Saturday, June 8, 2019

இரட்டைத்தலைமைக்கு எதிராக அதிமுகவுக்குள் கலகக்குரல்


எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தை, ஜெயலலிதா கட்டுக்கோப்புடன் வழிநடத்தினார். ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின்னர் சசிகலாவின் முதல்வர் ஆசை, பன்னீர்ச்செல்வத்தின் தர்மயுத்தம், தினகரனின் சூழ்ச்சி, இரட்டைத் தலைமை ஆகியவற்றால் கழகத்தின் செல்வாக்கு குறைந்துள்ளது. ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வைக்குத் தவமிருந்தவர்கள்  அனைவரும் ஆளுக்கொருபக்கம் கட்சியை வழிநடத்த  முற்படுகின்றனர். எமிஜிஆர் உருவாக்கிய பொதுச்செயலாளர் பதவியை அகற்றிபோதே தலைமைப் போட்டி வெளிப்படையாகத் தெரிந்தது. பதவியைத் தக்கவைக்கவும், கட்சியைக் காப்பாற்றவும் எடப்பாடியும் பன்னீரும் ஒற்றுமையாகினர்.நாடாளுமன்ற சட்டசபை  இடைத்தேர்தல்  முடிவின் பின்னர்  கலகக்குரல் எழுந்துள்ளது.
மதுரை வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மதுரை  நகரத்தின்  முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பாவின் பேட்டி கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை பகிரங்கப்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைமைதான் வேண்டும். இரட்டைத்  தலைமை வேண்டாம் என ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வழிநடத்திய கட்சியை எடப்பாடியும் பன்னீரும் போட்டுடைத்துவிட்டார்கள் என ராஜன் செல்லப்பா  வேதனைப்படுகிறார்.

பன்னீர்ச்செல்வத்திடமிருந்து முதலமைச்சர் கைப்பற்றிய எடப்பாடி பழனிச்சாமி, கச்சிதமாகக் காய் நகர்த்தி கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். துணை முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளர் பதவிகளுடன் பன்னீர்ச்செல்வம் அதிருப்தியுடன் இருக்கிறார். எடப்பாடியை முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே தினகரனுடைய ஆதரவாளர்களின் வேண்டுகோள். அதற்காகவே 18 சட்டசபை உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டது. முதலமைச்சர் பதவி எடப்பாடியிடம் இருந்து பறிக்கப்பட்டால் அதனை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள்.

எடப்பாடியிடமிருந்து முதலமைச்சர் பதவியைப் பிடுங்குவதற்கு பன்னீர்ச்செல்வம் காத்துக்கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் பன்னீருக்கு ஆதரவாகவே இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் பன்னீரின் மகன் வெற்றி பெற்றார். சட்டமன்ற இடைத்தேர்தலில் பன்னீரின் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பன்னீர்ச்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், மறைந்த ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். ஒன்பது சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்லவில்லை. ஜெயலலிதா இருந்தபோது அம்மா அம்மா என காவடி தூக்கியவர்கள் ஜெயலலிதாவை மறந்து விட்டார்கள். ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்ல அந்த ஒன்பது பேரும் விரும்பியபோதும் யாரோ தடுத்துவிட்டதாக ராஜன் செல்லப்பா குண்டு ஒன்றைத் தூக்கிப்போட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும்,  அதன் கூட்டணிக்கட்சிகளின் உறுப்பினர்களும் கருணாநிதியின் சமாதிக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினர். இதனால் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றவர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்லாததால் அந்தக் கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ராஜன் செல்லப்பா தனி ஆளாகப் பேசி இருக்க முடியாது. அவருக்குப்பின்னால் இன்னும் சிலர்  இருக்கக்கூடும். ராஜன் செல்லப்பாவின் குரலின் பின்னர் எடப்பாடி எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து  மற்றைய குரல்கள்  ஒலிக்கும்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டத் தலைமைக்கு எதிராக ராஜன் செல்லப்பா முதலில் குரல் எழுப்பியுள்ளார்.அந்தக் குரலுக்கு ஆதரவாக மேலும் குரல்கள்  ஒலிக்குமா, அல்லது அந்தக்குரல் அடக்கப்பட்டுவிடுமா என்பதை எடப்பாடி பன்னீர்ச்செல்வத்தின் அடுத்த நகர்வு முடிவு செய்யும்.

இந்தியாவின் வெற்றியால் தென். ஆபிரிக்காவுக்கு சிக்கல்


 
தென்.ஆபிரிக்காவுக்கு எதிராக செளதாம்டனில் ரோஸ் பெளல் மைதானதில்  நடைபெற்ற போட்டியில் தென்.ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாடிய இந்தியா  ஆறு விக்கெற்களால் வெற்றி பெற்றது. இங்கிலாந்து பங்களாதேஷ் ஆகியவற்றுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த தென்.ஆபிரிக்கா மீண்டும் ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. பங்களாதேஷுக்கு எதிராக 300 ஓட்டங்கள் அடித்தும் தோல்வியடைந்த தென்.ஆபிரிக்கா அடுத்துவரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெறவேண்டிய நிலையில் உள்ளது.
நாணயச்சுழற்சியில்  வெற்றி பெற்ற தென். ஆபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடியது. ஐபிஎல் போட்டிகளில் நாணயச்சுழற்சியில்  தோல்வி உலகக்கிண்ணத்திலும் கோலியுடன் ஒட்டிக்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்.ஆபிரிக்கா ஒன்பது விக்கெற்களை இழந்து 227 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா,நான்கு விக்கெற்களை இழந்து 230 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.

ஆம்லா, 6 ஓட்டங்களுடனும், டிகொக் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் டூபிளெஸ்ஸிஸ்,  வேண்டர் டூசன் ஆகியோர்  இணைந்து நிதானமாக விளையாடினர். 10  ஓவர்களில் இரண்டு விக்கெற்களை இழந்த தென். ஆபிரிக்கா 34 ஓட்டங்கள் எடுத்தது. டூபிளெஸ்ஸிஸ் 38, வேண்டர் டூசன்31 டேவிட் மில்லர் 31,டுமினி 3, பெலுக்வாயோ 34 ஆகியோர் ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்  எட்டாவது விக்கெற்றில் இணைந்த ரபாடா, மொரிஸ் ஆகியோர் அணீயை கரைசேர்க்க முயற்சித்தனர். இந்திய சுழலில் சிக்கிய  தென்.ஆபிரிக்க 50 ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்து 227 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி 10 ஒவர்களில் 66 ஓட்டங்களை தென் ஆபிரிக்கா எடுத்தது. சஹால் நான்கு, பிரவீன்குமார், பும்ரா அகியோர் தலா இரண்டு,குல்தீப் ஜாதவ் ஆகியோர் ஒரு விக்கெற்றை வீழ்த்தினர்.

 தவான் எட்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவுடன் இணைந்த கோலி நிலைக்கவில்லை. 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா,ராகுல் ஜோடி இந்திய அணியை மீட்கப் போராடியது.  26 ஓட்டங்களில் ராகுல் ஆட்டமிழக்க 35 ஆவது ஓவரில் மூன்று விக்கெற்களை இழந்த இந்தியா 150 ஓட்டங்கள் எடுத்தது. ரோஹித்துடன் டோனி இணைந்தார். சிறப்பாக விளையாடிய டோனி தனது 23 ஆவது சதத்தைப் பதிவு செய்தார். டோனி 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 50 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்து 270 ஓட்டங்கள் எடுத்தது. ரோஹித் 122 ஓட்டங்களுடனும், பண்டையா 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
ரபாடா இரண்டு விக்கெற்களையும், பெலுக்வாயோ, மார்க்கம் ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர். சதம் அடித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

23 சதம் அடித்த ரோஹித் சர்மா, தென். ஆபிரிக்காவுக்கு எதிராக் மூன்று சதம் அடித்துள்ளார். உலகக்கிண்ணத்தில் இரண்டாவது சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
எதிரணியை விரட்டி 11 சதம் அடித்து முதலிடத்தில் இருக்கும் வீரர்களில் இலங்கை வீரர் டில்சானுடன் ரோஹித் இணைந்துள்ளார் கோலி 25, சச்சின் 17, கெய்ல்ஸ் 12 சதங்களுடன் அடுத்த இடங்களில் உள்ளனர்.

ரோஹித் சர்மா இரண்டு கச்களைப் பிடிக்கவில்லை. ரோஹித் கொடுத்த நான்கு கச்களை தென். ஆபிரிக்க வீரர்கள் தவறவிட்டனர்.

உலககிண்ணப் போட்டிகளில் 33 வீரர்களை ஆட்டமிழக்கச்செய்த விக்கெற் கீப்பர் வரிசையில் மெக்கலத்தை [32] முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தார் டோனி முதலிடத்தில் சங்கராரவும் [54], இரண்டாம் இடத்தில் கில்கிறிஸ்ட்டும்  [52] இருக்கின்றனர்

Thursday, June 6, 2019

முதலாவது வெற்றியைப் பெற்றது இலங்கை



கார்டிஃப் சோபியா கார்டனில்  நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 34 ஓட்டங்களால் இலங்கை  வெற்றி பெற்றது. கார்டிஃப் சோபியா கார்டனில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை வெற்றி பெற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. நாணயச்சுழற்சியில்  வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 36.5  ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 201 ஓட்டங்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் 32.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 152 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்பத்துடுப்பட்டக்காரர்களான. அணித்தலைவர் திமுது கருணாரத்தன், குசல் பெரேரா ஆகியோர்   களம் இறங்கினர். 30 ஓட்டங்களில் கருணாரத்ன ஆட்டமிழந்தார். குசல் பெரேராவுடன் திரிமானே இணைந்தார்இவர்கள் இருவரும் அணியைக் காப்பாற்றுவார்கள் என ரசிகர்கள் நம்பினர். திரிமானே 25 ஓட்டங்கலில் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் இலங்கையின் நிலை மிக மோசமாகியது. குசல் மெண்டிஸ் 2, ஏஞ்சலோ மத்யூஸ் 0, தனஞ்செய டி சில்வா 0, திஸர  பெரேரா 2, இஸுரு உடன 10  ஓட்டங்களில் ஆட்டமிழக்க இலங்கையின் நம்பிக்கை தகர்ந்தது.

குசல் பெரேரா தனது 12 ஆவது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார். 78 ஓட்டங்கள் எடுத்த குசல் பெரேரா, ரஷீட் கானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். சுரங்க லக்மால், மலிங்க ஆகியோர் கலத்தில் நின்றபோது மழை பெய்தது. 21 ஆவத் ஓவரில்  ஒரு விக்கெற்றை இழந்து 144 ஓட்டங்கள் எடுத்த இலங்கை, ஆறு விக்கெற்களை இழந்து 159 ஓட்டங்கள் எடுத்தது. மழக் காரணமாக 41 ஓவர்கள் விளையாட முடிவு செய்யப்பட்டது. 36.5 ஓவர்கலில் இலங்கை சகல விக்கெற்கலையும் இழந்து 201 ஓட்டங்கள் எடுத்தது. முகமது நபி நான்கு விக்கெற்களையும், ரஷீட் கான், ஸ்ரெட்ரன் ஆகியோர் தலா  இரண்டு விக்கெற்களையும், ஹமிட் ஹஸன் ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.

மழை காரணமாக டக் வேத் லூயிஸ் முறைப்படி 41 ஓவர்களில் 187 ஓட்டங்கள் எனும் வெற்றி  இலக்கு ஆப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது. முகமது ஷஸாத்,, ஹஸ்ரத்துல்லா ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். இலங்கையின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத ஆப்கானிஸ்தான் வீரர்கள் சொற்ப ஆட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

நஜிபுல்லா சட்ரன் 43 ஓட்டங்களும்,  ஷசாத் 30 ஓட்டங்களும், மொஹமது நபி 23 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். 32.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த ஆப்கானிஸ்தான் 152 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. பிரதீப்  நான்கு  விக்கெற்களையும், மலிங்க விக்கெற்களையும், உடன்,பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர். பிரதீப் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


   100 போட்டிகளில் விளையாடிய இலங்கை வீரர் லாஹிரு திரிமானே 25 ஓட்டங்கள் எடுத்தார். அவர் 6 ஓட்டங்கள் எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் 3000 ஒட்டங்களை நிறைவு செய்தார். அடித்தார்து, புதிய மைல்கல்லை கடந்தார்.
அஞ்சலோ மத்ஹ்டியூஸ் டக் அவுட் ஆனார். உலகக்கிண்ணப் போட்டியில் மத்தியூஸின் மூன்றாவது டக் அவுட்டாகும்தொடர்ந்து இரண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் டக் அவுட்டான நான்காவது வீரர்.

ஆப்கானின் சகலதுறை வீரர்  முகமது நபி 30 ஓட்டங்கள் கொடுத்து நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். உலகக்கிண்ணத் தொடரில்   ஆப்கானிஸ்தான் அணி சார்பாக இதுவே சிறந்த பந்துவீச்சு ஆகும். 2015 உலகக்கிண்ணத் தொடரில் ஷபூர் சத்ரான் 38 ஓட்டங்கள்  கொடுத்து நான்கு விக்கெற்கள் எடுத்ததே இருந்ததே முந்தைய சிறந்த பந்துவீச்சு ஆகும்.
இலங்கை பந்துவீச்சாளர் நுவான் பிரதீப்பும்   நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். அவர் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் நான்கு விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும், இந்த சாதனையை செய்யும் ஒன்பதாவது இலங்கை வீரர் ஆவார்.


 சர்வதேச போட்டியில் இலங்கை அணியின் வெற்றியில் சுமார் 687 நாட்களுக்குப் பின் பங்கேற்றுள்ளார் லசித் மலிங்கா. இந்த இடைவெளியில் மலிங்கா இலங்கை அணிக்காக 22 ஒருநாள் போட்டிகள், ஆறு ரி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஆனால், எதிலும் இலங்கை அணி வெற்றி பெறவில்லை. அந்த குறையை போக்கியுள்ளது இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றி. மேலும், மலிங்கா உலகக்கிண்ணத் தொடரில்  அதிக விக்கெற்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஐந்தாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். அவர் 24 உலகக்கிண்ணப் போட்டிகளில் 46 விக்கெற்களை வீழ்த்தியுள்ளார். மெக்கிராத் 71, முத்தையா முரளிதரன் 68, வாசிம் அக்ரம் 55, சமிந்தா வாஸ் 49 விக்கெற்களை வீழ்த்தி, முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளனர்.