Friday, February 17, 2023

மாதவனின் தங்க மகன் வேதாந்த்


 இளைஞர்களுக்கான கேலோ இந்தியா தொடரில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் போட்டியில் 3 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இதுதொடர்பான நடிகர் மாதவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கடவுளின் ஆசிர்வாதத்தால் 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 1,500 மீற்றர் பிரிவுகளில் தங்கப்பதக்கமும், 400 மீற்றர் மற்றும் 800 மீற்றர் பிரிவுகளில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதோடு கலப்பு பிரிவுகளையும் சேர்த்து மொத்தமாக 5 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வேதாந்த் பெற்று அசத்தியுள்ளார்.

நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்டுள்ள தனது மகனை நடிகர் மாதவன் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். வேதாந்த் குறித்து பல இடங்களில் பெருமையாக குறிப்பிட்டுள்ள மாதவன், தனது மகன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராவதற்கு தேவையான பயிற்சிகளை பெறுவதற்காக குடும்பத்துடன் துபாயில் குடியேறியுள்ளார். டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது உள்ளிட்ட வெற்றிகளின் மூலம், அவ்வப்போது வேதாந்த் பெயர் செய்திகளில் இடம்பெறுவது தொடர்கதையாகி உள்ளது.

 

No comments: