பிரபல தொலைக்காட்சியில் ரகசிய கேமரா இருப்பது தெரியாமலேயே இந்திய கிரிக்கெட்டின் பின்புறத்தில் நடைபெறும் நிறைய குளறுபடியான உண்மைகளைஇந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா பேசியுள்ளது ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக முழுமையாக ஃபிட்டாகாத வீரர்கள் ஊசிகளை போட்டுக் கொண்டு விளையாடுவதும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இந்திய அணியின் தேர்வு பற்றி தமது வீட்டுக்கே வந்து பேசியதாகவும் அவர் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் உச்சகட்டமாக கங்குலி – விராட் கோலி ஆகியோரிடையே விரிசல் என்று கடந்த வருடம் வதந்திகளாக மட்டுமே வந்த செய்திகளை தற்போது அவரால் 100% உறுதியாகியுள்ளது.
தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் விராட்
கோலி, சவுரவ் கங்குலி இடையே நடந்த பிரச்சினைகள், வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொள்கிறார்கள்
என பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தார்.
உலகக் கிண்ணப்போட்டியில் சம்பியனகவில்லை என்பதற்காக விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி 2021 ஆம் ஆண்டு ரி20 உலக கிண்ணப் போட்டியுடன் ரி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தாலும் ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வதாக அறிவித்தார். ஆனால் அவரது தலைமையில் துபாயில் பாகிஸ்தானிடம் முதன்முறையாக தோற்று படுதோல்வியை சந்தித்ததால் அதிருப்தியடைந்த தேர்வு குழுவினர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 வெவ்வேறு கப்டன்கள் தேவையில்லை என்ற கண்ணோட்டத்தில் அவருடைய ஒருநாள் கப்டன் பதவியையும் பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது.
அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி வெற்றிகரமான அக்ப்டனாக இருந்த
போதிலும் டெஸ்ட் அணியின் கப்டன் பதவியை ராஜினாமா
செய்தார். அப்போது ரி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று விராட் கோலியிடம்
கேட்டுக் கொண்டதாக சௌரவ் கங்குலி தெரிவித்தார். ஆனால் யாரும் தன்னிடம் அவ்வாறு கேட்டுக்
கொள்ளவில்லை என்று மறுத்த விராட் கோலி மறுத்தார். இருப்பினும் உண்மையிலேயே சவுரவ் கங்குலி
அவ்வாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்த சேட்டன் சர்மா விராட் கோலி ஏன் பொய் பேசினார்
என்பது புரியவில்லை என்று கூறியிருந்தார்.
“அதிலும் குறிப்பாக தாம் இல்லையென்றால் இந்தியாவில் ஒட்டுமொத்த
கிரிக்கெட்டும் நின்று விடும் என்று விராட் கோலி நினைத்தார். ஆனால் அது எப்போதாவது
நடைபெறுமா? ஏனெனில் வரலாற்றில் நம்முடைய சில நட்சத்திர வீரர்கள் வந்து விளையாடி விட்டு
சென்றாலும் கிரிக்கெட் அதே நிலைமையில் தான் உள்ளது. எனவே விராட் கோலி அந்த சமயத்தில்
தலைவர் கங்குலிக்கு பதிலடி கொடுக்க முயற்சித்தார். அது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக விராட் கோலியின் செயல்பாடுகள் பிசிசிஐக்கு எதிராக ஒருவர் நடந்து கொள்வதற்கு
சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது”
“ஆனால் தலைவர் பிசிசிஐயை பிரதிபலிப்பவர் அல்லவா? அந்த சமயத்தில்
தவறு யார் மீது இருந்தாலும் அது காலப்போக்கில் தீர்மானிக்கப்படும். ஆனால் அதற்காக விராட்
கோலி பிசிசிஐயை தாக்கினார். இந்திய வீரர்கள் அதற்கு எதிராக இருந்தார்கள். ஏனெனில் அவ்வாறு
செய்தால் தங்களது இடம் பறி போய்விடும் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த இடத்தில்
தலைவர் மீது தவறு இருந்தாலும் நீங்கள் அவர்களுடைய பதவிக்கான மரியாதை கொடுக்க வேண்டும்”
“அதனால் ரோகித் சர்மா தாமாக ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்பேறறார். அந்த சமயத்தில் ஈகோ சண்டை நடந்தது. குறிப்பாக தமது கேப்டன்ஷிப் பறிபோவதற்கு கங்குலி காரணம் என்று நினைத்த விராட் கோலி அவருக்கு பாடத்தை புகட்ட நினைத்தார். ஆனால் வெவ்வேறு கேப்டன்கள் தேவையில்லை என்று தேர்வு குழுவினரான நாங்கள் தான் அந்த முடிவை எடுத்தோம். இருப்பினும் அவர் மீடியாவில் கங்குலி பற்றி அவ்வாறு பேசியது இறுதியில் அவருக்கே பிரச்சனையாக உருவெடுத்தது” என்று கூறினார்.
உடல் தகுதியை நிருபிப்பதற்காக வீரர்கள் ஊசிகளை செலுத்திக் கொள்வார்கள்
என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பரபரப்பு குற்றச்சாட்டை
கூறியுள்ளார்.
வீரர்கள் சிலர் 85 சதவீத உடல் தகுதியுடன்தான் இருப்பார்கள். மருத்துவ பரிசோதனையில் தோல்வி அடைந்தாலும் கூட, தாங்கள் விளையாட வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒழுங்காக குனியக் கூட தெரியாது. அவருக்கு ஒன்று அல்லது இரண்டு பெரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. மற்றபடி, 80 சதவீத உடல் தகுதியுடைய வீரர்கள், ஊசியை எடுத்துக் கொண்டு வந்து, தாங்கள் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகசொல்வார்கள். வலி மருந்தை வீரர்கள் சிலர் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அது போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் வரும் என்பதை வீரர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.
இதேபோன்று ஊசியை பயன்படுத்துவதால் போதை தடுப்பு நடவடிக்கையில் சிக்கிக் கொள்ள மாட்டோம் என்பதையும் அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். இந்திய வீரர்கள் சூப்பர் ஸ்டார்கள். அவர்களுக்கு டாக்டருக்கா பஞ்சம் ஏற்படும்? போன் செய்தால் டாக்டர்கள் வீட்டிற்கே வந்து ஊசி போட்டுவிட்டு செல்லப் போகிறார்கள். பெரும்பாலும் ஊசியை செலுத்தி உடல் தகுதியை நிரூபிக்கும் வீரர்களிடம் அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
ஆனால் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே பெரிய பிரச்னை, பிளவு
என்று ஏதும் இல்லை. எல்லாம் மீடியாக்களின் ஊகச் செய்திதான். ஓரிடத்தில் மிகப்பெரும்
2 நட்சத்திரங்கள் இருக்கும்போது சிறதளவு ஈகோ இருக்கத்தான் செய்யும். இது அமிதாப் பச்சனுக்கும்,
தர்மேந்திராவுக்கும் இடையில் இருக்கும் ஈகோவைப் போன்றது. எதுவெல்லாம் கிடையாதோ அதுவெல்லாம்
இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. உண்மையிலேயே விராட் கோலியும், ரோஹித் சர்மாவும்
ஒருவருக்கொருவர் உதவிகரமாக செயல்பட்டனர். விராட் கோலி ரன் எடுக்க திணறியபோது, ரோஹித்
ஆலோசனைகளை வழங்கினார். ரோஹித்தின் மோசமான தருணங்களில் கோலி உதவியாக இருந்தார்
இந்த விவகாரம் இந்திய கிறிக்கெற்றில் புயலைக் கிளப்பி உள்ளது.
No comments:
Post a Comment