Sunday, January 21, 2024

Under 19 உலகக் கிண்ணத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண (அண்டர் 19 உலகக் கோப்பை) கிறிக்கெற் போட்டி  ஜனவரி 19ஆம் திகதி  தென் ஆபிரிக்காவில் ஆரம்பமானது.   இலங்கையில் நடைபெறவிருந்த இந்த போட்டி பல்வேறு காரணங்களால்  தென்னாப்பிரிக்காவுக்கு  மாற்றப்பட்டது. 16 நாடுகள்  இந்ந்த்சப் போட்டியில் விளையாடுகின்றன.  5 மைதானங்களில்  41  போட்டிகள் நடைபெற உள்ளன.

குரூப் ஏ - பங்களாதேஷ், இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா

குழு பி - இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள்

குரூப் சி - அவுஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஸிம்பாப்வே

குழு டி - ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான்

 50 ஓவர்கள் வடிவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், யுவராஜ் சிங், முகமது கைப் மற்றும் பாபர் அசாம் போன்ற பல முக்கிய வீரர்கள் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியே சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகினர்.

 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண  கிறிக்கெற் போட்டியில் அதிகமுறை இந்திய அணியே வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த முறையும் இந்திய அணி நடப்பு சம்பியனாக களமிறங்கும். இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப்   போட்டியில்  இந்தியா ஐந்து  முறை சம்பியனானது.   மூன்று முறாஇ ரன்னர்  -அப் ஆந்து.

இந்திய அணி 2000, 2008, 2012, 2018 , 2022 ஆகிய ஆண்டுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை வென்றது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக  அவுஸ்திரேலியா இதுவரை மூன்று முறை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது.   1998, 2002 , 2010 ஆகிய ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அணி பட்டத்தை வென்றுள்ளது.

பாகிஸ்தான் இரண்டு முறை வென்றுள்ளது.  கடந்த 2004 ,2006 ஆம் ஆண்டுகளில்  பாகிஸ்தான் சம்பியனானது. 

1998 ம் ஆண்டு  இங்கிலாந்து,2014 ம் ஆண்டு  தென்னாப்பிரிக்கா,2016 ம் ஆண்டு மேற்கு இந்தியா,2020 ம் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பங்களாதேஷ் சம்பிஅனாகின.  இலங்கை ஒரே  ஒரு முறை இருதிப் போட்டியில் விளையாடி தோல்வியடைந்தது.

முகமது நபியின் மகன் ஹசன் ஐசகில் , ரஷித் கானின் மருமகன் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

No comments: