளனர்.  பாவம் நிதீஷ் குமார் அவருடைய அரசியல்   ஆட்டம்   இறுதிக் கட்டத்தில் உள்ளது.

   தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலமைமையில் உள்ள கட்சிகள் அப்படியே இருக்கின்றன. கமலின் மக்கள் நீதி  மய்யம் இந்தக் கூட்டனியில் சேர வாய்ப்பு உள்ளது. தொகுதிப் பங்கீடு பற்றிய  பேச்சு வார்த்தைகளை திராவிட முன்னேற்றக் கழகம்  ஆரம்பித்துள்ளது. கடந்த  தேர்தலை விட அதிக தொகுதிகளைக் கேட்பதற்குகூட்டணிக் கட்சிகள் விரும்புகின்ற்ன.   அதேவேளை, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடாது தனிச் சின்னத்தில் போட்டியிட  பங்காளிக் கட்சிகள் விரும்புகின்றன.அதிக தொகுதிகளில் போட்டியிட  திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.  ஆகையால் அள்ளிக்  கொடுதற்கு  திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக  இல்லை. பலமான  இந்திய கூட்டணியை விட்டு  வெளியேற தோழமைக் கட்சிகள்தயாராக  இல்லை.

  பாரதீய ஜனதாக் கட்சியில் இருந்து   வெளியேறிவிட்டதாக  அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. அதனை நம்புவதற்குத் தயாராக  இல்லை என அரசியல்  விமர்சகர்கள்  கூறூகின்றனர்.  தேர்தல் நாடகத்தின்  ஒரு பகுதியாக   கூட்டணியில் இருந்து வெளியேறிய நாடகம் நடப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்  தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார்கள்.   அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அதற்குப் பதிலளிக்க வில்லை. ஆனால், பாரதீய ஜனதாவையோ அல்லது அதன் தலைவர்களையோ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் விமர்சனம் செய்யவில்லை என்பதையும் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

 தமிழகத்தில் பாரதீய ஜனதா வளர்ச்சியடைந்துள்லது.  25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அண்ணாமலை  வாய் சவடால் விடுக்கிறார்.  தமிழகத்தில் பலமான கட்சியான அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  இணாஇந்தே  ஒரு தொகுதியில் கூட  பாரதீய ஜனதா வெற்றி பெற வில்லைஎன்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

. பன்னீர்ச்செல்வம், தினகரன்,  பிரேமலதா ஆகியோரை   கூட்டனியில் இணைக்க பாரதீய ஜனதா விரும்புகிறது. டாக்டர் ராமதாஸும்  பாரதீய ஜனதாவுடன்  இணையவே விரும்புகிறார்.  பாரதீய ஜனதாவுடன்  இணைந்தா அதிக தொகுதிகள் கிடைக்கும்,  பாரதீய ஜனதா வெற்றி பெற்றால்  அமைச்சர்  பதவி   வரும் என்ற  எதிர்  பார்ப்பு அவர்களிடம்  இருக்கிறது.

  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தின் நிலை மிகப் பரிதாபமாக  உள்ளது.     கூட்டணிப்  பேச்சுவார்த்தை,தொகுதிப் பங்கீடு  ஆகியவற்றுக்காக எடப்பாடி ஒரு குழுவை அமைத்துள்ளார். பாரதீய ஜனதாவைக் கழற்றி விட்டால்   தமிழகக் கட்சிகள் வரிசையாக வந்து நிற்கும் என எடப்பாடி  நம்பினார். ஆனால், எடப்பாடியை நம்புவதற்கு தமிழக அரசியல் கட்சிகள்  தயாராக  இல்லை.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் புதிய கூட்டணிகள் அமையலாம் என்ற எதிர்  பார்ப்பு  தமிழக மக்களிடம்  உள்ளது.

No comments: