உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு தேவைக்காக மக்கள் வரிசையில் காத்திருந்ததை ஊடகத்தில் பார்த்து,கேட்டு,படித்த பின்னர் அனுதாபத்துடன் கடந்து சென்றோம். அப்படி ஒரு நிலை நமக்கு வரும் என கனவிலும் நாம் நினைத்துப் பார்த்திருக்கமாட்டோம்.இலங்கையின் பொருளாதாரத் தாக்கம் எம்மை அந்த வரிசையில் நிறுத்தியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் இமாலய விலை உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. பொருட்களின் விலை அதிகரித்தது
என அறிந்ததும் ஈவு இரக்கமின்றி உடனடியாகப் பொருட்களின் விலையை வியாபாரிகள் உயர்த்துகிறார்கள். மண்ணெண்னெய், பெற்றோல்,டீசல்,
எரிவாயு என்பன தாரளமாகக் கிடைத்தன. இன்று அவை காண்பதர்கு அரிய பொருட்களாக மாறிவிட்டன.பார்த்துக்
கொண்டிருக்க பொருட்களின் விலை விலை அதிகரித்தது.
பெற்றோல்,டீசல், மண்ணெண்னெய் என்பனவற்றுக்காக வரிசையில் நின்று இதுவரை 13 பேர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரிசையில் காத்திருக்கும் போது மரணமானவர், மூன்று நாட்கள் வரிசையில் காத்தீருந்து மண்ணெண்ணெயுடன் வீட்டுக்கு வந்து பரணமானவர், வரிசையில் நிற்கும் போது வாகனம் மோதி மாரணமானவர் என இந்தப் பட்டியல் தொடர்கிறது. மரனங்கள் ஒரு புறம் மனழுத்தம், களைப்பு என்பனவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்பாதிக்கப்பட்டவர்கள் இன்னொரு புறம்.
பெற்றோலுக்காக மோட்டார் சைக்கிளுடன் காத்திருப்பவர்களின்
தொகை நாடளவிய நீரியில் மிக அதிகமாக உள்ளது.
ஏமாற்றம் விரக்தி என்பனவற்றால் நிதானம் இழப்பவர்களால் வாய்த்தர்க்கம் , கைகலப்பு
என்பன ஆங்காங்கே உருவாகின்றன. வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியபோது இராணுவ வீரரால் தாக்கப்பட்ட பொலிஸ்காரர் காயமடைந்தார்.
நாட்டையும், மக்களையும் பாதுகாக்கப் புறப்பட்டவர்கள் தமக்குள் மோதுகிறார்கள். அரச உத்தியோகஸ்தர்
எள்ளி நகையாடப்பட்டதால் கிளிநொச்சியில் பெண் உப அதிபர் ஒருவர் போராட்டம் செய்தார். பணிக்கு வருவதானால் எரிபொருள் வேண்டும் என அரச உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். முல்லைத்தீவில் அமைதியை
நிலைநாட்ட தாக்குதல் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம்
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்கப்பட்ட
இளைஞர் மருத்துவ சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இடையில் புகுந்தவர்களுக்கு எரிபொருள் கொடுத்ததைத் தட்டிக் கேட்டபோது தலைக் கவசத்தால் தாக்கப்பட்டார்.
கலேவெல
எரிபொருள் நிரப்பு நிலையம் போர்க்களமாக
மாறியிருந்ததாக தென் பகுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக
எரிபொருளை பெற்று வரும் பிரதேச மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், எரிபொருள்
நிரப்பு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும்
மகுலுகஸ்வெவ பொலிஸாருக்கு பல முறைப்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில்23ம் திகதி பிற்பகல் எரிபொருள்
விநியோகத்தின் போது குண்டர்கள் வந்து அப்பகுதி மக்களை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்காத
வேளையில், பெண்கள் குழுவொன்று வந்து அந்தக் கும்பலைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர். பாதுகாப்புப் படையினரால் கட்டுப்படுத்த முடியாத
நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மந்திகை எரிபொருள் நிலயத்தில் குழப்பம் பிரதேச செயலர் தலையிட்டு தீர்த்து வைத்தார். திருகோணமலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்று கொள்வதற்கென பொதுமக்களுக்கு ஒருவரிசை, அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரு வரிசை, பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு ஒரு வரிசை என எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அரச உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் எவ்வாறு
இப்படி எரிபொருளை விநியோகிக்க முடியும் என பொதுமக்கள் குழப்பம் செய்தனர். பொதுமக்களின்
வரிசைகளை கவனத்திற்கொள்ளாது அரச உத்தியோகத்தர்கள் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்பவர்கலின் செல்வாகு காரணமாக ஒரு சிலருக்கு தேவையான எரிபொருள் வழங்கப்படும் குற்றச்சாட்டுகலும் உள்ளன.
இது தொடர்பான வீடியோக்கள் பல உலவுகின்றன. அவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு சட்ட
நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
எரிபொருளுகான மாற்றுவழிகள் பல உள்ளன. அவற்றை அரசாங்கம் கண்டுகொள்ள வில்லை என்ற
கருத்தும் உள்ளது.
எரிபொருள் சிக்கலைத் தீர்க்க உலகின் முதல் சூரிய
சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டி இலங்கையில்
உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் நிறுவனர் ஒரு ஜேர்மன் பெண் ஆவார். சுமார்
27 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த உலா மாஷ்பெர்க், இந்நாட்டின் சுற்றுச்சூழல்
, இயற்கை அழகின் மீது கொண்ட நேசம் காரணமாக உனவடுனாவை வாழத் தேர்ந்தெடுத்தார்.
புதிய படைப்புகளை உருவாக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
நண்பர்களின் உதவியுடன் 'சேவ் எவர் ஸ்ரீலங்கா' என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார். தனது
வடிவமைப்பு குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,
“புள்ளிவிவரங்களின்படி தற்போது இலங்கையில் 1.3 மில்லியன் முச்சக்கர வண்டிகள் உள்ளன. சூரிய ஆற்றல் மற்றும் பிற இயற்கையான புதுப்பிக்கத்தக்க பொருட்களில் அவற்றை இயக்குவதே எங்கள் முயற்சியாகும். அப்போது டீசல், பெட்ரோல் பயன்பாடு நூறு சதவீதம் குறைக்கப்படும்.அரசாங்கம் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும். முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் நிறைய பணத்தை மீதப்படுத்த முடியும். அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அதிக அளவில் இருக்கும்.
இதை 'சோலார் மல்லி' என்கிறோம். சோலார் பேனல்கள் தயாரிப்பு
உட்பட மற்ற அனைத்து பராமரிப்பு பணிகளையும் நாங்கள் செய்கிறோம். இப்போது எரிபொருளின்
விலையால் சராசரி மனிதர்கள் கார் அல்லது மூச்சக்கர வாகனம் ஓட்டுவது கடினம்.
எரிபொருள் விலை உயர்வினால் முச்சக்கர வண்டி கட்டணங்களும்
அதிகரிக்கின்றன. இதற்கு நல்ல தீர்வு எங்களுடைய 'சோலா டக் டக் மல்லி'. இதற்கு எரிபொருள்
தேவையில்லை. சூரிய சக்தியில் இயங்கும் இந்த முச்சக்கர வண்டி ஜனாதிபதி, பிரதமர், கைத்தொழில்
அமைச்சர் மற்றும் முப்படைத் தளபதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சோலார் மல்லிக்கு
வீதியில் பயணிக்க அனுமதியில்லை.
எனவே, சோலார் மல்லி தேசியத் திட்டத்திற்கு அரசின்
ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சூரிய சக்தியில் இயங்கும் இந்த மூச்சக்கர வாகனத்திற்கு
காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளோம். எனினும், இதுவரை பெறப்படவில்லை. விரைவில் கிடைக்கும்
என்று நம்புகிறேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment