Friday, April 10, 2026

ஒரு ஓட்டத்தால் டெல்லியிடம் தோற்றது குஜராத்


 ஐபிஎல் 2026 தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 1  ஓட்ட  வித்தியாசத்தில் வீழ்த்தியகுஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற  டெல்லி கப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் கே\ப்டன் சுப்மன் கில் 45 பந்துகளில் 70  ஓட்டங்களும் , ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 52 ஓட்டங்களும் , வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55  ஓட்டங்களும்  எடுத்தனர். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 210  ஓட்டங்கள் என்ற வலுவான நிலையை  எட்டியது. டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

211 என்ற டினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் நிதானமாக நின்று ஆடினார். அவர் 52 பந்துகளில் 11 பவுண்டரிகள் , 4 சிக்ஸர்களுடன் 92  ஓட்டங்கள் அடித்துஅணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார். பதும் நிசங்க 41  ஓட்டங்கள் எடுத்தார்.

ரஷித் கானின் அபாரமான பந்துவீச்சால் டெல்லி அணி  தொடர்ந்து விக்கெட்களை இழந்தது.    கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 12  ஓட்டங்கள் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனதால், டெல்லி அணி 1  ஓட்டவித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. குஜராத் தரப்பில் 4 ஓவர்களில்   17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்

No comments: