சன்றைசஸுக்கு எதிரான போட்டியில் 1 ஓட்டத்தில் சதத்தை தவறவிட்டு வெளியேறிய ருதுராஜ்ஜை பல ஜாம்பவான்கள் இது சதத்திற்கு ஈடானது என்பதால் வருத்தப்பட வேண்டாம் என்று பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக
இப்போட்டியில் 99 ஓட்டங்களை விளாசிய அவர் ஐபிஎல்
வரலாற்றில் அதிவேகமாக 1000 ஓட்டங்களை கடந்த இந்திய வீரர்
என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை
சமன் செய்து மிகப்பெரிய பெருமையைப்
பெற்றார்.
1. சச்சின்
டெண்டுல்கர்/ருதுராஜ் கைக்கவாட் : 31 இன்னிங்ஸ்
2. சுரேஷ்
ரெய்னா : 34 இன்னிங்ஸ்
3. ரிஷப்
பண்ட்/தேவ்தூத் படிக்கல் : 35 இன்னிங்ஸ்
4. கெளதம் கம்பீர் : 36 இன்னிங்ஸ்
இதுபோல் 99 ஓட்டங்களில் சச்சின் டெண்டுல்கர் நிறைய
முறை ஆட்டமிழந்ததைப்
பார்த்துள்ளோம். அதேபோலவே 99 ஓட்டங்களில்
ஆட்டமிழந்த அவர் அவரையும் மிஞ்சும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட்டில்
31 இன்னிங்சிஸ்களுக்குப் பின் அதிக ஓட்டங்கள்
எடுத்த இந்திய பேட்ஸ்மேன் என்ற
பெருமையும் : 1. ருதுராஜ்
கைக்வாட் : 1076 ரன்கள்
2. சச்சின்
டெண்டுல்கர் : 1064
3. தேவ்தூத்
படிக்கல் : 932 ரன்கள்
ஆல் டைம் பார்ட்னர்ஷிப் சாதனை
இப்போட்டியில்
முதல் விக்கெட்டுக்கு தெறிக்கவிடும் 182 ஓட்டங்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த
ருதுராஜ் கைக்கவாட் – டேவோன் கான்வே ஜோடி
ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில்
சென்னை அணிக்காக எந்த ஒரு விக்கெட்டுக்கும்
அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த ஜோடி
என்ற ஷேன் வாட்சன் – டுப்லஸ்ஸிஸ்
சாதனையை முறியடித்து புதிய ஆல் டைம்
சென்னை ஜோடியாக சாதனை படைத்தனர்
1. ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே : 182, ஹைதெராபாத்க்கு
எதிராக, 2022* 2. ஷான் வாட்சன் – டு
பிளேஸிஸ் : 181, பஞ்சாப்க்கு எதிராக, 2020
. அத்துடன்
ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிராக எந்த
ஒரு விக்கெட்டுக்கும் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த
ஜோடி என்ற ஏபி டிவில்லியர்ஸ்
– விராட் கோலி சாதனையையும் உடைத்த
இவர்கள் புதிய சாதனை படைத்தனர்.
1. ருதுராஜ்
கைக்வாட் – டேவோன் கான்வே : 182, 2022*
2. விராட்
கோலி – ஏபி டிவில்லியர்ஸ், 2016
No comments:
Post a Comment