Saturday, September 7, 2024

வயிற்றில் சிசு கையில் பதக்கம் கிரின்ஹாம் சாதனை

 பரிஸ் பாராலிம்பிக்கில்  இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோடி கிரின்ஹாம் எனும் வில்வித்தை வீராங்கனை 7 மாத கருவை சுமந்தவாறு, வெண்கலப்  பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்ஜோடி கிரின்ஹாம்:

ஆகஸ்ட் 31 அன்று மகளிர் பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கப் போட்டியில், கிரேட் பிரிட்டனின் ஃபோப் பேட்டர்சன் பென்னுக்கு எதிராக ஜோடி கிரீன்ஹாம் விளையாடினார். அதில் 142-141 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். டோக்கியோ பாராலிம்பிக்ஸில் தோல்வியுற்ற ஃபோப் பேட்டர்சன் பைன், இந்த முறை தங்கப் பதக்கம் வென்றார் என்பது நினைவுகூறத்தக்கது.

ஜோடி கிரீன்ஹாம் கர்ப்பமாக இருந்தபோது பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பாரா-தடகள வீராங்கனை ஆனார். அவர் சுமார் 28 வாரங்கள் அதாவது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இருப்பினும் பராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்று வரலாற்றின் பக்கங்களில் தனது பெயரைப் பதிந்துள்ளார்.

ஜோடி கிரின்ஹாமின் இடது கையில் ஊனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவள் வலது கையால் அம்பை எய்கிறார். அதுமட்டுமின்றி கலப்பு அணி கூட்டு வில்வித்தையின் காலிறுதிப் போட்டிக்கும் அவர் முன்னேறியுள்ளார்.

                               பதக்கத்தைக் கைவிட்டவர் காதலியைக் கரம் பிடித்தார்


  இத்தாலிய ஓட்டப்பந்தய வீரர் அலெஸாண்ட்ரோ ஒசோலா பராலிம்பிக் பதக்கத்தை தவறவிட்டிருக்கலாம், ஆனால் ஸ்டேட் டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் அவரது காதலி  திருமணத்தை ஏற்றுக்கொண்ட பிறகு  மகிழ்ச்சியடைந்தார்.

ஒசோலா T63 100 மீற்றர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறிய போதிலும், அவர் தனது காதலியான அரியன்னாவிடம் ஓடிச்சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். .

2015 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு ஒசோலா தனது இடது காலின் பெரும்பகுதியை இழந்தார், இது அவரது முதல் மனைவியை இறந்ததால் வாழ்க்கையில்  "இருள்" சூழ்ந்தது.

 போட்டி முடிந்த்தும் காதலியிடன் சென்று மோதிரத்தைக் கொடுத்து என்னைத் திருமணம் செய்கிறாயா எனக் கெட்டார். முதலில் அதிர்ச்சியடைந்து அவரைப் பைத்தியம் எனக் கூறிய காதலி பின்னர் மோட்திரத்தை வாங்கினார்.

                                200வது பரா தடகள தங்கத்தை வென்றது சீனா


 ஸ்டேட் டி பிரான்ஸில்  செவ்வாய்க்கிழமை நடந்த பெண்களுக்கான ஷாட் புட் F43 இறுதிப் போட்டியில் Zou Lijuan வென்று, தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்., 1984 ஆம் ஆண்டு பராலிம்பிக்ஸில் முதல் வெற்றிக்குப் பிறகு, சீனாவின் 200-வது பாரா தடகள தங்கத்தை ப் பெற்றது.

"எனக்காக ஒரு தங்கப் பதக்கம் வென்றதை விட இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று Zou கூறினார். "இந்த குறிப்பிடத்தக்க சாதனை, மாற்றுத்திறனாளிகள் மீதான அரசாங்கத்தின் அக்கறை மற்றும் விளையாட்டு வீரர்களின் விடாமுயற்சிக்கு காரணமாகும்." என்றார்.

சீன நீச்சல் அணி லா டிஃபென்ஸ் அரங்கில் 6 பந்தயங்களில் நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலங்களை வென்று பிரகாசித்தது. அவர்கள் ஆண்களுக்கான 50மீ பேக்ஸ்ட்ரோக் S5 இறுதிப் போட்டியில் பதக்கங்களை   வென்றது.

மெஸ்ஸியும் ரொனால்டோவும் இல்லாத ப‌லோன் டி'ஓர் பட்டியல்

ப‌லோன் டி'ஓர் விருதுக்கான  பெயர்ப்பட்டியலை பிரான்ஸ் உதைபந்தாட்டச் சங்கம்  கடந்த  புதன் கிழமை வெளியிட்டது. 2003 க்குப் பிறகு முதல் முறையாக   எட்டுமுறை ப‌லோன் டி'ஓர்  விருது பெற்ற மெஸ்ஸியும்  அவரது நீண்டகால போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் விருதுப் பட்டியலில் இடம் பெறவில்லை.  அதே சமயம் கரீம் பென்சிமா மற்றும் லூகா மோட்ரிக்  ஆகியோரும் பேர்வுப் பட்டியலில் இருந்து வெளியேற்றப்படனர்.

 ஜூட் பெல்லிங்ஹாம் ,ஹ‌ரி கேன்  உட்பட ஆறு இங்கிலந்து வீரர்கள்   பலோன் டி'ஓருக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.   21 வயதான  பெல்லிங்ஹாம் பேயர்ன் முனிச்சுடன் தனது முதல் சீசனில் 44 கோல்களை அடித்துள்ளார்.  தோழர்களான டெக்லான் ரைஸ், கோல் பால்மர், பில் ஃபோடன், புகாயோ சாகா  ஆகியோரும் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

கைலியன் எம்பாப்பே, அர்செனல் இரட்டையர்களான வில்லியம் சாலிபா மற்றும் மார்ட்டின் ஒடேகார்ட் ஆகியோருடன் பிரீமியர் லீக் ஆர்வத்தில் மான்செஸ்டர் சிட்டி போட்டியாளர்களான ரூபன் டயஸ் மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் விருதுப்பட்டியலில்  இணைந்துள்ளனர்.

ஆஸ்டன் வில்லா, அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் ஆகியோர் மீண்டும் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

 இங்கிலாந்து வீராங்கனையான வெண்கலம், ஜேம்ஸ் ,ஹெம்ப் பெண்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மான்செஸ்டர் சிட்டி முன்கள வீராங்கனையான கதீஜா ஷாவும் தனது அணி வீரர் யுய் ஹசேகாவாவுடன் இணைந்து ஒரு நட்சத்திரப் பிரச்சாரத்திற்குப் பிறகு 30 பேர் கொண்ட பட்டியலில் இருந்தார். ஆர்சனல் கோடைக்கால ஒப்பந்தமான மரியோனா கால்டென்டே மற்றும் செல்சி ஜோடியான ஸ்ஜோக் நஸ்கென் மற்றும் மைரா ரமிரெஸ் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டனர்.

பார்சிலோனா மிட்ஃபீல்டர் ஐடானா போன்மேட்டி கடந்த ஆண்டு விருதை வென்ற பிறகு , அவரது கிளப் சக வீரரான அலெக்ஸியா புட்டெல்லாஸைப் போலவே  விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

பராலிம்பிக்கில் ஒலித்த விரட் கோலி பெயர்

 பரிஸில் நடைபெறும் பராலிம்பிக்கில் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பெயர் ஒலித்திருக்கிறது.

இந்தியாவின் பட்மிண்டன் நட்சத்திரம் நித்தேஷ் குமார் விராட் கோலியை தன்னுடைய ரோல் மொடல் என்று அண்மையில் கூறி இருந்தார். இச்சூழலில் தான்  தங்கப்பதக்கத்திற்கான பட்மிண்டன் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பான இந்த போட்டியில் நித்தேஷ் குமார் தங்க பதக்கத்தை வென்று அசத்தினார்.

இந்த போட்டியின் போது தான் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பெயர் பரிஸில் ஒலித்திருக்கிறதுநித்தேஷ் குமார் விறுவிறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த போது போட்டியை வர்ணனை செய்யும் வர்ணனையாளர் விராட் கோலியை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.

அதில்,"அவரது ஹீரோ, விராட் கோலி, முன்னாள் இந்திய அணிக்கு கப்டனாக இருந்த அற்புதமான இந்திய கிரிக்கெட் வீரர். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விராட் கோலியை ஒரு விளையாட்டு ஹீரோவாகக் கொண்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன்," என்று வர்ணனையாளர் வீடியோவில் கூறினார். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

அரசுப் பாடசாலைகளில் மோசமான கல்வித் தரம் தமிழக அரசைச் சீண்டிய ஆளுநர் ரவி

 தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமான உறவு என்றைக்கும் கீரியும் பாம்பும்  போன்றதே. தமிழக அரசைச் சீண்டிப் பார்ப்பதில் ஆளுநர்  ரவிக்கு அலாதி இன்பம்.  இம்முறை தமழக அரசுப் பாடசாலைகளின்  கல்வியைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றஎண்ணி துணிகநிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளது; தேசிய சராசரியைவிட கீழே போய்விட்டது என்று தெரிவித்தார்.

 அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கல்விதான் மனிதர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார். தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார்.

துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில்தான் 60% மாணவர்கள் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது.

அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75% மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40% மாணவர்களால் அவர்களது பாடப்புத்தகங்களைக்கூட படிக்க முடியவில்லை. ஒரு ஆய்வு இதனை தெரிவிக்கிறது. கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கிறார்கள். இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது. சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். கல்வியில் ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவை நாம் மறுக்க முடியாது.

தமிழ்நாடு சந்தித்து வரும் மற்றொரு பெரிய பிரச்சனை போதைப் பொருள்கள். ஆனால், போதைப் பொருள்கள் பெரிய பிரச்சினை இல்லை என்று மறுக்கக்கூடிய நிலை இங்கே இருக்கிறது. கோகெய்ன், ஹெராயின், மெத் என ரசாயண போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகளில் இத்தகைய போதைப் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.

மாணவர்களை பெரிதாக கனவு காண வைக்க வேண்டும். இதற்கான பொறுப்பை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். பல மாணவர்களிடம் பெரிய கனவுகள் இல்லை. தங்கப் பதக்கம் வென்ற மாணவர்கள்கூட, சராசரி வேலை குறித்த கனவையே கொண்டிருக்கிறார். பலரின் கனவுகள் சிறியதாக உள்ளன. ஆலமரத்தின் விதையைப் போன்றவர்கள் மாணவர்கள். ஆனால், பலர் அதனை உணராமல் போய்விடுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

ஆளுநரின் இந்தப் பேச்சு உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்" என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், "மாநில பாடத்திட்டத்தின் தரம் கீழ் நிலையில் இருக்கிறது என்ற கருத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வாபஸ் பெற வேண்டும்." என்று பலரும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக, கணித மேதைகளாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். இந்த நிலையில், மாநில பாடத்திட்டம் தரம் குறைந்தது என்று எதன் அடிப்படையில் ஆளுநர் சொல்கிறார் என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

ஆளுநரின் பேச்சு, மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தனியார் நடத்தும் மத்திய பாடத் திட்டப் பள்ளிகளை ஊக்குவிக்கும் தந்திரச் செயலும் கூட என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது

மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது என்று எதன் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார்? மாநிலப் பாடத்திட்டத்தை எந்த பாடத்திட்டத்துடன் அவர் ஒப்பாய்வு செய்தார்? தரத்தை அளப்பதற்கு என்ன அளவுகோலை ஆளுநர் பயன்படுத்தினார்? மாநிலத்தின் தலைவராக இருக்கும் ஆளுநர், அவ்வாறு ஆய்வுகள் மேற்கொண்டிருந்தால், தான் ஆராய்ந்தறிந்தவற்றை மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறையிடம் தெரிவித்தாரா? ஒப்பீட்டு ஆய்வறிக்கையை மாநில அரசிடம் வழங்கி கருத்து கோரினாரா? போன்ற கேள்விகள்  ஆளுநரை நோக்கி எழுப்பப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி அடிப்படையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, நாட்டில் தரமான பாடத்திட்டம் என்று கல்வியாளர்களால் அது பாராட்டப்படுகிறது. மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும், "தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் தரமற்றது" என்ற வாதத்தை நிராகரித்தது. மாநில பாடத் திட்டத்தைத் தமிழக அரசு தொடர்ந்து செழுமைப்படுத்தி வருகிறது.

பல புதிய அம்சங்களை இணைத்து மாணவர்களுக்குப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடநூல்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்படியிருக்கும்போது, தமிழ்நாடு மாநில ஆசிரியர்களையும், மாணவர்களையும் சிறுமைப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று கல்வியாளர்கள் விமர்சிக்கிறார்கள்.

2021-ம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாகப் பிரச்னை வெடித்தது. பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "நாட்டில் தோன்றிய பல்வேறு பிரிவினை சித்தாந்தங்களுள் திராவிட சித்தாந்தமும் ஒன்று." என்று பேசியதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது

கட்சி பேதமின்றி தமிழ்கத்தின் தலைவர்கள் அனைவரும்  ஆளுநர் ரவிக்கு பதிலளித்துள்ளனர். தமிழக கல்வித்தரத்தையும் வடமநிலங்களின் கல்வித் தரத்தையும் ஒப்பிட்டு செய்யப்பட்ட பல ஆய்வுகளை முன்வைத்து ரவிக்கு பலரும் பதிலடி கொடுக்கின்றனர்.