Saturday, January 5, 2013

ரஜினியின்அரசியல் ஆசை


சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தனது அரசியல் அபிலாசையை ரஜினி வெளியீட்டதனால் தமிழக அரசியல் பரபரப்படையத் தொடங்கியுள்ளது.  . சிதம்பரம் ஒரு  பார்வை என்ற நூல்வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றபோது  கருணாநிதி, கமல், ரஜினி ஆகிய மூவரும் ஒரே மேடையில் கலந்து கொண்டு தமது அரசியல் விருப்பங்களை வெளிப்படுத்தினர்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி தமிழகத்தில் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கையில் தனது அரசியல் பாதையில் ரஜினியை அரவணைத்துச் செல்லத் தயாராக இருப்பதாக கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளார்.

ரஜினிகாந்த் நேரடியாக அரசியலுக்கு வரக்கூடாது ஆனால் தனது அரசியல் வளர்ச்சிக்கு அவர் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் விருப்பம். சென்னையில்  நடைபெற்ற கூட்டத்திலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி ரஜினியின் தோளில்  சவாரி செய்வதற்குத் தயார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் கருணாநிதி.

ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு மிகப் பலமான அஸ்திரம்ஒன்று கருணாநிதிக்குத் தேவை. ரஜினியையே அந்த அஸ்திர மாகப் பயன்படுத்துவதற்கு விரும்புகிறார் கருணாநிதி. காங்கிரஸில் இருந்து மூப்பனாரும். சிதம்பரமும் வெளியேறி  புதிய  கட்சி ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் அவர்களுக்காகக் குரல் கொடுத்தார். மூப்பனாரும், . சிதம்பரமும் கருணாநிதியுடன்  கூட்டணி அமைத்து  தமிழகத்தின் காங்கிரஸ் தாம் என்பதை நிரூபித்தனர்.

அரசியல் பற்றி அதிகம் பேசாது அமைதி காத்த ரஜினிகாந்த் தனது அரசியல் விருப்பத்தைச் சந்தர்ப்பம் பார்த்து வெளியிட்டுள்ளார். அரசியலுக்கு வருவேன் என்றோ அல்லது வரமாட்டேன் என்றோ வெளிப்படையாக எதனையும் ரஜினி சொல்லவில்லை. கருணாநிதிக்கு இது சாதகமானதாக உள்ளது. தமிழக அரசியல் பற்றி ரஜினியின் அறிவிப்பு மூடு மந்திரமாக இருக்கும் இவ்வேளையில்  . சிதம்பரம் பிரதமராக வேண்டும் எனும் தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் ரஜினி.
மன்மோகனுக்கு அடுத்து ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கனவு கண்டிருக்கும்  வேளையில் சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார் ரஜினி. அரசியலில் உள்ள நெளிவு சுழிவுகளை  ரஜினிக்கு வெளிப்படுத்தியவர்களில்  சோ, . சிதம்பரமும் முக்கியமானவர்கள். சிதம்பரமும் சோவும் அரசியலில் எதிர் எதிர் முகாம்களில் இருந்தாலும் ரஜினியுடன் இருவரும் மிக நெருக்கமாகவே உள்ளனர்.

சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்பது ரஜினியின் ஆசை. கமலின் ஆசையும் இதுதான்.  வெளிப்படையாக அரசியல் பேசாத கமல் மறைமுகமாக தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். விஜயகாந்த், ரஜினி, சரத்குமார், விஜய், ராஜேந்திர், பாக்கியராஜ் போன்ற நடிகர்கள் தமது ரசிகர்களை அரசியலின் பக்கம் திருப்பியுள்ளனர். கமல் இதற்கு விதி விலக்காக சமூக சேவையே தனது உயிர்மூச்சு என்று தனது ரசிகர்களைச் சமூக சேவையின் பக்கம் திருப்பியுள்ளார். கண் தானம், உடல் உறுப்பு தானம் எனப் பட்டியலிட்டு கமல் செய்பவற்றை எல்லாம் அவரது ரசிகர்களும் பின்பற்றுகின்றனர்.

வெளிப்படையாக அரசியல் பற்றிப் பேசாத கமல்  தனது மனதில் உள்ள அரசியல் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய பிரதமராக சிதம்பரம் வரவேண்டும் என ரஜினியும் கமலும் விரும்புகின்றனர். இந்தியப் பிரதமராகும் சிதம்பரத்துக்கு உண்டு. ஆனால்  காங்கிரஸ்  அரசியலின் கோஷ்டிபூசல் அதற்கு இடம் கொடுக்குமா என்பது சந்தேகமே!  சிதம்பரத்துக்கு எதிரான தமிழக காங்கிரஸ்காரர்களே இதற்கு முதலில் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்.

டில்லியிலும் உலக அரசியல் அரங்கிலும் சிதம்பரத்துக்கு மதிப்பும்  மரியாதையும்  உள்ளது.  நேரு குடும்பத்தின் வாரிசு அடுத்த பிரதமராக  வரவேண்டும் என்ற கனவில் உள்ளவர்கள். சிதம்பரம் பிரதமராவதை ஏற்பார்களா என்பது சந்தேகமே. பாரதீய  ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் மோடி தேர்வு செய்யப்படுவதற்குரிய சாத்தியக் கூறு அதிகமாக  உள்ளது. மோடிக்கு ஈடுகொடுக்கும்  திறமை ராகுலிடம் இல்லை. மோடிக்கு நிகராக அரசியல் செய்யக்கூடிய சகல தகுதிகளும் சிதம்பரத்திடம்  உள்ளது.  ஆகையினால்  கமல், ரஜினி, ஆகியோரின் விருப்பம் நிறைவேறும் சாத்தியம் உள்ளது.

இந்தியப்  பிரதமர் கனவில் மிதக்கும் அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவும்  ஒருவர். காங்கிரஸ் பாரதீய ஜனதா கட்சி ஆகியவறுக்கு மாற்றீடாகப் புதிய கூட்டணி ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கொள்கையில்  அரசியல் காய்களை நகர்த்திவருகிறார் ஜெயலலிதா.

இந்திய நாடாளுமன்றம் பொதுத் தேர்தலில் 40தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம்  நிறைவேற்றியுள்ளது.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பி இருக்கும் சிறிய கட்சிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளன.

கமலும் ரஜினியும் சிதம்பரத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இந்தியப் பிரதமராகும் கனவை தொடர்கிறார் ஜெயலலிதா

மெட்ரோநியூஸ் 04/01/13

Monday, December 31, 2012

திரைக்குவராதசங்கதி 53


தமிழ்த்திரைஉலகைஒருகாலத்தில்கட்டிஆண்டசக்கர‌வர்த்திஇசைமேதைஜி.ராமநாதன்யு.சின்னப்பா,தியாகராஜபகவதர்,டி.ஆர்.மகாலிங்கம்போன்றஇசைவல்லுநர்களைப்பாடவைத்தஇசைமேதை.எஸ்.எம்.சுப்பையாநாயுடு,வி.வெங்கட்ராமன்,கே.வி.மகாதேவன்,விஸ்வநாதன்,ராமமூர்த்தி,இளையராஜாபோன்றஇசைஅமைப்பாளர்கள்இவரின்பாடல்களைப்புகழ்ந்துபேசியுள்ளனர்.அவரைப்போன்றஇசைஅறிவுதம்மிடம்இல்லைஎனவெளிப்படையாகவேபலசந்தர்ப்பங்களில்இந்தஇசைஅமைப்பாளர்கள்கூறியுள்ளனர்.1941ஆம்ஆண்டுபிர‌பலபாடலாசிரியரும்இசைமேதையுமானபாப‌நாசம்சிவனுக்குஉதவியாளர்தேவைஎனஒருபத்திரிகையில்விளம்பர‌ம்வெளியானது.அந்தவிளம்பர‌த்தைப்பார்த்துவிட்டு25வயதுஇளைஞர்திருச்சியில்உள்ளதிரைμப்படதயாரிப்புநிறுவனத்துக்குச்சென்றார்.அங்கே ""உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ'' என்ற பாடலை பாபநாசம்சிவன்பாடிக்கொண்டிருந்தார்.பாபநாசம்சிவன்பாடியஅப்பாடலைஇன்னும்மெருகேற்றவிரும்பியஅந்தஇளைஞன்இப்படிப்பாடினால்நன்றாகஇருக்கும்என்றுபாடிக்காட்டினான்.அங்குஇருந்தவர்கள்அவனைஆச்சரியமாகப்பார்த்தனர்.வேலைதேடிவந்தஒருஇளைஞன்,பாபநாசம்சிவனுக்கேபாடிக்காட்டினால்வேலைகிடைக்குமாஎன்றுசிலர்பரிதாபப்பட்டனர்.தனதுபாடலைமெருகேற்றியஅந்தகலைஞனுக்குபாபநாசம்சிவன்உடனடியாகவேலைகொடுத்தார். அந்தஇளைஞன் தான் ஜி. ராமநாதன்

.தியாகராஜகீர்த்தனைகள்,வர்ணமெட்டுக்கள்,நாடகப்பாடல்கள்,இந்திப்படமெட்டுக்கள்,நாட்டுப்புறப்பாடல்கள்என்றுகூட்டுக்கலவையாகத்திகழ்ந்ததமிழ்இசைஉலகைதனித்துவமானபாதையில்வாராய்நீவாராய்எனஅழைத்துச்சென்றுஉலவும்தென்றலாகத்தவழவிட்டவர்ஜி.ராமநாதன்.பாபநாசம்சிவன்பாடல்களைஎழுதிஅதற்குரியமெட்டையும்கொடுப்பார்ஜி.ராமநாதன்.இசைஅமைப்பாளாராகப்பரிணமிக்கத்தொடங்கியதும்மெட்டுக்கொடுப்பதைபாபநாசசிவம்தவிர்த்துவிட்டார்.இந்தப்பாடல்இந்தமெட்டில்அமைந்தால்நன்றாகஇருக்கும்என்பதைஜி.ராமநாதன்நன்றாகஅறிந்துவைத்திருந்தார்.ஜி.ராமநாதனுக்குபெண்தேடும்படலம்ஆர‌ம்பமானது.திருச்சியில்ஜெயலட்மிஎன்றபெண்ணைத்திருமணம்செய்யஏற்பாடானது.இர‌வு9மணிக்குபெண்பார்க்கச்சென்றார்ராராமநாதன்.பெண்ணுக்குப் பாடத் தெரியுமா எனக்கேட்டார். பாடசாலையில் பாடிய பாடலைமணப்பெண்பாடிக்காட்டினார்.அந்தப்பாடலைக்கேட்டஜிராமநாதன்வாய்விட்டுச்சிரித்தார்.ஆர்மோனியத்தைஎடுத்துப் பாடத் தொடங்கினார் ஜி. ராமநாதன்.அவர்பாடிமுடிக்கும்போதுநள்ளிர‌வு12மணிபெண்பார்க்கவந்தராமநாதன்பாடியபாடல்களைக்கேட்டுஅங்குள்ளவர்கள்லயித்துவிட்டார்கள்.அந்தப்பெண்ணையேமணமுடிக்கஒருநிபந்தனைவிதித்தார்.தயவுசெய்துஇனிமேல்பாடக்கூடாதுஎன்பதுதான்அ.ந்தநிபந்தனைபாடத்தெரியாதபெண்ணைராமநாதன்வேண்டாம்என்றுகூறிவிடுவார்என்றுதான்ங்கிருந்தவர்கள்எதிர்பார்த்தனர். அவரின் நிபந்தனையைக்கேட்டு அனைவரும் சிரித்துவிட்டனர்.


கதாகலாட்சேபம்,நாடகமேடைஆகியவற்றின்திசைதிறமையைவெளிப்படுத்தியஜி.ராமநாதன்திரைப்படத்துறையில்புகுந்துஅங்கும்தன்புகழைப்பர‌ப்பத்தொடங்கினார்.நாடகமேடையிலேராஜபார்ட்நடிகருக்கும்பின்பாட்டுபாடும்ராமநாதனுக்கும்இடையேபலத்தபோட்டிஏற்படும்.அந்தப்போட்டியிலேயார்வெற்றிபெறுவார்கள்என்றுபோஸ்டர்கள்ஒட்டிர‌சிகர்களின்ஆவøலத்தூண்டுவார்கள்,நாடகங்களைநடத்துவார்கள்.நாடகம்தொடங்கிராஜபார்ட்மேடையிலேதோன்றிவிட்டார்அவ‌ருக்கும்போட்டியாகராமநாதன்பின்பாட்டுப்பாடுவார்.ராஜபார்ட்டாகயார்நடித்தாலும்ராமநாதனின்பின் பாட்டுக் கேட்பதற்கென்றே ஒருர‌சிகர் கூட்டம் இருந்தது.
ரமணி
மித்திரன்01/04/2007
 114 a