Tuesday, April 19, 2022

சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் வென்றார் வேதாந்த்

 டென்மார்க் நாட்டில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் சர்வதேச  நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் தங்கம் வெள்ளி  ஆகிய பதக்கங்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

  டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் (cஒபென்ககென்) நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் பங்கேற்ற வேதாந்த் மாதவன், 1500 மீற்ற ர் fரே பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டியின் 200 மீற்றர் Fல்ய் பிரிவில் இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தங்கம் வென்றார். மறுநாள் நடைபெற்ற 800 மீற்றர் பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்

இந்த தகவலை நடிகர் மாதவன் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதில், கோபன்ஹேகனில் நடந்த டேனிஷ் ஓபனில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடனும், கடவுளின் கருணையுடனும் சஜன் மற்றும் வேதாந்த் இந்தியாவுக்காக தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். பயிற்சியாளர் பிரதீப் சார், ஸ்Fஈ மற்றும் ஆண்ஸா ஆகியோருக்கு மிக்க நன்றி. நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்" என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, 16 வயதான வேதாந்த் மாதவன்  பெங்களூரில் நடைபெற்ற 47வது ஜூனியர் தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு வெள்ளிப் பதக்கங்களையும், மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்றார். அதற்கு முன், மார்ச் 2021 இல் நடந்த லாட்வியன் ஓபன் நீச்சல் சாம்பியன் போட்டியில் வேதாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.

 

No comments: