Monday, May 2, 2022

ருவிட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்


 அதிக  உறுப்பினர்களைக் கொண்ட சமூக  ஊடகமான ருவிட்டரை  எலான் மஸ்க் வாங்கப்போகிறார் என்று பரபரப்பாகப் பேசபட்ட செய்தி கடைசியில் உண்மையாகிவிட்டது. ருவிட்டர் பரவை இன்று எலான் மஸ்கின்  வசமானது.

2006-ல் தொடங்கப்பட்ட முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரின் 100 சதவிகித பங்குகளை 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியுளார். எலான் மஸ்க். 54.20 டாலர் ஒரு பங்கின் விலையாக பங்குதாரர்களுக்கு கிடைக்கும். ஏப்ரல் 1 அன்று சந்தையில் விற்பனையான விலையை விட இது 38 சதவிகிதம் அதிகம்.

ருவிட்டரில் கருத்துச் சுதந்திரம்  இல்லை என்பது எலானின் குற்றச்சாட்டு.  அதிக முறை ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் எலான் மஸ்க் ட்விட்டர் பக்கமும் அடக்கம். கொரோனா தொடர்பாக பதிவிட்ட போது அதனை ட்விட்டர் நீக்கியது. இப்படியாக ட்விட்டருக்கும் எலானுக்குமான உறவு பகையும் முரணும் சேர்ந்ததே. அவற்றையெல்லாம் ட்விட்டரை வாங்கி சரி செய்து கொள்வோம் என முடிவு செய்துவிட்டார் எலான். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்கை நிர்வாகக் குழுவுக்கு அழைத்தார் ருவிட்டரின் சிஇஓ பராக் அகர்வால். எலான் மறுத்துவிட்டார். ஆனால், இப்போது 100 சதவிகிதத்தை எலான் வாங்கியிருக்கும் நிலையில், நிலைமை தலைகீழ்.

இனி ருவிட்டரில் வர இருக்கும் மாற்றங்கள் குறித்து நெட்டிசன்கள் ஆர்வத்தோடு பதிவிட்டு வருகிறார்கள். ஏற்கெனவே சில பகுதிகள் மட்டும் ஓப்பன் சோர்ஸ் எனப்படும் எளிதாக அணுகக்கூடிய மென்பொருளாக இருக்கும் நிலையில் ட்விட்டர் இனி முழுக்கவே ஓப்பன் சோர்ஸாக மாறவுள்ளது. ஸ்பம்பொட்ச் எனப்படும் மூட்டை பூச்சிக்களை நசுக்குவதே எலானின் அடுத்த கடமையாக இருக்கப்போகிறது. உள்ளேயும் வெளியேயும் திறந்த புத்தகமாக 'கருத்துக்களைச் சுதந்திரமாக முன்வைப்பதற்கான களமாக', குறிப்பாக ட்வீட்டை எடிட் செய்யும் வசதியைக் கொண்டு வர இருக்கிறார் எலான்.

ருவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டார்ஸி, "ருவிட்டர் பொது உடமை ஆக இருப்பதே சரி. ஒருவர் உரிமை கொள்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் இன்றைக்கு ட்விட்டர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ஒற்றைத் தீர்வாக நான் பார்ப்பது எலானைதான். சமூக மனநிலையை முன்வைக்கும் அவரது மிஷனில் நான் நம்பிக்கை கொள்கிறேன்" என்று ட்விட் செய்துள்ளார்.

ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவதில் இருந்து எலான் மஸ்க்கை தடுக்கும் வகையில் அதன் போர்ட் உறுப்பினர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அதே போர்ட் உறுப்பினர்கள் தற்போது இறங்கி வந்து எலான் மஸ்க்கிடம் ருவிட்டர் நிறுவனத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர்.  முதலில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை படிப்படியாகத்தான் மஸ்க் உயர்த்தினார். முதலில் 5 சதவிகித பங்குகளை வைத்து இருந்தவர் அதன்பின் கடந்த சில தினங்களுக்கு முன் தனது பங்குகளை 9.2 என்ற அளவிற்கு உயர்த்தினார். இதன் மூலம் அந்த நிறுவனத்தில் அதிக பங்கு கொண்டு இருக்கும் தனி நபராக மஸ்க் உருவெடுத்தார். முன்னதாக இந்த நிறுவனத்தில் வான்கார்ட் குழு வைத்திருந்த 8.8 சதவிகித பங்குதான் அதிகபட்ச பங்காக இருந்தது. வான்கார்ட் குழு அதை மஸ்க் பின்னுக்கு தள்ளினார். முறைப்படி அதிக பங்கு வைத்திருந்த அவர் தனக்கு ருவிட்டர் நிறுவனத்தை வாங்கும் விருப்பம் இல்லை என்று முதலில் பங்குதாரர்கள் பைலிங்கில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதன்பின் போர்ட் உறுப்பினர்களின் குழுவில் இணைய மறுத்தார். இதற்கான அழைப்பை சிஇஓ பராக் அக்ரவால் விடுத்து இருந்தார். ஆனாலும் கூட போர்ட் உறுப்பினர்களின் குழுவில் அவர் இணையவில்லை.

  போர்ட் உறுப்பினர் குழுவில் இருந்தால் மஸ்க் 14.5 சதவிகித பங்குகளுக்கு மேல் வாங்க முடியாது. அதேபோல் இவர் குழுவில் சொல்லும் மாற்றங்களை மற்ற எல்லா உறுப்பினர்களும் ஏற்க வேண்டும். எனவே மஸ்க் சுதந்திரமாக ருவிட்டர் நிறுவனத்தில் மாற்றங்களை செய்ய முடியாது. இதனால் போர்டில் இணையாத எலான் மஸ்க் மொத்தமாக ருவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை எடுத்தார். முதலில் இதை வாங்கும் விருப்பம் இல்லை என்றவர் அதை வாங்கும் முடிவை எடுத்தார்.

 ருவிட்டர் நிறுவனத்தின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 37 பில்லியன். இதை மொத்தமாக 44 பில்லியனுக்கு வாங்கும் ஆபரை மஸ்க் கொடுத்தார். இதை ருவிட்டர் நிறுவனம் ஏற்காத பட்சத்தில் தன்னிடம் பிளான் பி இருக்கிறது என்று எலான் மஸ்க் குறிப்பிட்டார். பிளான் பி இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த காஸ்டலியான யுத்தம் தொடங்கியது. மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதில் இருந்து தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன.ஏனென்றால் ருவிட்டரில் பெரும்பான்மை பங்குகளை மஸ்க்தான் வைத்து இருந்தார். இதனால் அதிக பங்குகளை வைத்திருக்கும் எலான் மஸ்க் போன்ற பங்குதாரர்களின் கோரிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் ஏற்க வேண்டும். ஒருவேளை மஸ்க் கொடுத்த ஆபரை ட்விட்டர் நிறுவனம் ஏற்காத பட்சத்தில் அது பங்கு ரீதியாக அந்த நிறுவனத்திற்கு சரிவை ஏற்படுத்தலாம்.

பங்குதாரர்கள் விருப்பத்திற்கு எதிராக போர்ட் செயல்படுவதாக கூறி போர்ட் கலைக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே மஸ்க்கை விட அதிக பங்குகளை வாங்க ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் முடிவு செய்தனர். மஸ்க்கை முந்தும் வகையில் தற்போது வான்கார்ட் குழு மீண்டும் பங்குகளை உயர்த்தியது. வான்கார்ட் நிறுவனம் தனது மொத்த பங்குகளை 10 சதவிகிதமாக உயர்த்தியது. அதோடு ருவிட்டர் நிறுவனம் பாய்சன் பில் எனப்படும் விஷ மாத்திரையை சாப்பிட்டது. பாய்சன் பில் அதாவது மேலே படித்தோமே எதிரி நாட்டிடம் சிக்காமல் இருக்க வீரர்கள் விஷ மாத்திரையை சாப்பிடுவது போல ட்விட்டர் நிறுவனம் மஸ்க்கிடம் சிக்காமல் இருக்க விஷ மாத்திரையை சாப்பிட்டது. அதாவது ட்விட்டர் நிறுவனம் புதிதாக சில பங்குகளை உருவாக்கி அதை விற்பனை செய்தது. இந்த பங்குகளை அதன் மற்ற பங்குதாரர்கள் குறைந்த விலைக்கு வாங்க முடியும். ஆனால் மஸ்க் வாங்க முடியாது. விஷ மாதிரி என்றால் என்ன? மற்ற பங்குதாரர்கள் இந்த பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கினால்.. அதை வாங்கிய பின் அதன் உண்மையான மதிப்பு அதிகமாக இருக்கும். இதனால் புதிய பங்குகளை பல பங்குதாரர்கள் ஆர்வமாக வாங்குவார்கள்.  இப்படி புதிய பங்குகள் வேறு பங்குதாரர்களுக்கு விற்கப்படும் நிலையில், தானாக மஸ்க் வைத்து இருக்கும் பங்கு மதிப்புகள் சரிவை சந்திக்கும். இதை கார்ப்ரேட் உலகில் பாய்சன் பில் என்பார்கள். அதாவது ஒரு நிறுவனத்தை கைப்பற்ற முயலும் நபரை தடுக்கும் வகையில் மற்ற பங்குதாரர்களுக்கு கூடுதல் பங்குகளை விற்கும் யுக்தி. ருட்விட்டர் நிறுவன போர்ட் உறுப்பினர்கள் பின்னர் தானாக முன் வந்து மஸ்க் ஆபரை ஏற்றுக்கொண்டனர் ருவிட்டரில் இருக்கும் குறைபாடுகளைக் களைந்துபுதிய ருவிட்டரை உருவாக்கப்போவதகத் தெரிவித்துள்ள எலான் மஸ்க்  என்ன செய்யபோகிறார் அன்பதை அறிய உலகம் ஆவலாக  இருக்கிறது.

சச்சினின் சாதனையை சமன் செய்த ருதுராஜ்

சன்றைசஸுக்கு எதிரான போட்டியில்  1 ஓட்டத்தில் சதத்தை தவறவிட்டு   வெளியேறிய ருதுராஜ்ஜை  பல ஜாம்பவான்கள் இது சதத்திற்கு ஈடானது என்பதால் வருத்தப்பட வேண்டாம் என்று பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக இப்போட்டியில் 99 ஓட்டங்களை விளாசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 1000 ஓட்டங்களை கடந்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து மிகப்பெரிய பெருமையைப் பெற்றார்.

  1. சச்சின் டெண்டுல்கர்/ருதுராஜ் கைக்கவாட் : 31 இன்னிங்ஸ்

 2. சுரேஷ் ரெய்னா : 34 இன்னிங்ஸ்

 3. ரிஷப் பண்ட்/தேவ்தூத் படிக்கல் : 35 இன்னிங்ஸ்

 4. கெளதம் கம்பீர் : 36 இன்னிங்ஸ்

  இதுபோல் 99 ஓட்டங்களில் சச்சின் டெண்டுல்கர் நிறைய முறை  ஆட்டமிழந்ததைப் பார்த்துள்ளோம். அதேபோலவே     99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த அவர் அவரையும் மிஞ்சும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 31 இன்னிங்சிஸ்களுக்குப் பின் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையும்  : 1. ருதுராஜ் கைக்வாட் : 1076 ரன்கள்

 2. சச்சின் டெண்டுல்கர் : 1064

3. தேவ்தூத் படிக்கல் : 932 ரன்கள்

 

ஆல் டைம் பார்ட்னர்ஷிப் சாதனை

 இப்போட்டியில் முதல் விக்கெட்டுக்கு தெறிக்கவிடும் 182 ஓட்டங்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த ருதுராஜ் கைக்கவாட் – டேவோன் கான்வே ஜோடி ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை அணிக்காக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த ஜோடி என்ற ஷேன் வாட்சன் – டுப்லஸ்ஸிஸ் சாதனையை முறியடித்து புதிய ஆல் டைம் சென்னை ஜோடியாக சாதனை படைத்தனர்

  1. ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே : 182, ஹைதெராபாத்க்கு எதிராக, 2022* 2. ஷான் வாட்சன் – டு பிளேஸிஸ் : 181, பஞ்சாப்க்கு எதிராக, 2020

. அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற ஏபி டிவில்லியர்ஸ் – விராட் கோலி சாதனையையும் உடைத்த இவர்கள் புதிய சாதனை படைத்தனர்.   1. ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே : 182, 2022*

2. விராட் கோலி – ஏபி டிவில்லியர்ஸ், 2016

Sunday, May 1, 2022

காங்கிரஸில் சேர பிரசாந்த் கிஷோர் மறுப்பு

இந்திய அரசியலில் திருப்பு முனையை ந்நெபடுத்தும் பிரசாந்த்கிஷோர் காங்கிரச் கட்சியில் சேரப்போகிறார்   அவருக்கு பெரிய பதவி காத்திருக்கிறது என கடந்த இரண்டு மாதங்களாக வெளியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளை வைக்கப்பட்டுள்ளது.

``பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுப்பு தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையாவிட்டாலும் அவர் அளித்த ஆலோசனைகளுக்கு நன்றி" என  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா தன் ட்விட்டர் பக்கத்தில்,  பதிவிட்டு தெளிவு படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பான அந்தக் கட்சி மேலிடத்தின் ஆஃபரை நான் நிராகரித்து விட்டேன். நான் அந்தக் கட்சியில் இணைவதை விடவும், அந்த கட்சி தன்னுடைய ஆழமான கட்டமைப்பு பிரச்னைகளில் கவனம் செலுத்தி சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பதை நான் என்னுடைய கோரிக்கையாக முன்வைக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் , குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வியூகம் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

அதில் காங்கிரஸில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தாக தகவல்கள் வெளியானது. மேலும், காங்கிரஸ் தலைமை பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை ஏற்று அது தொடர்பாக மே 13 முதல் மே 15 வரை ராஜஸ்தானின் உதய்பூரில் `நவ் சங்கல்ப சிந்தன் ஷிவிர்' என்ற ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பதற்கு மூத்த அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

 

  2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடளுமன்றத்  தேர்தலில் இருந்து, காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. கட்சித் தலைவராக இருந்த சோனியாவின் மகன் ராகுல், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார்.இதையடுத்து, தற்காலிக தலைவராக சோனியா மீண்டும் பொறுப்பேற்றார்.

ஆனாலும் பல தலைவர்கள், ராகுலுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். கட்சியின் முக்கிய முடிவுகளையும் ராகுலே எடுத்து வந்தார். இதனால், அதிருப்தி அடைந்த பல மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறத் துவங்கினர். இதனால் கட்சி கலகலத்தது.

இந்நிலையில், கட்சிக்கு நிரந்தர தலைவர் நியமனம் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் போர்க்கொடி துாக்கினர். 'ஜி - 23' என்றழைக்கப்படும், இந்த 23 அதிருப்தி தலைவர்கள், கட்சியில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும்படி சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனாலும் பெரிய அளவில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கும் வரை, சோனியாவே தலைவராக தொடர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என பல மாநிலங்களில் நிலவிய கோஷ்டிப்பூசல் தேர்தலில்  தோல்வியைக் கொடுத்தது.   பாரதீய ஜனதாவுக்கு எதிரான  வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில், திரிணமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி போன்ற கட்சிகள் ஈடுபட்டுள்ளன.இந்தக் கூட்டணியில், காங்கிரஸுக்கு இடமில்லை என அக்கட்சிகள் கூறின.தேசிய அளவில் கட்சியின் செல்வாக்கு அதல பாதாளத்துக்கு சென்றுள்ள நிலையில், 2024 தேர்தலை சந்திப்பது தொடர்பாக காங்கிரசுக்கு ஆலோசனை வழங்க, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் முன்வந்தார்.

 அவர் சோனியாவுடன் பல முறை பேச்சு நடத்தினார். இதனால், கட்சியின் மீது புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார் சோனியா. கட்சிக்கு இலவசமாக விளம்பரம் கிடைத்துள்ளது. தேசிய அளவில், காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாது என்று பேசும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹரியானாவின் புதிய மாநிலத் தலைவராக, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ஆதரவாளரான உதய் பான் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஹரியானா மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவராக ஹூடா இருந்தாலும், ஜி - 23 குழுவில் அவர் உள்ளார். ஹூடா ஆதரவாளருக்கு பதவி வழங்கியதன் மூலம், அவரும், ஹூடாவும் அதிருப்தியாளர்கள் குழுவில் தொடர மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூடாவின் நண்பரான குலாம் நபி ஆசாதுக்கு, இது பெரிய அதிர்ச்சியாக இருக்கும். அவரைச் செயலிழக்கச் செய்தால், ஜி - 23யை வலுவிழக்கச் செய்யலாம் என்பது, சோனியாவின் கணக்கு.எனவே அவர், மிகவும் தந்திரமாகச் செயல்பட்டு, அதிருப்தியாளர்கள் குழுவில் பிளவை ஏற்படுத்தி உள்ளதுடன், ஹரியானாவில் இருந்த கோஷ்டி பூசலுக்கும் முடிவு கண்டுள்ளார். இதன் வாயிலாக, கட்சியில் சோனியாவின் கையே ஓங்கியுள்ளது, கட்சியினருக்கு உணர்த்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான கமல்நாத், கட்சியின் சட்டசபை தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மற்றொரு மூத்த தலைவரான கோவிந்த் சிங், காங்., சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

'கட்சியில் ஒருவருக்கு ஒருவர் பதவி என்ற கொள்கையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. கமல்நாத் ஏற்கனவே ம.பி., மாநில காங்., தலைவராக பதவி வகிக்கிறார். இதனால், காங்., சட்டசபை தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்' என, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகமும், சோனியா காந்தியின் திட்டமும் கங்கிரஸுக்கு  கைகொடுக்கும் என தொண்டர்கள் நம்புகிறார்கள்.