சினிமா பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவுக்கே வர வேண்டும் என்று இல்லாமல், அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து அதிலும் சாதனைகளை படைக்கலாம் என சில பிரபலங்களின் வாரிசுகள் எடுத்துக்காட்டாக மாறி வருகின்றனர். நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து வருகிறார். இந்நிலையில், மாதவனை வைத்து முதல் படத்தை இயக்கிய கெளதம் மேனனின் மகனும் சினிமாவுக்கு வராமல் கிறிக்கெற்றில்அதுவும் ரிஎன்பிஎல் இல் நுழைந்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் கெளதம் மேனனே ஒரு தீவிர கிறிக்கெற் ரசிகர் தானாம். ரசிகர்
மட்டுமில்லாமல் நன்றாக கிறிக்கெற்ஆடக் கூடியவர். சினிமாவா? அல்லது கிறிக்கெற்றா? எதை
வாழ்க்கையாகத் தேர்வு செய்வது என முடிவெடுக்கும் நிலை வரும் போது சினிமாவை தேவு செய்திருக்கிறார்
கெளதம் மேனன். இதனை அவரே பழைய பேட்டியில் குடும்பத்தை பற்றி கூறும்போது கூறியுள்ளார்.
கெளதம் மேனனின் மகன்கள் கிறிக்கெற் வீரர்களாக மாறவே முடிவெடுத்து அதற்கான முயற்சியில்
மூத்த மகன் ஆர்யா தற்போது வெற்றியும் கண்டிருக்கிறார்.
கெளதம் மேனன் மகன் தற்போது ஆரம்பித்துள்ள தமிழ்நாடு ப்ரீமியர் லீக்
போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் பந்து வீச்சாளராக களமிறங்கி உள்ளார் இயக்குநர்
கெளதம் மேனன் மகன் ஆர்யா யோஹான் மேனன். சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிராக இவர் வீசிய
முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தி இருக்கிறார். கெளதம் மேனன் மகனுக்கு பாராட்டுக்கள்
குவிந்து வருகின்றன.
யோஹான் அத்தியாயம் ஒன்று
இயக்குநர் கெளதம் மேனன் நடிகர் விஜய்யை வைத்து இயக்க ஆரம்பித்து டிராப்பான யோஹான் அத்தியாம்
ஒன்று படத்தின் டைட்டிலே இவரது மகன் ஆர்யா யோஹான் பெயரை வைத்துத் தானா? என்கிற கேள்விகளையும்
நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். கெளதம் மேனனின் மற்ற மகன்களும் கிறிக்கெற்றில் ஆர்வம்
செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment