இந்திய நட்சத்திர
சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன்
அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது
நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட
டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி
வருகிறார். இந்த தொடர் ஆரம்பிக்கும்
போதே நிச்சயம் அஸ்வின் 500 விக்கெட்டுகளை எட்டி விடுவார் என்ற
பேச்சு அனைவரது மத்தியிலும் இருந்து
வந்தது. அதோடு முன்கூட்டியே அவரது
இந்த சாதனைக்காக பல்வேறு தரப்பில் இருந்தும்
பாராட்டுகளும் அதிகளவில் இருந்து வந்தன. இந்நிலையில்
இங்கிலாந்து அணிக்கெதிரான நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட்
போட்டியை தவிர்த்து இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த
அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 499 விக்கெட்டுகளை
வீழ்த்தியிருந்தார்.
இங்கிலாந்து
அணிக்கு எதிராக ராஜ்கோட் நகரில்
நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட்
போட்டியின் மூலம் தனது 98-வது
டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் முதல்
இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான
ஜாக் க்ராவிலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில்
தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி
சாதனை புரிந்தார். அவரது இந்த சாதனைக்கு
பல்வேறு தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து
வரும் வேளையில் இந்த 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மேலும் சில
சாதனைகளையும் அஸ்வின் நிகழ்த்தியுள்ளார். அந்த
வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷேன்
வார்ன் (108 போட்டிகள்), அணில் கும்ப்ளே (105 போட்டிகள்)
ஆகியோரை முந்திய அஸ்வின் முரளிதரனுக்கு
அடுத்து அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை
நிகழ்த்தியுள்ளார்.
உலக
அளவில் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த
போது 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவ்வேளையில் தற்போது அஸ்வின் தனது
98-வது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை
வீழ்த்தியுள்ளார். அதேபோன்று குறைந்த பந்துகளை வீசி
500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அஷ்வின் இரண்டாவது இடத்தை
பிடித்துள்ளார். இந்த
பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென்
மெக்ராத் 25528 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியிருந்த
வேளையில் அஸ்வின் 25,714 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், வால்ஷ் ஆகியோர்
உள்ளது குறிப்பிடத்தக்கது.
500 விக்கெட்டுகளை எடுத்த
அஸ்வின்
டெஸ்ட்
கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்
என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை
உடைத்து புதிய சாதனை படைத்தார்.
1. முத்தையா
முரளிதரன் : 144
2. ரவிச்சந்திரன்
அஸ்வின் : 184
3. அனில்
கும்ப்ளே : 188
4. ஷேன்
வார்னே : 201 -
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500* விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். அத்துடன் பேட்டிங்கில் 98 போட்டிகளில் 3308 ஓட்டங்களையும் எடுத்துள்ள அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்ரன்கள், 500 விக்கெட்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையையின் படைத்துள்ளார். 34 வருட புதிய வரலாற்று சாதனை இதற்கு முன் கபில் தேவ் உட்பட வேறு எந்த இந்திய வீரர்களும் இந்த சாதனையை படைத்ததில்லை. உலக அளவில் அவுஸ்திரேலியாவின் ஷேன் வார்னே மற்றும் இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
No comments:
Post a Comment