உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் கப்டன் யோன் மோர்கன் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக 13 ஆம் திகதி திங்கட்கிழமை அறிவித்துள்ளார். 2019-ல் நடந்த உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த ஆண்டு அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மோர்கன் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருப்பதாவது-
தொழில் முறையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்து
விட்டது. அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். உண்மையிலேயே
மிகப்பெரும் சாகசத்தை இப்போது இழக்கிறேன். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற
பின்னர் எனக்கு பிடித்தமானவர்களுடன் நேரத்தை கழிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எனது
எதிர்காலத்தை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்கு முயற்சிக்கப் போகிறேன். இவ்வாறு மோர்கன்
கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் கேப்டனாக 126 ஒருநாள் போட்டிகளிலும், 72 ரி20
போட்டிகளிலும் மோர்கன் செயல்பட்டுள்ளார். இரு போட்டிகளிலும் சோத்து இவரது தலைமையிலான
அணி மொத்தம் 118 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இவர் 6,957 ரன்ஓட்டங்களும், ரி20 போட்டிகளில் 2,458
ஓட்டங்களும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அளவில் மோர்கன் தனது 16 வயதின்போது அயர்லாந்து அணியில் அறிமுகமானார். 2009-இல் அவர் இங்கிலாந்து அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2011 – 12-இல் கொல்கத்தா அணி ஐபிஎல் சம்பியன் பட்டம் வென்றபோது, மோர்கன் அணியில் இருந்தார். இவரது தலைமையில் கொல்கத்தா அணி 2021-ல் இறுதிப் போட்டிக்கு சென்று சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியடைந்தது.
No comments:
Post a Comment