Tuesday, May 7, 2013

வடக்கே போகும் மெயில் வரவேற்புரை வதிரி.சி.ரவீந்திரன்.


எழுத்தாளர்,ஊடகவியலாளர்,ஓவியர் திரு.சூரன்..ரவிவர்மா அவர்களின் வடக்கே போகும் மெயில் சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.

 இன்றைய விழாவில் இரு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.ஒன்று நூல் வெளியீடு. மற்றையது காந்தண்ணா என்று நான் அன்புடன் அழைக்கும் அமரர் எழுத்தாளர் ராஜ ஸ்ரீ காந்தனின் நினைவுப்பேருரை ஆகும்.
 இன்றைய விழாவுக்குத்தலைமை வகிக்கும் மூத்த ஊடகவியலாளர் திரு.வீ.தேவராஜ் அவர்களைப்பற்றி நான் அதிகம் சொல்லத்தேவை இல்லை. அவர் அனைவருடனும் மிக நன்றாகப்பழகும் மிகத்தெரிந்தமுகம். பத்திரிகையாளன் என்ற வகையில் நடு நிலை வகிப்பவர்.அமரர் திரு ராஜகோபால் அவர்களைச்சந்திக்கும் போதெல்லாம் இவரையும் நான் கண்டுள்ளேன். ரவிவர்மா, இவரது ஆசிரியர் குழாமில் பணியாற்றியவர்.அந்த வகையில் திரு. தேவராஜ் அவர்கள் விழாவுக்குத்தலைமை வகிப்பது மகிழ்வைத்தருகிறது.அவருடைய வரவு நல்வரவாகுக என வாழ்த்தி வரவேற்கிறேன்.

  வாழ்த்துரை ஆற்ற வந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரன் இங்கு வரவில்லை அவரையும் நான் வாழ்த்தி வரவேற்கிறேன்.

நூல் அறிமுக உரையை வழங்கும் என் அன்புக்குரிய பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள்கல்வியல் பீடத்தைச்சிறப்பித்துக்கொண்டிருப்பவர்.இலக்கியத்தை நன்கு கற்றவர்.இலக்கணத்தை பண்டிதர் வீரகத்தியிடம் படித்தவர்.எனவே அவரது நூல் அறிமுக உரையைக்கேட்பதற்கு நாம் ஆவலாக இருக்கிறோம்.பேராசிரியர் மா. கருணாநிதி அவர்களையும் வரவேற்பதில் நான் மகிழ்வடைகிறேன்.

 இன்றைவிழாவில் முதல் பிரதியைப் பெறுவதற்காக புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். இலக்கிய உலகுக்கு பெரும் மணியாகச்சேவையாற்றும் புரவலர் ஹாசிம் உமர் அவர்களை நான் வரவேற்பதில் பெரிதும் மகிழ்வடைகிறேன்.

   கருத்துரை ஆற்ற வந்திருக்கும் மூத்த ஆய்வாளர் ,விதந்துரையாளர் திரு.கே.எஸ். சிவகுமாரன் அவர்களையும் எல்லோரும் அறிவோம்.
எல்லாத்திறமைகளும் கொண்ட இவர் பெருமை இல்லாத மனிதர்.மூத்த பிரஜையான இவர் தன்னை சிவா என்று அழையுங்கள் என எல்லோரயும் கேட்டுக்கொள்வார்.சிவா அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்.

ஊடகத்துறையில் இளம் சிங்கம்.இலத்திரனியல் ஊடகத்துறையின் இளம் சிங்கம்.எதை எடுத்தாலும் மிக நேர்த்தியாகச்செய்யவல்லவர்.பல இலத்திரனியல் ஊடகங்களை வளர்த்துவிட்டவர்.திரு.வாமலோஷன் அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்.

  நூலாசிரியர் ரவிவர்மா அவர்களின் தந்தை திரு ஏகாம்பரம் அவர்கள் ஒரு சைவ சீலன்.தந்தையார் திரு சூரன் அவர்களின் வழிகாட்டலில் வளர்ந்தவர்.சிறந்த கவிஞர். சுதந்திரன் கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர்.சிறந்த மரபுக்கவிதையாளர்.மிகச்சிறந்த ஓவியர்.கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரி,அல்வாய் ஸ்ரீ லங்கா வித்தியாசாலை,ஆகியவற்றின் கிரீடத்தை வரைந்தவர். மாத்தளை பாக்கியம் வித்தியாசாலையின் கிரீடத்தையும் இவரே வடிவமைத்தார்.
 
  அவர் மிக அமைதியான மனிதர்.மிக மெதுவாகப்பேசுவார்.நகைச்சுவையாக்



கதைகூறுவார்.அமரர் திரு.ஏகாம்பரம் அவர்களின் புதல்வரான ரவிவர்மா அவர்கள் இன்னமும் ஒளி வீசிப்பிரகாசிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.

  வரவேற்புரையில் யாரையோ குறிப்பிடாது விட்டு விட்டேன் போலிருக்கிறது.நினைவுப்பேருரை ஆற்றவந்த நண்பன் மேமன் கவி அவர்கள், எந்த நிகழ்வாக இருந்தாலும் சிறப்பாக நிகழ்த்தவேண்டும் என்ற கொள்கை உடையவர்.கவிதைத்துறையில் சாதித்த இவர்,ஆய்வுரை,விமர்சனம் என மேன்மை பெற்றுள்ளார்.அப்படியான ஈழத்து எழுத்துக்களை நன்கறிந்த நண்பர்,கவிஞர் திரு மேமன் கவி அவர்களையும் நான் வரவேற்கிறேன்.ராஜ ஸ்ரீ காந்தனுடன் இணைந்துமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயலாற்றிய  திரு. மேமன் கவி அவர்கள் இன்றைய நினைவுப்பேருரையாற்றுவது மிகவும் பொருத்தமானது என்பதை நான் இங்கு கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.

  தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடிய திருமதி. திலகா மகேஸ்வரன் அவர்களையும் நான் வரவேற்கிறேன்.இன்று இன்றைய நிகழ்ச்சிகளைத்தொகுத்தளிக்கும் தென்றல் வானொலி பணிப்பாளரும் வானொலி மேடை நடிகருமான டவுட்டு கணேசன் திரு இராஜபுத்திரன் யோகராஜா அவர்களையும் வரவேற்று, இங்கு வந்துள்ள அனைவரையும் வருக ருக என வரவேற்கிறேன்.
 நன்றி.வணக்கம்.

Monday, May 6, 2013

வடக்கே போகும் மெயில் வாழ்த்துரை


இலங்கைப் பத்திரிகை உலகில் பல சாதனைகளைப் படைத்த ஏகாம்பரம் ரவிவர்மா கவிதை,சிறுகதை என்பவற்றிலும் முத்திரை பதித்துள்ளார். அரசியல்,இலக்கியம்,விளயாட்டு,ஆன்மீகம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர். தெளிவான‌ இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய இவரது எழுத்து நடை வாசகர்களின் மனதில் இலகுவாகப் பதிந்து விடும் தன்மை உள்ளது.
    பத்திரிகைத்துறை சார்ந்த பத்தி எழுத்து, விளையாட்டு, விவரணக்கட்டுரை ஆகியவற்றில் விருதுகளைப் பெற்றுள்ளார்.ஆங்கில,சிங்கள மொழிப்பத்திரிகையாளர்களுடன் போட்டியிட்டு விவரணக்கட்டுரையில் முதலிடம் பெற்றுள்ளார்.
    இவரது சிறுகதைகள் யதார்த்த பூர்வமானவை. மனிதவாழ்வின் அவலங்களையும் சோகங்களையும் மிக லாவகமாக மனதில் பதியும்படி சிறுகதைகளாக வடித்துள்ளார்.
     இவர் எழுதிய தமிழக அரசியல்,திரைக்குவராத சங்கதி,தடம்மாறிய தமிழ் படங்கள்,பாடல் பிறந்த கதை ஆகியன வாசகர்களிடம் வேற்பைப் பெற்றவை.தினக்குரல்,இடி,சுடர் ஒளி,ஆகியத்திரிகைகளில் ணி புரிந்தஇவர் மெட்ரோ நியூஸ் ஆசிரியபீடத்தில் ணி புரிகின்றார்.புதியவிஞர்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியபெருமை இவருக்குண்டு.இந்தச் சிறுகதைத் தொகுப்பைப் போன்று இவது ஏனையஆக்கங்களும் நூலாகவெளிவவேண்டும் எனவாழ்த்துகிறேன்.

                                                                                                               டுளுகிரியவிஜேரத்ன.

Friday, April 26, 2013

வடக்கேபோகும் மெயில் வெளியீட்டுவிழாவில்

இரா.யோகராஜன்{நிகழ்ச்சியைத்தொகுத்து வழிநடத்தினார்.}
.ஆர்.வி.லோஷன்{ரவிவர்மாவின் விளையாட்டுக்கட்டுரைகள் பற்றிய சிறப்பு விமர்சனம்}
கே.எஸ்.சிவகுமாரன்.{ரவிவர்மாவின் சினிமாக்கட்டுரைகள் பற்றிய சிறப்பு விமர்சனம்}
பேராசிரியர்.மா.கருணாநிதி{நூல் அறிமுக உரை}
மேமன் கவி{ ராஜ ஸ்ரீ காந்தன் நினைவுரை}
மூத்த ஊடகவியலாளர் வீ.தேவராஜ்{தலைமை உரை}
 
வதிரி.சி.ரவீந்திரன்.[வரவேற்புரை
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடியஆசிரியை  திருமதி.திலகா மகேஸ்வரன்
Add captionசூரன்.ஏ.ரவிவர்மாவின் வடக்கேபோகும் மெயில் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவும்  ராஜ ஸ்ரீ காந்தன் நினைவுரையும் கடந்த 20 ஆம் திகதி கொழும்புதமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.   
வடக்கேபோகும் மெயில் வெளியீட்டுவிழாவில்ராஜ ஸ்ரீ காந்தனின்  படத்துக்கு சட்டத்தரணி செ. பேரின்பநாயகம் மல‌ர்மாலை சூட்டுகிறார்.

Thursday, April 25, 2013

பரம்பரையாகத்தொடரும் எழுத்தூழியம்


இலக்கிய உலகில் பிரவேசித்த காலத்திலேயே எனக்கு இலங்கையில் வடமராட்சிப்பிரதேசத்துடன் நெருக்கமான உறவும் பாசமும் ஆரம்பமாகிவிட்டது. இன்று வரையில் நீடிக்கும் இந்தச்சொந்தம்எப்பொழுதும் முற்றுப்பெறாத தொடர்கதையாகத்தான் வளரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குண்டு.
இந்த உறவு நீடிப்பதற்கு நான் மட்டுமல்ல என்னை நேசிக்கும் அந்தப்பிரதேச கலைஇ இலக்கியவாதிகளும் ஊடகவியலாளர்களும்தான் காரணம். இந்த உறவு சங்கிலித்தொடர் போன்றது.
என்னுடன் சகோதரவாஞ்சையுடன் உறவாடும் தெணியான் எனக்கு அறிமுகப்படுத்தியவர்தான் ராஜஸ்ரீகாந்தன். அவரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் இந்த கதைக்கோவையின் படைப்பாளி ரவிவர்மா. புலம்பெயர்ந்து வந்தபின்பும் எனக்கு வடமராட்சியுடனான உறவு ஆரோக்கியமாகவே தொடருவதற்கு இலக்கியமும் இதழியலும் முக்கியமான காரணிகள்.
கடந்த 2012 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கைக்கு வந்தபொழுது வடமராட்சிக்கும் பயணித்தேன். அப்பொழுது எனக்கு இரண்டு தகவல்கள் கிடைத்தன. ஒன்று சகோதரர் தெணியானின் பிறந்த நாள்விழாவும் அவரது நூல்களின் வெளியீட்டு நிகழ்வும். மற்றது ரவிவர்மாவின் முதலாவது சிறுகதைத்தொகுப்பு.
கடந்த ஜனவரி 6 ஆம் திகதி அல்வாயில் ஜீவநதி இதழின் ஏற்பாட்டில் தெணியான் விழாவுக்கு தலைமைதாங்கிவிட்டு கொழும்பு திரும்பியதும் ரவிவர்மா வீட்டிற்கு விருந்துக்கு வந்தேன். அவரது குடும்பமும் எனது இனிய நண்பர் மறைந்த ராஜஸ்ரீகாந்தனின் குடும்பமும் அந்த விட்டில் என்னை உபசரித்து மகிழ்ந்தார்கள். எனக்கு அன்றைய தினம் மனநிறைவான நாள். பாசாங்குத்தனமற்ற உபசரிப்புகளை மறக்கவே முடியாது.
ரவிவர்மா தனது சிறுகதைத்தொகுதி பற்றி குறிப்பிட்டார். அதற்கு வாழ்த்துரை வேண்டும் எனவும் சொன்னார். அவர் ஒரு ஊடகவியலாளர் என்ற முகம் மாத்திரமே அதுவரையில் தெரியும். அவரும் சிறுகதை எழுதுகிறார் என்று சொன்னதும்இ  “இலக்கிய உலகில் படைப்பாளிகளாக இயங்குபவர்கள் பத்திரிகையாளர்களாகவும் நடமாடுவது அபூர்வம்எனச்சொன்னேன்.
ரவிவர்மா இலக்கியபிரதி ஆக்குநராக தனது எழுத்துலகப்பிரவேசத்தை ஆரம்பித்து ஊடகவியலாளரானாரா? அல்லது ஊடகவியலாளராக எழுதத்தொடங்கி படைப்பாளியானரா? என்ற ரிஷிமூலம் எனக்குத்தெரியாது.
ஆனால் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியால் பாராட்டப்பட்ட வடமராட்சி தேவரையாளி சமூகத்தின் குலதெய்வம் சூரனின் முதல் பேரன் என்ற ரிஷிமூலம் எனக்குத்தெரியும். ராஜஸ்ரீகாந்தன் 2004 இல் பதிப்பித்து வெளியிட்ட சூரன் சுயசரிதை நூலின் மூல எழுத்துப்பிரதி ரவிவர்மாவிடமே இருந்திருக்கிறது என்ற தகவலை ராஜஸ்ரீகாந்தன் வாயிலாக தெரிந்துகொள்கின்றோம்.
வடமராட்சியில் அடிநிலைமக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து போராடிய சூரனின் வாரிசு ரவிவர்மா என்பதனால் அந்த ஒளிவட்டத்தில் தன்னை பிரகாசித்துக்கொள்ள அவர் முயலவில்லை. இயல்பிலேயே இலக்கியநாட்டமும் பெற்றவர்களின் கவியாற்றலின் வழிகாட்டலும் ரவிவர்மாவை செதுக்கி செப்பனிட வைத்திருக்கின்றன.
ரவிவர்மாவின் மூத்த சந்ததி கவிபுனைவதில் ஆற்றல் மிக்கது. அவர்கள் கவிஞர்களாக மிளிர்ந்தார்கள். ரவிவர்மா சிறுகதைப்படைப்பாளியாகவும் ஊடகவியலாளராகவும் இரண்டு தளங்களில் பயணிக்கின்றார்.
ரவிவர்மா அமைதியான அதிர்ந்து பெசத்தெரியாத தன்னடக்கம் மிக்கவர். எனது நெஞ்சத்தக்கு அவர் நெருக்கமானதற்கும் அவரது இந்த இயல்புகள்தான் காரணமாக இருக்கவேண்டும். அத்தகைய ஒருவர் இலக்கியவாதியாக சிறுகதை படைப்பதும் ஊடகவியலாளராக செய்திகளை செப்பனிடுவதும் எனக்கு மிகுந்த மனநிறைவைத்தருகின்றன. உள்ளார்ந்த இலக்கிய ஆற்றல்மிக்கவர்களினால் செய்தி ஊடகத்தையும்  சிறப்பிக்கமுடியும். ரவிவர்மாவின் பின்புலம் மனிதஉரிமைக்காக போராடிய முற்போக்கு சக்திகளின் பாரம்பரியத்தில் உருவானது.
ரவிவர்மா தனது எழுத்தூழியத்தில் மென்மேலும் பணிகளைத்தொடர வாழ்த்துகின்றேன்.

முருகபூபதி
அவுஸ்திரேலியா

வடக்கே பொகும் மெயில் சிறுகதைத்தொகுப்புக்கு திரு.முருகபூபதி வழங்கிய வாழ்த்துரை

Wednesday, April 24, 2013

வடக்கேபோகும் மெயில் மங்கள விளக்கேற்றிய பிரமுகர்கள்

திரு.வீ.தனபாலசிங்கம்
தினக்குரல் பிரதம பொறுப்பாசிரியர்.
திருமதி.அன்னலட்சுமி ராஜதுரை
கலைக்கேசரி ஆசிரியை
கலாபூஷணம் செல்லத்தம்பி மாணிக்கவாசகர்.
கவிஞர்.திருமதி.மியூரியல் ஜெயானந்தசா மி
திரு.வீ.தேவராஜ்
மூத்தஊடகவியலாளர்
புரவலர் ஹாசிம் உமர்
சூரன்.ஏ.ரவிவர்மாவின் வடக்கேபோகும் மெயில் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவும்  ராஜ ஸ்ரீ காந்தன் நினைவுரையும் கடந்த 20 ஆம் திகதி கொழும்புதமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.  
திரு.தி.ஞானசேகரன்
ஞானம் ஆசிரியர்.