Saturday, June 25, 2022

பொருளதார மீட்சிக்காக என்ன செய்யப்போகிறார் பிரதமர் ரணில்


 ஜனாதிபதி கோட்டவையும், அன்றைய  பிரதமர் மகிந்தவையும்  வீட்டுக்கும் அனுப்பும் போராட்டம் தீவிரமடைந்தபோது மகிந்தவுகுப் பதிலாக பிரதமரானவர் ரணில். ஐம்பது வருட அரசியல் அனுபவம் உள்ள ரணில், இலங்கையை  மீட்டெடுக்கப் போவதாக சிலர் கனவு கண்டனர்.  இலனகையின் இக்கட்டான நிலை பிரதமர் ரணிலுக்கு  மிக நன்றாகத் தெரியும். என்றாலும் பதவி ஆசை  கண்ணை மறைத்ததால், சக்கடத்தார் ஏறிய குதிரையில் ரணிலும் ஏறினார். 

பிரதமர் ரணில் ஏதாவது நல்ல வாக்கு சொல்வார் என எதிர் பார்த்த போது இப்போதைக்கு எதையும் சரிப்ப்டுத்த முடியாது என ரணில் திருவாய் மலர்ந்தருளினார். அது மட்டுமல்லாமல்  உலக நாடுகள் கைவிட்டு விட்டன என்ற ஏக்கத்தையும்  வெளிப்படுத்தினர்.  இந்தியா மட்டும்தான் இலங்கைகு உதவுகிறது.  ஏனைய நாடுகள் இலங்கையை அம்போஎன விட்டுவிட்டன.

ரணில் பிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து  இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் வறுமை மற்றும் பற்றாக்குறைகள் குறித்து மக்களுக்கு பலமுறை எச்சரித்தார். ரணில் ஏதாவது செய்து  மீட்பார் என எதிர்  பார்த்தபோது அப்பாவிப் பொது மகனுக்குத் தெரிந்த  உணமையை  தெரிந்த உண்மையைத்தான் அவரும் சொன்னார். 

  இந்தியா இலங்கைக்கு மிகப்பரிய உதவியைச் செய்கிறது. எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு $3.5 வரிக்கு மேல் கடன் வழங்குகிறது. எரிபொருள் வாங்குவதற்கு $500 மில்லியன் தனி கடன் வரி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் எதிர்பாராத ஆதாரங்களில் இருந்தும் உதவி வருகிறது. தமிழ்நாடு 40,000 தொன் அரிசி, 100 க்கும் மேற்பட்ட உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் 500 டன் பால் பவுடர்களை நன்கொடையாக வழங்குகிறது. தமிழகத்தின் ஆளும் திமுக கட்சி பத்து மில்லியன் ரூபாய் நன்கொடை அளித்துள்ளதுடன், அதன் எம்பிக்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்வர்  ஸ்டாலினின் நிதிக்கு இலங்கைக்கான உதவிக்காக உறுதியளித்துள்ளனர். அமெரிகாவும் , சினாவு இலங்கைக்கு உதவுவது தொடர்பாகாஅலோசனை செய்துள்ளன.

நாட்டின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது, பசித்திருப்பவர்களுக்கு உணவளிப்பது, முதலீட்டை ஊக்குவிப்பது, சுற்றுலா வர்த்தகம் மற்றும் விவசாயத்தை புத்துயிர் அளிப்பது மற்றும் பணத்தைப் பாய்ச்சுவது ஆகியவை விக்கிரமசிங்கவுக்கு சாத்தியமற்ற பணி. நாட்டின் முக்கியஸ்தர் என்ற முறையில், இது ஒரு சோதனையாக இருக்கப் போகிறது. அவருக்கு நல்ல விருப்பங்களை விட அதிகமாக தேவைப்படும்; இந்த கடினமான பணியை நிறைவேற்ற மக்களின் உறுதியான ஆதரவு அவருக்கு தேவை

தோல்வியடைந்த ஒரு நாட்டைக் கட்டி எழுப்ப தனி ஒருவனாக ரணில்  களம்  இறங்கிள்ளார்.  ஜனாதிபதியின்  ஒத்துழைப்பு  பிரதமருக்கு மிகவும் முக்கியம் இருஅவ்ரும் இணைந்து செயற்படும்போதுதான்  இலங்கையை  மீளக் கட்டி எழுப்ப முடியும்.இலங்கையின் மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவற்றின் முன்னோடியில்லாத விளைவுகளின் அடிப்பகுதி, அமெரிக்க டாலர்கள் மற்றும் வெளிநாட்டு நாணய கையிருப்பு பற்றாக்குறையால் இந்த நாடு தனது மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் நிலைநிறுத்துவதற்கு அவசரமாக தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது.

இலங்கையின் பொருளாதாரம் "முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது" மேலும் அது எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறையைத் தாண்டி மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை எச்சரித்தார், உடனடி உடன்படிக்கைக்கு வருவதற்கான அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். கூடுதல் கடன் வசதியைப் பெற IMF. 

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, இது தீவு நாடு முழுவதும் உணவு, மருந்து, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையைத் தூண்டியது. 

அரசாங்கத்தின் இதுவரை எடுக்கப்பட்ட தணிப்பு நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்திற்கு ஒரு புதுப்பிப்பை வழங்கிய நிதியமைச்சர் விக்ரமசிங்க, "முற்றிலும் சரிந்த" பொருளாதாரம் கொண்ட ஒரு நாட்டை, குறிப்பாக வெளிநாட்டு கையிருப்பில் ஆபத்தான முறையில் குறைவாக உள்ள ஒரு நாட்டை மீட்டெடுப்பது எளிதான காரியமல்ல.


தற்போது இலங்கையின் மாதாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய 550 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அவர் கூறினார்எவ்வாறாயினும்பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில்இதற்குத் தேவையான நிதியைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறோம்இதன் விளைவாகஎங்களின் டாலர் வருமானத்தின் அடிப்படையில் அதிகபட்ச எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்போம்எரிபொருளைத் தீர்ப்போம்தட்டுப்பாடு ஏற்பட அதிக நேரம் எடுக்கும்.எனவே எரிபொருளை பயன்படுத்தும் போது சிக்கனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

இலங்கையின் நிலையை விளக்கமாக வெளிபடுத்திவிட்டார் பிரதமர் ரணில்இலங்கையை மீட்க என்ன செயப்போகிறேன் என அவர் தெரிவிக்கவில்லைஇந்த கடினமான சூழலை வெற்றிகரமாகக் கடந்தா  வரலாற்றில் ரணிலின்  பெயர்  பொறிக்கப்படும்.

 

எடப்பாடியின் அரசியல் ஆசையால் தூக்கி எறியப்பட்ட பன்னீர்

ஜெயலலிதா சிறைக்குச்  சென்ற பின்னர் முதல்வரானவர் .பன்னீர்ச்செல்வம். சசிகலா சிறைக்குச் செல்லும்போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார். ஜெயலலிதா இறந்தபோது  முதல்வராக இருந்த பன்னீரை புறம் தள்ளி விட்டு எடப்பாடியை முதல்வராக்கினார் சசிகலாஇருவருமே மக்கள் ஆதரவுடன்  முதல்வராகவில்லை. ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியே வந்தபோது  பதவியைக் கொடுத்தவர் பன்னீர்ச்செல்வம். சசிகலா சிறையில் இருந்தபோது அவரைத் தூக்கி எறிந்தவர் எடப்பாடிஅந்த எடப்பாடியின் கையில் கட்சியைக் கொடுப்பதற்கு நிர்வாகிகள் பலர் கங்கணம் கட்டியுள்ளனர்.

இரு துருவங்களாக  இருந்த பன்னீரும், எடப்பாடியும் கட்சியின் எதிர் காலத்துக்காக இரட்டைத் தலைமையுடன்  கழகத்தை வழி நடத்தினார்கள். சசிக்லாவின் காலில் விழுந்து பதவியைப் பெற்ற எடப்பாடி அவரின் காலை வாரினார். இப்போது  பன்னீரை படுகுழியில் தள்ளிவிட்டுள்ளார்உள்ளுக்குள்  புகைந்தாலும் வெளியில் சுமுகமாகச் சென்றுகொண்டிருந்த இரட்டைத் தலைமையை ஒற்றைத் தலைமையாற்ற எடப்பாடி வகுத்த வியூகத்தால்  பொதுக் குழுக் கூட்டம் களேபரமானது.

பன்னீருடன் ஒட்டுறவாடியவர்கள் மெல்ல மெல்ல எடப்பாடியின் வலைக்குள் விழுந்தனர். அதன் பின்னணியில் சலுகைகளும் கைமாறல்களும் இருந்தன. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றால் எடப்பாடி பொதுச்செயலாளராகிவிடுவார். அதன் பின்னர்  எடப்பாடி கட்சியில் செல்லாக்காசாகிவிடுவார். ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீரின் கையெழுத்துக்கு பெரிய சக்தி உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி அகற்றப்பட்டால் பன்னீரின் எதிர்காலம் சூனியமாகிவிடும். பொதுக்குழுவைத் தடை செய்வதற்கு தன்னாலான முயற்சிகளை  பன்னீர் மேற்கொண்டார். தனியார் மண்டபத்தில் நடக்கும் கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என  பொலிஸார் கையை விரித்தனர். நீதிமன்றத்தீர்ப்பும் எடப்பாடிக்குச் சாதகமாஅந்து. உச்சநீதிமன்றம் நள்ளிரவு பன்னீருக்கு ஆறுதலைக் கொடுத்தது. முன் அறிவிக்கப்பட்ட  23 தீர்மானங்களை மட்டும்  நிறவேற்றலாம் என்ற தீர்ப்பு எடப்பாடியின் பொதுச்செயலாளர் ஆசைக்குத் தடை போட்டது.

பொதுக் குழுவுக்குச் சென்ற பன்னீர் அவமானப் படுத்தப்பட்டார். துரோகி,வெளியே போ போன்ற கோஷங்கள் அவருக்கு எதிராக முழங்கப்பட்டன.பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசைப்படும் எடப்பாடியார் , மூத்தவரான  பன்னீரைக் கண்டு கொள்ளவில்லை. பன்னீர் முதல்வராக  இருந்தபோது தலையில் தூக்கி கொண்டாடியவர்கள்  தலையை மறுபுறம் திருப்பினார்கள்.

பரபரப்பான சூழலில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே கூடிய பொதுக்குழு கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதே வேளையில்   ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என  பொதுக்குழு அறுதியிட்டு சொல்லியிருக்கிறது.

  ஒரே மேடையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  ஒருங்கிணைப்பாளர் .பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். இதுதான் இருவரும் ஒரே மேடையில்  இருக்கும் கடைசிக் கூட்டம்.  

பின்னர் பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு .பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். .பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். அதை தொடர்ந்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மானங்கள் அவையில் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் பொன்னையன் முன்மொழிய, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிவார் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் இந்த தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிப்பதாக ஆவேசமாக பேசினார். அப்போது அரங்கில் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கோஷம் எழுப்பினர்

தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினரும் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாகவும், ஒற்றை தலைமை தான் அனைவரின் எதிர்பார்ப்பு. ஒற்றை தலைமை தீர்மானத்தோடு எப்போது மீண்டும் பொதுக்குழு கூடுகிறதோ அப்போது தான் மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது.

தொடர்ந்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், இரட்டை தலைமையால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர் எனவும், கட்சியை வலுப்படுத்தும் விதமாக ஒற்றை தலைமை வழிநடத்த வழிவகை செய்ய வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் 2 ஆயிரம் பேர் அளித்த கடிதத்தை வாசித்ததோடு, அடுத்த பொதுக்குழு கூடும் தேதியை அவைத்தலைவர் அறிவிக்க வேண்டும் என கோரினார்.ஜூலை 11-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் நடை பெறும் என  அவைத் தலைவர் அறிவித்தார்.

 அவரை தொடந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முற்பட்டப்போது பன்னீரும், வைத்திலிங்கம் மேடையில் இருந்து எழுந்து புறப்பட்டதோடு மேடையில் வைத்தே இந்த பொதுக்குழு செல்லாது என வைத்திலிங்கம் பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்து .பன்னீர் செல்வம் மீது தண்ணீர்ப் போத்தல் வீசப்பட்டதா ல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரட்டை இலை வழக்கு பன்னீருக்குச் சாதகமாக உள்ளது. இரட்டை இலை முடக்கப்பட்டால் அண்னா திராவிட முன்னேற்றக்கழகம் பன்னீரின் தலைமையிலும், எடப்பாடியின் தலைமையிலும்  சின்னம் இல்லாமல் சுயேட்சையாகப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படலாம். ஜெலலிதாவும், ஜானகியும் பலப் பரீட்சை செய்தது போல பன்னீரும், எடப்பாடியும்   மோத வேண்டிய நிலை ஏற்படும். இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகள் பிளவுபடும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகஒன்றிணைந்து  செயற்பட வேண்டியவர்கள் தமக்குள் முட்டி  மோதுகிறார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் சவாரி  செய்யும் பாரதீய ஜனதாக் கட்சி தனது அரசியலை செய்வதற்குரிய வாய்ப்பாக இந்தப் பிரச்சினைஐ அணுகப்போகிறதா அல்லது  இருஅவ்ரையும் சமாதானப்படுத்தப் போகிறதா என்பது பெரும் புதிராக உள்ளது.

எடப்பாடியை  எதிர்க்கும்  பன்னீர், சசிகலாகட்சியில் இருந்து  வெளியேற்றப் பட்ட சுமார் ஒரு இலட்சம் அங்கத்தவர்கள்  இணைந்து  செயற்பட்டால் கழகத்தைக் கைப்பற்றும் சந்தர்ப்பம்  உள்ளது.

எடப்பாடியுடன்  நிர்பவர்களில் பலருக்கு அரசியல் வாழ்வளித்தவர் சசிகலா.   அவர்கள் சசிகலாவின்  பக்கம் திரும்பினால் எடப்பாடிக்கு ஆபத்தாகிவிடும்.

பொதுக் குழு  கூட்டத்தை ஒத்தி வைத்ததால் தப்பி விட்டதாக எடப்பாடி நினைகிறார். அவருக்கெதிரானவர்கள் பலமடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

Friday, June 24, 2022

எரிபொருள் வரிசையில் முட்டல் மோதல் மரணம்

உலகின் எங்கோ ஒரு மூலையில்  ஏதோ  ஒரு தேவைக்காக மக்கள் வரிசையில்   காத்திருந்ததை ஊடகத்தில் பார்த்து,கேட்டு,படித்த பின்னர் அனுதாபத்துடன் கடந்து சென்றோம். அப்படி ஒரு நிலை நமக்கு வரும் என கனவிலும் நாம் நினைத்துப் பார்த்திருக்கமாட்டோம்.இலங்கையின் பொருளாதாரத் தாக்கம் எம்மை அந்த வரிசையில் நிறுத்தியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின்  இமாலய விலை உயர்வு  மக்களை வாட்டி வதைக்கிறது. பொருட்களின் விலை அதிகரித்தது என அறிந்ததும் ஈவு இரக்கமின்றி உடனடியாகப் பொருட்களின் விலையை  வியாபாரிகள் உயர்த்துகிறார்கள். மண்ணெண்னெய், பெற்றோல்,டீசல், எரிவாயு என்பன தாரளமாகக் கிடைத்தன. இன்று அவை காண்பதர்கு அரிய பொருட்களாக மாறிவிட்டன.பார்த்துக் கொண்டிருக்க  பொருட்களின் விலை விலை அதிகரித்தது.

பெற்றோல்,டீசல், மண்ணெண்னெய்  என்பனவற்றுக்காக வரிசையில் நின்று இதுவரை 13 பேர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரிசையில் காத்திருக்கும் போது மரணமானவர்,  மூன்று நாட்கள் வரிசையில் காத்தீருந்து  மண்ணெண்ணெயுடன் வீட்டுக்கு வந்து பரணமானவர், வரிசையில் நிற்கும் போது வாகனம் மோதி மாரணமானவர் என இந்தப் பட்டியல் தொடர்கிறது. மரனங்கள்  ஒரு புறம்  மனழுத்தம், களைப்பு என்பனவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்பாதிக்கப்பட்டவர்கள்  இன்னொரு புறம்.

பெற்றோலுக்காக மோட்டார் சைக்கிளுடன் காத்திருப்பவர்களின் தொகை நாடளவிய நீரியில் மிக அதிகமாக உள்ளது.  ஏமாற்றம் விரக்தி என்பனவற்றால் நிதானம் இழப்பவர்களால் வாய்த்தர்க்கம் , கைகலப்பு என்பன ஆங்காங்கே உருவாகின்றன. வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியபோது  இராணுவ வீரரால் தாக்கப்பட்ட பொலிஸ்காரர் காயமடைந்தார். நாட்டையும், மக்களையும் பாதுகாக்கப் புறப்பட்டவர்கள் தமக்குள் மோதுகிறார்கள்.  அரச  உத்தியோகஸ்தர் எள்ளி நகையாடப்பட்டதால் கிளிநொச்சியில் பெண் உப அதிபர் ஒருவர்  போராட்டம் செய்தார்.  பணிக்கு வருவதானால் எரிபொருள் வேண்டும் என அரச உத்தியோகஸ்தர்கள்  ஆர்ப்பாட்டம் செய்தனர். முல்லைத்தீவில் அமைதியை நிலைநாட்ட தாக்குதல் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம்   எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவ சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இடையில் புகுந்தவர்களுக்கு எரிபொருள்  கொடுத்ததைத் தட்டிக் கேட்டபோது  தலைக் கவசத்தால் தாக்கப்பட்டார்.

கலேவெல   எரிபொருள் நிரப்பு நிலையம்   போர்க்களமாக மாறியிருந்ததாக தென் பகுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக எரிபொருளை பெற்று வரும் பிரதேச மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் மகுலுகஸ்வெவ பொலிஸாருக்கு பல முறைப்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில்23ம் திகதி பிற்பகல் எரிபொருள் விநியோகத்தின் போது குண்டர்கள் வந்து அப்பகுதி மக்களை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்காத வேளையில், பெண்கள் குழுவொன்று வந்து அந்தக் கும்பலைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.  பாதுகாப்புப் படையினரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மந்திகை எரிபொருள் நிலயத்தில் குழப்பம் பிரதேச  செயலர் தலையிட்டு தீர்த்து வைத்தார். திருகோணமலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்று கொள்வதற்கென பொதுமக்களுக்கு ஒருவரிசை, அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரு வரிசை, பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு ஒரு வரிசை என எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அரச உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் எவ்வாறு இப்படி எரிபொருளை விநியோகிக்க முடியும் என பொதுமக்கள் குழப்பம் செய்தனர். பொதுமக்களின் வரிசைகளை கவனத்திற்கொள்ளாது அரச உத்தியோகத்தர்கள் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம்  தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  வேலை செய்பவர்கலின் செல்வாகு காரணமாக  ஒரு சிலருக்கு தேவையான எரிபொருள் வழங்கப்படும்  குற்றச்சாட்டுகலும்  உள்ளன.  இது தொடர்பான வீடியோக்கள் பல உலவுகின்றன. அவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  எரிபொருளுகான மாற்றுவழிகள் பல உள்ளன. அவற்றை அரசாங்கம் கண்டுகொள்ள வில்லை என்ற கருத்தும்  உள்ளது.

எரிபொருள் சிக்கலைத் தீர்க்க உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டி இலங்கையில்  உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் நிறுவனர் ஒரு ஜேர்மன் பெண் ஆவார். சுமார் 27 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த உலா மாஷ்பெர்க், இந்நாட்டின் சுற்றுச்சூழல் , இயற்கை அழகின் மீது கொண்ட நேசம் காரணமாக உனவடுனாவை வாழத் தேர்ந்தெடுத்தார்.

புதிய படைப்புகளை உருவாக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பர்களின் உதவியுடன் 'சேவ் எவர் ஸ்ரீலங்கா' என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார். தனது வடிவமைப்பு குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

“புள்ளிவிவரங்களின்படி தற்போது இலங்கையில் 1.3 மில்லியன் முச்சக்கர வண்டிகள் உள்ளன. சூரிய ஆற்றல் மற்றும் பிற இயற்கையான புதுப்பிக்கத்தக்க பொருட்களில் அவற்றை இயக்குவதே எங்கள் முயற்சியாகும். அப்போது டீசல், பெட்ரோல் பயன்பாடு நூறு சதவீதம் குறைக்கப்படும்.அரசாங்கம் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும். முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் நிறைய பணத்தை மீதப்படுத்த முடியும். அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அதிக அளவில் இருக்கும்.

இதை 'சோலார் மல்லி' என்கிறோம். சோலார் பேனல்கள் தயாரிப்பு உட்பட மற்ற அனைத்து பராமரிப்பு பணிகளையும் நாங்கள் செய்கிறோம். இப்போது எரிபொருளின் விலையால் சராசரி மனிதர்கள் கார் அல்லது மூச்சக்கர வாகனம் ஓட்டுவது கடினம்.

எரிபொருள் விலை உயர்வினால் முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிக்கின்றன. இதற்கு நல்ல தீர்வு எங்களுடைய 'சோலா டக் டக் மல்லி'. இதற்கு எரிபொருள் தேவையில்லை. சூரிய சக்தியில் இயங்கும் இந்த முச்சக்கர வண்டி ஜனாதிபதி, பிரதமர், கைத்தொழில் அமைச்சர் மற்றும் முப்படைத் தளபதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சோலார் மல்லிக்கு வீதியில் பயணிக்க அனுமதியில்லை.

எனவே, சோலார் மல்லி தேசியத் திட்டத்திற்கு அரசின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சூரிய சக்தியில் இயங்கும் இந்த மூச்சக்கர வாகனத்திற்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளோம். எனினும், இதுவரை பெறப்படவில்லை. விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.