Saturday, February 17, 2024

ஆளுநர் ரவி அடாவடி தமிழக அரசு அதிரடி


 ஸ்டாலினின் தலைமையிலான தமிழக அரசுக்கும் , தமிழக ஆளுநர் ரவிக்கும் இடையிலான  பிரச்சனை மீண்டும் ஒருமுறை தமிழக சட்டசபையில் பேசு பொருளாகி உள்ளது. தமிழக சட்டசபையில் ஆளுநர் ரவி கலகத்தை ஏற்படுத்தியது  இது  இரண்டாவது முறையாகும்.

மாநில சட்டசபைகள் கூடும்போது அந்த மாநில ஆளுநரின்  உரையுடன் ஆரம்பமாவதே மரபாகும்.  மாநில அரசு எழுதிக் கொடுக்கும் அறிக்கையை சபையில் ஆளுநர் வாசிப்பது காலம் காலமாக  கடைப்பிடிக்கப்படும் பொதுவான நடைமுறையாகும். மாநில அரசு தயாரிக்கும் அரிக்க்கை ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலளித்த  பின்னரே சபையில் தாக்கலாகும்.

மாநில அர்சு கொடுக்கும் அரிக்கையை திருத்தவோ அல்லது மாற்றவோ ஆளுநருக்கு அதிகாரம்  இல்லை. தமிழக ஆளுநர் வரம்பு மீரி இரண்டாவது  முறையாக தமிழக சட்டசபையில் நடந்துகொண்டார். கடந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக அரசு தயாரித்து வழங்கிய அறிக்கையில் சில பகுதிகளை ஆளுநர் ரவி படிக்கவில்லை. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. எனவே இந்த முறை என்ன நடக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையிலும் இருந்து வந்தது. இந்த சூழலில் கடந்த  12 ஆம் திகதி  சட்டப்பேரவை கூட்டம் நடக்கும் என அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு. அதன்படி கூட்டம் கூடியது. அவைக்கு ஆளுநர் காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார், ஆளுநர் ரவி. பிறகு தமிழ்த் தாய் வாழ்த்துடன் இசைக்கப்பட்டு பேரவை தொடங்கியது.

 அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். பின்னர் அவர், "சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்க உரையை இந்த அவையில் நிகழ்த்துவதை எனக்குக் கிடைத்த கவுரவமாக எடுத்துக் கொள்கிறேன். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புது வருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கட்டும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த அரசின் நோக்கங்களை காலத்தை வென்ற திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிட்டு எனது உரையைத் தொடங்குகிறேன். "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு. நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும், அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும். அரசின் இந்த உரையில் பல பத்திகள் உள்ளன.  உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் இந்த உரையுடன் நான் உடன்படவில்லை. எனவே, இந்த அவையில் மக்களுக்கு நன்மை பயக்கும் விவாதங்கள் நடக்க வேண்டும் எனக் கூறி எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், நன்றி என்று கூறி தனது உரையை முடித்தார் 

அவையில் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில், "மத்திய அரசு ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை நிறுத்தியதால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு சுமார் 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால், ஜி.எஸ்.டி. இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர வேண்டும். மற்ற மாநிலங்களில் மெட்ரோ திட்டத்துக்கு பங்களிப்பு செய்கிறது, மத்திய அரசு. ஆனால் தமிழகத்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே முழு திட்டச்செலவையும் மாநில அரசு செய்ய வேண்டியிருக்கிறது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது.

No comments: