Sunday, April 5, 2026

ரிஸ்வியில் அதிரடியால் மும்பையை வீழ்த்தியது டெல்லி


 

  

அதிரடியாக விளையாடுவதற்கு எளிதாக இல்லாத ஆடுகளத்தில் 163  ஓட்டங்களைத் துரத்தியபோது, ​​  51 பந்துகளில் 90  ஓட்டங்களை ரிஸ்வி  அடித்ததால் 18.1 ஓவர்களில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில்  டெல்லி கேபிடல்ஸ் அணி   வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லி  முதலில் பந்து வீசியது.

ரோஹித் சர்மாவிடன் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கிய    ரிக்கல்டன் 9  ஒட்டங்களில் ஆட்டமிழந்தார்.   திலக் வர்மா  ஓட்டம்  எடுக்காமல் வெளியேறினார்.மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ரோஹித், சூர்யகுமார் யாதவ் ஜோடி, 53  ஓட்டங்கள் சேர்த்தது. ரோஹித்,  35 , ரூதர்போர்ட் 5, சூர்யகுமார் யாதவ் 51, நமன் திர் 28  ஓட்டங்கள் எடுத்தனர்.  20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்த மும்பை 162 ஓட்டங்கள் எடுத்தது.ர்திக் பாண்டியாவிளையாடவில்லை. சூர்யகுமார் யாதவ் மும்பைக்கு கப்டனானார்.

163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களம் இறங்கியது.    ராகுல்  ஓட்டத்துடனும்,  நிதிஷ் ராணா  ஓட்டம் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.   மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்தபதும் நிசங்க , சமீர் ரிஸ்வி  ஜோடி  66  ஓட்டங்கள் அடித்து நம்பிக்கையளித்தது. . நிசங்க 44  ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மில்லர் , ரிஸ்வி ஜோடி  78 ஓட்டங்கள் எடுத்து மிரட்டியது.  51 பந்துகளில் 90ஓட்டங்கள் எடித்த ரிஸ்வி ஆட்டமிழந்தார்.

18.1 ஓவர்களில் 4 விக்கெட்களி இழந்த டெல்லி 164 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.மில்லர் 21 ஓட்டங்களுடனும் , ஸ்டப்ஸ் 3 ரன்களுடனும்  களத்தில் இருந்தனர்.

இந்த சீசனில் டெல்லி அணி விளையாடிய இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.   மூலம் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. ஆட்ட நாயகன் விருதை ரிஸ்வி வென்றார்

No comments: