Wednesday, September 6, 2023

சச்சின் கோலிக்கு இடையேயான விநோத ஒற்றுமை

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்து கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்கள் மத்தியில் போற்றப்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்து இந்திய அணியின் பேட்டிங் தூணாக பார்க்கப்பட்டு வருபவர் விராட் கோலி என்றால் அது மிகயல்ல இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கிடையே எதிர்பாராமல் நடந்த நான்கு ஒற்றுமையான விடயங்களை இந்த பதிவில் காணலாம்.

1) அறிமுக போட்டி ஒரே திக‌தியில் அமைந்தது :

சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் திக‌தி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமாகினார். அதேபோன்று விராட் கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் திக‌தி இலங்கை அணிக்கு எதிராக அறிமுகமானார். மாதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அறிமுகமான திக‌தி ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 2) முதல் டெஸ்ட் சதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக:  சச்சின் டெண்டுல்கர் கடந்த 1992-ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அதேபோன்று விராட் கோலியும் கடந்த 2012-ஆம் ஆண்டு அடிலெய்டு நகரில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்திருந்தார். இருவருமே அவுஸ்திரேலியா மண்ணில் தங்களது முதல் சதத்தை பதிவு செய்தனர்.

3) ஐபிஎல் தொடரில் க‌ப்டனாக ஒரேஞ்சு தொப்பி:

 ச்சின் டெண்டுல்கர் கடந்த 2010-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கப்டனாக அதிக ஒட்டங்களை குவித்து ஒரேஞ்ச்  தொப்பையை கைப்பற்றி இருந்தார். அதேபோன்று விராட் கோலி கடந்த 2016-ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணியின் க‌ப்டனாக அதிக ஒட்டங்களை குவித்து ஒரேஞ்ச் தொப்பியை கைப்பற்றினாறார் 

. 4) க‌ப்டனாக ஒரே அணிக்கு எதிராக அறிமுகமானது : 

 சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக க‌ப்டனாக அறிமுகமாகினார். அதேபோன்று விராட் கோலியும் இலங்கை அணிக்கு எதிராகவே ஒருநாள்க‌ப்டனாக அறிமுகமாகினார்.  சச்சின் 1996-ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அறிமுகமாகினார். 2014-ஆம் ஆண்டு விராட் கோலியும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் க‌ப்டனாக அறிமுகமாகியுள்ளார்.

லியோனல் மெஸ்ஸியின் மெய்ப்பாதுகாவலர்.


 நட்சத்திர  உதைபந்தாட்ட வீரர்களைப் பாதுகாப்பது மிகவும் சிரமமான காரியம்.    மைத்கானப் பாதுகாவலரும்,  பொலிஸாரும் கடுமையான பாதுகாப்பை உறுதிப் படுத்தினாலும், ஒரு சிலர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து விடுவார்கள்.  மைதானத்தில் இருக்கும்  கமராக்கள் அவர்களை நோக்கித் திரும்பிவிடும்.

 மெஸ்ஸி விளையாடும்போது மைதானத்துக்கு வெளியே அஜானுபாகுவான  கோட் போட்டு, ரை கட்டிய  மொட்டை மனிதர்  மெஸ்ஸிக்கு சமாந்தரமாக ஓடுவார்.மைதானத்தின்  கமராக்கள் பிரத்தியேகமானாவரின் நடமாட்டத்தியும்  படம்  பிடிக்கும்.   யாசின் சூகோ என்று அழைக்கப்படும் அவர்  லியோனல் மெஸ்ஸியின் மெய்க்காப்பாளர்க்  கடமையாற்றுகிறார்.  அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் சிப்பாயான அவர்   ஈராக்  ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்  ல் கடற்படை அதிகாரியாகப்  பணியாற்றியுள்ளார்.

லியோனல் மெஸ்ஸியின் மெய்க்காப்பாளர் (வலது) அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் என்றும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடற்படை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும் கூறப்படுகிறது.  இங்கிலாந்து  உதைபந்தாட்ட அணியின் முன்னாள்  கப்டனும், இன்டர் மியாமியின் இணை உரிமையாளருமான டேவிட் பெக்காம்  அவரைப் பரிந்துரைத்ததாக   நேஷன் உட்பட பல உள்ளூர் ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.   இருப்பினும், மெசிஸை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு அவருக்கு மட்டும் இல்லை. மெஸ்ஸிமற்றும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனில் அவரது முன்னாள் அணி வீரர் செர்ஜியோ ராமோஸ் உட்படஅவருக்கு ஒரு லட்சத்து இருபத்தி ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்,   

Monday, September 4, 2023

ரி20யில் அதிக விக்கெட்டுகளை எடுத்த டிம் சவுதீ


இதுவரை 111 போட்டிகளில் விளையாடி 23.29 சராசரியுடன் 141 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எக்கானமி விகிதம் 8.13 ஆகும்.

ரி20 போட்டிகளில் அதிக விக்கெற்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசனை பின்னுக்குத் தள்ளி நியூZஇலாந்து கப்டன் டிம் சவுதீ முதலிடம் பிடித்தார்.  

அவர் சர்வதேச ரி20 போட்டிகளில் இதுவரை 111 போட்டிகளில் விளையாடி 141 விக்கெற்களை ட்டுகளை வீழ்த்தியுள்ளார்.வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் ஆகஸ்ட் 30 அன்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் ரி 20 போட்டியில் எடுத்த விக்கெட்டின் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார்.

ரி20 வடிவத்தில் ஷகிப் , சவுதீயின் புள்ளிவிவரங்கள்:

ஷகிப்பை பின்னுக்குத் தள்ளிய சவுதீ

இதுவரை 111 போட்டிகளில் விளையாடி 23.29 சராசரியுடன் 141 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எக்கானமி விகிதம் 8.13 ஆகும்.

117 ரி20 போட்டிகளில் 140 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷகிப்பின், எகானமி ரேட் (6.79) மற்றும் சராசரி (20.49) அடிப்படையில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரை விட முன்னணியில் உள்ளார்.

100 அல்லது அதற்கு மேற்பட்ட டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில், ரஷீத் கான் மட்டுமே ஷாகிப்பை விட சிறந்த சராசரி (14.80) மற்றும் எக்கானமி ரேட் (6.16) ஆகியவற்றைக் கொண்டுள்ளார்.

ரி 20 போட்டிகளில் இரண்டு தடவை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே நியூசி., பந்துவீச்சாளர் சவுதீ ஆவார்.

இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக அவர் இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் உள்ளார்.       

வெஸ்ட் இண்டீஸ் (2018), அயர்லாந்து (2023) ஆகிய அணிகளுக்கு எதிராக ரி20 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ரி20 போட்டிகளில் 2 ஹட்ரிக் சாதனை

2010 டிசம்பரில், டி 20 கிரிக்கெட்டில் ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை சவுதீ பெற்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் அவரது மைல்கல்லாக அமைந்தது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராகவும் ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

லசித் மலிங்கா மட்டுமே குறுகிய வடிவத்தில் இரண்டு ஹட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் ஆவார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஷகிப் இதுவரை ஹட்ரிக் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

36 ஆட்டங்களில் 47 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷகிப், ஐசிசி ரி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் ஆவார்.

நியூசிலாந்தைப் பொருத்தவரை சவுதீதான் அதிக விக்கெட்டுகளை டி20 உலகக் கோப்பையில் வீழ்த்தியவர் ஆவார்.

சவுதீயின் 78 விக்கெட்டுகளில் சொந்த மண்ணில் மட்டும் 59 ரி20 போட்டிகளில் கிடைத்துள்ளன.

50 உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷகிப் 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

23 வெளிநாட்டு ரி20 போட்டிகளில் 32 விக்கெட்டுகளையும், ஷகிப் 31 போட்டிகளில் 34 விக்கெட்டுகளையும் வைத்துள்ளார்.

சவுதீ 31 விக்கெட்டுகளையும், ஷகிப் 42 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.


தென் ஆபிரிக்காவை வென்று அவுஸ்திரேலியா உலக சாதனை

  தென்னாப்பிரிக்காவுக்குக்கும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான  ரி 20 முதலாவது போட்டியில்  111  ஒபொப்ட்டங்களில் வெற்ரி பெற்ற அவுஸ்திரேலியா  புதிய சாதனை படைத்தது. ஆரோன் பின்ச் ஓய்வு பெற்ற நிலையில் புதிய கப்டனாக நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ் இத்தொடரில் அவுஸ்திரேலியாவுக்குத்  தலைமை தாங்கினார்.

நாணயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.   முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் ஆரு விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்கள் எடுத்தது.  டிராவிஸ் ஹெட் 6, மேத்தியூ ஷார்ட் 20 என தொடக்க வீரர்கள் சொற்பஓட்டங்கள் அடித்து   ஏமாற்றிய போதிலும் 3வது இடத்தில் களமிறங்கிய புதிய கப்டன் மிட்சேல் மார்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல்  13 பவுண்டரி 2 சிக்சருடன் 92* (49) ஓட்டங்கள்  குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் கடைசி நேரத்தில் தனது பங்கிற்கு சரவெடியாக விளையாடிய டிம் டேவிட் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 64 (28) ஓட்டங்கள் எட்சுத்த்தார்.   தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லிசாத் வில்லியம்ஸ் 3 விக்ற்களை  எடுத்தார்.

227 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு முதல் ஓவரிலேயே தெம்பா பவுமா டக் அவுட்டாக வேன் டெர் டுஷன் 21, கப்டன் மார்க்ரம் 5, அறிமுக போட்டியில் தேவால்ட் பிரேவிஸ் 5, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 0 என முக்கிய வீரர்கள்  சொற்ப ஓட்டங்களில் வெளியேறி பின்னடைவை ஏற்படுத்தினர்.   -   மறுபுறம்  முடிந்தளவுக்கு போராடிய மற்றொரு தொடக்க வீரர் ரிசா ஹென்றிக்ஸ் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 56 (43) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்களும் அவுஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சு தாக்குப் பிடிக்க முடியாமல் சொற்ப  ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால்  15.3 ஓவரில் சகல விக்கெற்களையும்

 இழந்த   தென்னாபிரிக்கா 115 ஓட்டங்கள் எடுத்தது. . அந்தளவுக்கு பந்து வீச்சில் தரமாக செயல்பட்டு 111 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக தன்வீர் சங்கா 4 விக்கெட்டுகளையும் மார்கஸ் ஸ்டோனிஸ் 3 விக்கெட்களையும் சாய்த்தனர்

  சர்வதேச ரி20  கிறிக்கெற்றில்  தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தது அவுஸ்திரேலியா.

சாதனைப் பட்டியல்  பட்டியல்:

1. அவுஸ்திரேலியா – 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2023*

2. அவுஸ்திரேலியா – 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2020

 3. அவுஸ்திரேலியா – 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2020

 4. அவுஸ்திரேலியா – 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2006

 5. பாகிஸ்தான் – 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2013

6. இந்தியா – 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி, 2022

உலகை உலுக்கிய பிரக்னோஜின் இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டார்.


 ரஷ்ய ஜனாதிபதியான விளடிமிர் புட்டினின் மிக விருப்புக்குரியவராக  இருந்தவர்  யெவ்ஜெனி பிரிகோஜின். உள்நாட்டிலும் ,எளிநாடுகளிலும் ரஷ்யாவுக்காக இரகசிய நடவடிக்கைகளை வெற்றி கரமாக நிறைவேற்றிய நம்பிக்கைக்குரிய நண்பன். கொடூரமான அட்டூழியங்கழை அவிழ்த்து விடும் வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஜின். 

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும்,  பிஜிகோஜினுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலால்  மொஸ்கோவை நோக்கி வாக்னர் கூலிப்படை முன்னேறியது,  பெலாரஸ் ஜனாதிபதி சமரசம் செய்து வைத்தார்.முறுகல், முட்டல், மோதல் நடந்து  இரண்டு மாதங்களி ல்  பிரிகோஜின் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியது.  அதனை விபத்து என்கிறது ரஷ்யா. உலக நாடுகள் சதி என்கிறன.

உலகை அச்சுருத்திய கூலிப் படைத்தலைவனான  பிரிகோஜினின் உடலை அவரது சொந்த  ஊரில் உள்ள பொரோகோவ்ஸ்கோய் கல்லறையில் அடக்க்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரிகோஜினின் உடல் அடக்கம் செய்யும் தகவல் ஊடகங்களுக்குப் பகிரப்படவில்லை.

  மலர்களால் மூடப்பட்டபிரிகோஜினின்  கல்லறைக்கு மேல் ஒரு மரச் சிலுவை நாட்டப்பட்டுள்ளது.  அருகில் ஒரு ரஷ்ய மூவர்ணக் கொடியும் கறுப்பு வாக்னர் கொடியும் கட்டப்பட்டன.   செவ்வாய்க்கிழமை எந்த விளம்பரமும் இல்லாமல்  பிரிகோஜினின் அவரது குடும்பத்தினரின் விருப்பத்தின்படி  உடல் அடக்கம் செய்யப்பட்டது. ரஷ்ய இராணுவத்தினர் சுற்றவர கடும்  பாதுகாப்பை உருதிப்படுத்தினர்.பிரிகோஜினின் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு புட்டின் செல்ல மாட்டார் என  அவரது  செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரிகோஜினை ஆதரித்து மக்கள் சேர்ந்து விடக்கூடாது என்பதில் ரஷ்ய அரசாங்கம்  மிகக் கவனமாக இருந்தது. அது நினைத்தது போன்றே  பிரிகோஜினின்  உடல் அமைதியாக அடக்கம் செய்யப்பட்டது.  ஆனால், மக்கள்  பிரிகோஜினுக்கும் , அவருடன்  பலியானவர்களுக்கும் வீதிகள் தோறும்  அஞ்சலி செலுத்தினர். அதனைத அதடுக்க ரஷ்ய அரசு முன் வரவில்லை.

ப்ரிகோஜின் ,வரது உயர்மட்ட லெப்டினென்ட்களின் இறுதிச் சடங்கைச் சுற்றியுள்ள இரகசியம் மற்றும் குழப்பம் கிரெம்ளின் எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையை பிரதிபலித்தது.

 பிரிகோஜினின்  மரணத்துகுப் பின்னர்  புட்டின் வெளிப்படுத்திய  கவனாமான கருத்துகள் அவரது   நிலைப்பாட்டை பிரதிபலித்தன. உக்ரைனில் நடந்த சண்டையில் வாக்னர் தலைவர்கள் "குறிப்பிடத்தக்க பங்களிப்பை" வழங்கினர் என்று அவர் கடந்த வாரம் குறிப்பிட்டார், மேலும் ப்ரிகோஜினை "திறமையான தலைவர் " மற்றும் "வாழ்க்கையில் கடுமையான தவறுகளை செய்த ஒரு கடினமான விதியின் மனிதர்" என்று விவரித்தார். பிரிகோஜினின் கடுமையான தவறுகளை புட்டிந்தெளிவுபடுத்தவில்லை.

  அதிகாரிகளை அதிகளவில் விமர்சிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கு ப்ரிகோஜின் ஒரு புகழ்பெற்ற நபராக மாறிவிட்டார் என்று கிரெம்ளின் சார்பு அரசியல் ஆய்வாளரான செர்ஜி மார்கோவ், குறிப்பிட்டார்.

   "அவரை அகற்றுவதற்கான ஒரு சிறப்பு நடவடிக்கையின் இறுதி கட்டமாக மாறியது  பாதுகாப்புப் படைகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ், கவனத்தை சிதறடிக்கும் சூழ்ச்சிகளுடன் "எல்லாம் முடிந்தவரை மூடப்பட்டது" என்று கார்னகி ரஷ்யா யூரேசியா மையத்தின் மூத்த சக டாடியானா ஸ்டானோவயா கூறினார்.

நாட்டின் உயர்மட்ட குற்றப் புலனாய்வு அமைப்பான புலனாய்வுக் குழு, பிரிகோஜினின் மரணத்தை ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. ஓகஸ்ட் 23 அன்று, மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்குப் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, பிரிகோஜினின் வணிக ஜெட் வானில் இருந்து சரிந்ததற்கு என்ன காரணம் என்று இன்னமும்  கூரப்படவில்லை.  விபத்துக்கு சற்று முன்பு, ப்ரிகோஜின் ஆப்பிரிக்காவிற்கு ஒரு பயணத்திலிருந்து திரும்பியதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் வாக்னர் குழுவின் செயல்பாடுகளை விரிவுபடுத்த முயன்றார்.

  விபத்தில் கொல்லப்பட்ட 10 பேரில் வாக்னரின் தளவாடத் தலைவர் வலேரி செக்கலோவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. பிரிகோஜினின் இரண்டாவது-இன்-கமாண்ட், டிமிட்ரி உட்கின், ஓய்வுபெற்ற இராணுவ உளவுத்துறை அதிகாரி, கூலிப்படை குழுவிற்கு தனது சொந்த பெயரின் அடிப்படையில் அதன் பெயரைக் கொடுத்தார். , 

ஒரு பூர்வாங்க அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டில், வேண்டுமென்றே வெடித்ததால் விமானம் விபத்துக்குள்ளானது என்று முடிவு செய்தது, மேலும் மேற்கத்திய அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட புட்டினின் எதிரிகளின் நீண்ட பட்டியலை சுட்டிக்காட்டியுள்ளனர். கிரெம்ளின் மேற்கத்திய குற்றச்சாட்டுகளை "முழுமையான பொய்" என்று விபத்தின் பின்னணியில் ஜனாதிபதி நிராகரித்தது.

ப்ரிகோஜின், மில்லியன் கணக்கில் சம்பாதித்த ஒரு முன்னாள் குற்றவாளி மற்றும் அவரது புனைப்பெயரான "புட்டின் சமையல்காரர்" அரசாங்க உணவு ஒப்பந்தங்கள் மூலம், கிரெம்ளின் அரசியல் நலன்களுக்கு சேவை செய்தார் மற்றும் சிரியா, லிபியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் பிற நாடுகளுக்கு தனது கூலிப்படைகளை அனுப்புவதன் மூலம் ரஷ்யாவின் செல்வாக்கை விரிவுபடுத்த உதவினார். மாஸ்கோவின் படைகளின் மிகவும் திறமையான கூறுகளில் ஒன்றான வாக்னர், உக்ரைனில் முக்கிய பங்கு வகித்தார், அங்கு மே மாத இறுதியில் உக்ரேனிய கிழக்கு கோட்டையான பக்முட்டை கைப்பற்றியது.

கொடூரமான மற்றும் அவதூறான கூலிப்படை முதலாளி ரஷ்ய இராணுவத் தலைமைக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த விபத்து ஏற்பட்டது. ப்ரிகோஜின் தனது கூலிப்படையினரை தெற்கு நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானில் உள்ள இராணுவத் தலைமையகத்தைக் கைப்பற்ற உத்தரவிட்டார், பின்னர் மாஸ்கோவில் அணிவகுப்பைத் தொடங்கினார். அவர்கள் பல இராணுவ விமானங்களை வீழ்த்தினர், ஒரு டஜன் விமானிகளை கொன்றனர்.

பங்கேற்பாளர்களை தண்டிப்பதாக புடின் உறுதியளித்தார், ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு பிரிகோஜின் பொது மன்னிப்பு மற்றும் பெலாரஸுக்குச் செல்வதற்கான அனுமதி மற்றும் அனுமதிக்கு ஈடாக கலகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

சமீப காலம் வரை உக்ரேனில் ரஷ்யாவின் இராணுவப் பிரச்சாரத்தில் முக்கியப் பங்கு வகித்து பல ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஈடுபட்ட வாக்னரின் தலைவிதி நிச்சயமற்றது.

வாக்னர் போராளிகள் ரஷ்ய இராணுவத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம், பெலாரஸுக்குச் செல்லலாம் அல்லது சேவையிலிருந்து ஓய்வு பெறலாம் என்று புடின் கூறினார். பல ஆயிரம் பேர் பெலாரஸுக்குச் சென்றனர், அங்கு அவர்கள் தலைநகரான மின்ஸ்கின் தென்கிழக்கே ஒரு முகாமில் உள்ளனர்.

அவர்கள் என்ன செய்யப் போகிரார்கள் எனத் தெரியவில்லை.  மொஸ்கோவைப் பழி வாங்க வேண்டும் என பிரிகோஜினுக்கு ஆதரவான சமூக  ஊடகங்கள் கருத்துத்  தெரிவித்துள்ளன.

Sunday, September 3, 2023

நீரஜ் சோப்ராவின் பரிசுத்தொகை 70 ஆயிரம் அமெரிக்க டொலர்

உலகச் சம்பியன்ஷிப் தடகள போட்டிகள் ஹங்கேரி தலைநகர் புடபெஸ்ட்டில் நடைபெற்றன.  ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியா சார்பில் ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் ஜோப்ரா மற்றும் டி.பி.மானு, கிஷோர் சேனா ஆகியோர் களம் கண்டனர்.   நீரஜ், தனது இரண்டாவது முயற்சிலேயே 88 புள்ளி 17 மீற்ற‌ர் தூரம் ஈட்டி எறிந்தார். 

இறுதிப் போட்டியில் ஒவ்வொரு வீரரும் தங்களது அனைத்து முயற்சிகளிலும், நீரஜின் இலக்கை எட்டிப் பிடிக்க முயன்றும் அது பலனளிக்கவில்லை. இதனால், முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். ஈட்டியை வீசிய நொடியே தன்னுடைய வெற்றியை நீரஜ் கொண்டாடினார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் வெள்ளியும், செக்குடியரசு வீரர் ஜேகப் வட்லெஜ் வெண்கலப் பதக்கத்தையும் வசப்படுத்தினர்.

இந்த போட்டியில் நீரஜ் சோப்ராவிற்கு பரிசாக 70 ஆயிரம் அமெரிக்க டொலர் அளிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 58 லட்சமாகும். வெள்ளி வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீமுக்கு இந்திய மதிப்பில் ரூ. 29 லட்சம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் அநாதையான ஓ.பன்னீர்ச்செல்வம்

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அசைக்க முடியதவராக வலம் வந்தவர்  ஓ.பன்னீர்ச்செல்வம். ஜெயலலிதா சிறைக்குச் சென்ற போது முதலமைச்சர் பதவியைப் பொறுப்புடன் ஏற்று திருப்பிக் கொடுத்தவர். எடப்பாடி பழனிச்சாமி இதற்கு நேர் மாறானவர். முதல்வர் பதவியைக் கொடுத்த சசிகலாவைத் தூக்கி எறிந்தவர்.

ஜெயலலிதாவின்  மறைவின்  பின்னர் சசிகலா அரசியலுக்குள் நுழைந்தபோது அவரை அகற்றுவதற்கு  பன்னீரை,  பாரதீய ஜனதா  பகடையாகப் பயன்படுத்தியது.சசிகலா சிறைக்குச் சென்றது  பாரதீய ஜனதா நிம்மதி அடைந்தது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சின்னம் பன்னீரின் வசம்  இருந்தது. பாரதீய ஜனதாவின் ஆலோசனையால்  அதனை எடப்பாடிக்குத் தாரை வார்த்தார்  பன்னீர்.கட்சிகுள் இருந்து பன்னீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டினார் எடப்பாடி. பாரதீய ஜனதா தன்னைக் கைவிடாது  என்ற குருட்டு நம்பிக்கையில் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் பன்னீர்.

பாரதீய ஜனதா  போட்ட தாளம் அனைத்துக்கும் ஆடிய  அன்றைய முதலமைச்சர்  எடப்பாடி கட்சிக்குள் தன்னை  வலுப்படுத்தினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடி வசமானது.  பன்னீர் நடத்திய சட்டம் போராட்டம் அனைத்தும்  முடிவுகு வந்தன. தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும்  எடப்பாடிக்கு அங்கீகரம் வழங்கின.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  கூட்டணி தமிழகத்தில் பலமாக  இருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாவும்  ஒரே கூட்டணியில்தான்  இருக்கின்றன. ஆனால், தமிழக  பாரதீய ஜனதாத் தலைவருக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களுக்கும் இடையில் சுமுகமான உறவு இல்லை. வாசன் மட்டும்தான்  இந்தக் கூட்டணிக்கு விசுவாசமாக  இருக்கிறார். ராமதாஸும், விஜயகாந்தும் வெளியில் நிற்கிறார்கள்.

பாரதீய ஜனதாவும்  மெதுமெதுவாக எடப்பாடியின் பக்கம் சாயத் தொடங்கியது. பன்னீர்  இப்பொழுதுதான் கண்ணைத் திற‌ந்துள்ளார். தினகரனுடன் கைகோர்த்துள்ள  பன்னீர்  புதிய அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். பன்னீர்  புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர்  வரை பொறுத்திருக்குமாறு அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரதீய ஜனதாவை இனியும் நம்புவதற்கு பன்னீர்ச்செல்வம் தயராக  இல்லை. தனது பலத்தைக் காட்டுவதர்காகத் தனிக் கட்சி ஆரம்பிக்கும்  முடிவை அவர் நெருங்கிவிட்டார்.

பன்னீர்ச்செல்வம், தினகரன், சசிகலா ஆகிய மூவரையும் கடைசி வரை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்பதில் எடப்பாடி உறுதியாக  இருக்கிறார்.அவரைச் சரிக்காட்ட முடியாமல்  பாரதீய ஜனதா தவிக்கிறது. நிலைமை கை மீறியதால் தனிக் கட்சி என்ற  முடிவை பன்னீர் கையில் எடுத்துள்ளார்.

பன்னீருக்கு  ஆதரவாக நிற்கும்  மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொலக் காட்சி ஒன்றுக்கு வழங்கிய  பேட்டியில் , "நாங்கள் தனித்து நிற்போம் என்றும், பாஜகவுடன் ஓபிஎஸ் இல்லை என்றும்" அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார். தனிக்கட்சி: அதுமட்டுமல்ல, தங்கள் பலத்தை காட்டுவதற்காக தனிக்கட்சி தொடங்குவதற்கு ஓபிஎஸ்ஸிடம் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆதரவாளர்களின் இந்த எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில்தான், ஓபிஎஸ்ஸும் விரைவில் தனிக்கட்சியை தொடங்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்பதை  மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதிபடுத்தியிருக்கிறார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது பனீருக்கு அழைப்பு விடப்படவில்லை. பாரதீய ஜனதாவின் தயவை எதிர்பர்க்கும் தினகரனும், சசிகலாவும்  புறக்கணிக்கப்பட்டனர். இதனால்  பன்னீர்  பெரிதும்  பாதிக்கப்பட்டார்.

 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்காகபல கள ஆய்வுகளை  பாரதீய ஜனதா செய்துள்ளது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கூட்டணி பலமாக  இருக்கிறது என்பதை பாரதீய ஜனதா  புரிந்துகொண்டுள்ளது. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள், மக்களின் அடிப்படை பிரச்சினைகள்,  நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை பிரச்சாரம் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என பாரதீய ஜனதா நம்புகிறது.

தமிழகத்தில் 10 தொகுதிகளை பாரதீய ஜனதா  குறிவைத்துள்ளது.  எடப்பாடி,பன்னீர்,தினகரன், சசிகலா ஆகிய நால்வரும்  இணைந்தால் வெற்றி   பெறலாம் என பாரதீய ஜனதா கருதுகிறது. அதற்கு  எடப்பாடி முட்டுக் கட்டையாக  இருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு தினகரன் பிரித்த வாக்குகளே காரணம்.

தென் மாவட்டங்களில் 15 தொகுதிகள் மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் நாங்கள்  இருவரும் இல்லாமல்   அதிமுகவால் வெல்ல முடியாது” என  திஅகரன் எச்சரித்துள்ளார்.  டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய, தென் மாவட்டங்களில் தினகரனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இந்த மாவட்டங்களில் தான் ஓபிஎஸ்ஸுக்கும் ஆதரவு வட்டம் இருக்கிறது.

இதையெல்லாம் கணக்குப் போட்டே இருவரும் இணைந்து மூன்றாவது அணியை அமைப்போம். சசிகலாவோடு சேர்த்து இன்னும் சில கட்சிகளையும், அமைப்புகளையும் உள்ளடக்கி அதிமுகவை தோற்கடிக்கும் ஒரே கொள்கையுடன் தேர்தலைச் சந்திப்போம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட்டால் அது அதிமுக அணிக்குத்தான் பின்னடைவை ஏற்படும் என்பது உண்மை.

  திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, சிவகங்கை, திருச்சி உள்பட பாரதீய ஜனதா போட்டியிட நினைக்கும் பல தொகுதிகளில் ஓபிஎஸ் க்கும்,  தினகரனுக்கும் நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே, இவர்கள் மூன்றாவது அணி அமைத்தால் அது தங்களையே பாதிக்கும் என்ற பதறுகிறது பாரதீய ஜனதா.

தமிழகத்தில் இதுவரை பலமுறை மூன்றாவது அணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை அனைத்துமே யார் வெல்லவேண்டும் என்பதைவிட, யார் தோற்கவேண்டும் என்பதையே தீர்மானித்துள்ளன. இப்போது பன்னீர்  தினகரன் அமைக்கத் திட்டமிடும் மூன்றாவது அணிக்கும்  எடப்பாடியை வீழ்த்தும் முயற்சியே பிரதானமாக இருக்கும்.

தலைவர்கள் ஒன்று பட்டாலும் தொண்டர்கள் ஒன்று சேர்வார்களா என்ற சந்தேகமும்  உள்ளது. 

வர்மா